Thursday, June 22, 2006

இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை.--சேனாதிராசா





(விகடனில் வெளிவந்திருக்கும் இச்செய்தியை தமிழினி தட்டச்சு இட்டதனை இங்கு மறுபதிப்பு செய்துள்ளேன். விகடனுக்கும்,தமிழினிக்கும் நன்றி. )

ஒவ்வொரு ஈழத்தமிழர் வீட்டு வாசலிலும் மரணம் காத்திருக்கிறது. அரசாங்கத்தின் அனுமதியுடன் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஈவிரக்கமின்றிப் புகுந்து கொலை செய்கிறது சிங்கள இராணுவம். அந்தத் துப்பாக்கிகளைப் போலவே அவற்றை ஏந்தியிருக்கிற மனிதர்களும் உணர்ச்சியற்றவர்களாகவே இருக்கிறார்கள். இல்லாமல்போனால் 7 வயதுக்குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்ய யாருக்காவது மனம் வருமா? இலங்கையில் அமைதி திரும்ப இன்னும் இப்படி எத்தனைகுழந்தைகளை நரபலி கேட்கப்போகிறார்களோ?சேனாதிராசா பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் துயரம் ததும்புகிறது. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும், அக்கட்சியின் பாராளுமன்றத் துணைத் தலைவருமான சேனாதிராசா தமிழகம் வந்திருந்தார். போர்ச்சூழலின் காரணமாக அகதிகளாகத் தமிழகம் வரும் இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான முன்னேற்பாடுகளுக்காக முகாமிட்டிருந்தவரைச் சந்தித்தோம்.


கே:மீண்டும் அதிக அளவில் ஈழத் தமிழர்கள் அகதிகளாகப் புலம்பெயரத் தொடங்கியிருக்கிறார்களே?

ப: 50 ஆண்டுகாலப் போராட்டத்துக்கான தீர்வு இன்னும் எம்மக்களுக்குக் கிடைக்கவில்லை. செழித்து வளர்கிற பூமி எங்களுடையது. விருந்தினர்களாக எங்கள் வீடுகளுக்கு வருபவர்களை வயிறு நிறைய, மனம் நிறைய உபசரித்து அனுப்புவோம். இன்று, ஏர் உழுத தடம் மாறி, பூட்ஸ்களின் தடங்களைச் சுமந்தபடி கேட்பாரற்றுக் கிடக்கின்றன எங்கள் வயல்கள். எம்மக்கள் ஒருவேளைச் சோற்றுக்கும் வழியின்றித் தஞ்சம் தேடி அகதிகளாகின்றனர். இதுவரை 30 000 பேருக்கும் அதிகமான மக்கள்புலம்பெயர்ந்துவிட்டதாகத் தெரிகிறது. ஆனால் சில ஆயிரம் பேர் மட்டும்தான் உயிருடன் வந்துசேர்ந்திருக்கிறார்கள். மற்றவர்கள் எங்கே என்று கவலைப்படுவதா? அல்லது இங்கே வந்து அகதிகள் என்ற பெயரில் அனாதைகளாகின்ற மக்களுக்காக அக்கறை கொள்வதா? மக்களைக் கொன்று ஒரே குழியில் போட்டுப் புதைக்கிற புதைகுழிகளைப் பற்றி இனி செய்திகள் நிறைய வரலாம். "செம்மணி" புதைகுழியைப் போல இப்போது "கோப்பாய்" புதைகுழியில் அழுகிய நிலையில் பலபிணங்களை எடுத்திருக்கிறார்கள். அவை வெகு சமீபமாகக் கொன்று குவிக்கப்பட்ட மக்களின் உடல்களாகத்தான் இருக்கும்.கடந்தவாரம்கூட மன்னார் மாவட்டம் வங்காலை என்னுமிடத்தில் ஒரு குடும்பத்தையே ஒட்டுமொத்தமாகக் கொலை செய்திருக்கிறார்கள். கணவன், மனைவியுடன் அவர்களின் 7 வயது மகனையும், 9 வயது மகளையும் கொன்று போட்டிருக்கிறார்கள். பிள்ளைகளின் எதிரிலேயே அந்தத்தாய் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டு, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இப்படி இரத்தம் உறையவைக்கும் இத்தகைய செய்திகளை இன்னும் எவ்வளவு கேட்க வேண்டியிருக்குமோ?


கே:சிங்களர் - தமிழர் இணைந்து கூட்டாட்சி அமைக்கிற வாய்ப்பே இனி இல்லையா?
ப: இலங்கைத் தமிழர்களிடம் இனி இழப்பதற்கு எதுவுமில்லை. ஐந்து வீடுகளைக்கூட பாண்டவர்களுக்குத் தரமுடியாது என்று சொன்ன கௌரவர்களைப்போல் இலங்கைத் தமிழ் மக்களை வஞ்சித்துள்ளது இலங்கை அரசு. இருதரப்புக்குமான நல்ல முடிவுகளை இனி அது எடுக்கும் என்ற நம்பிக்கையே எங்களுக்கு இல்லை. இனிமேல் தனிநாடுதான் எங்களுக்கான ஒரே தீர்வு. பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதுபோல் இலங்கையிடமிருந்து தமிழ்மக்கள் சுதந்திரம்வேண்டிப் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.


கே:பாரம்பரியம் மிக்க உங்கள் அரசியல் கட்சி புலிகளின் தலைமையை ஏற்றுக்கொள்ளுமா?
ப: எங்களுக்குத் தேவை விடுதலை. அதைத் தனித்தனியாக நின்று பெறமுடியாது. 2002 ஆம் ஆண்டு தேர்தலில் "விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து விடுதலைக்கான முயற்சியில் ஈடுபடுவோம், வாக்களியுங்கள்" என்று கேட்ட எங்கள் கட்சிக்குப் பெரும் வெற்றியைத் தந்து இணைந்து போராடும்படி ஆணை பிறப்பித்திருக்கிறார்கள் மக்கள்.


கே: போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் சுனாமியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்த மீட்புப்பணியும் நடைபெறாத சூழலில் போர் தேவையா?
ப: போர் தேவை என்று எந்த நாகரிகச் சமுகமும் சொல்லாது. அதிலும் இரண்டு தலைமுறைகளை யுத்தத்தால் தொலைத்த ஈழம் போரை எப்படி விரும்பும்? ஆனால் போர் எங்கள்மீது திணிக்கப்படுகிறது. தமிழர்கள் ஆயுதம் தரிப்பது யாரையும் தாக்குவதற்காக அல்ல, தற்காத்துக்கொள்ளவே! போரில்லாமல் தீர்வு கிடைத்தால் எங்களைவிட யாரும் அதிகம் மகிழமுடியாது.


கே: ஏன் அரசின்மீது கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லாமல் இருக்கிறீர்கள்?
ப:உயிருக்கும், உடைமைக்கும் எவ்வித உத்தரவாதமுமின்றி அகதியாக ஒருநாளேனும் வாழ்ந்துபாருங்கள்! எங்கள் வலி என்னவென்று உங்களுக்குப் புரியும்!


அன்புடன்...
சரவணன்.

Friday, June 16, 2006

அவளின் ஆதிக்கம்


என்ன உடை உடுத்தவேண்டும்,
என்ன பேச வேண்டும்
என ஆரம்பித்து என்னுடைய
ஒவ்வொரு நாளையும் தீர்மானிப்பது
என்னுள் இருக்கும்
அவளுடைய எண்ணங்கள்...


அன்புடன்...
சரவணன்.

Thursday, June 15, 2006

விளக்கம் கொடுக்கவும்

அன்புள்ள நண்பர்களே...
என் பதிவு மறுமொழியப்பட்ட இடுகைகள்
பகுதியில் வருவதில்லை.
நானும் பல முறை படிச்சு பாத்துட்டேன் .ஒண்ணும் புரியலே.
யாராவது தெரிந்தவர்கள் தயவு செய்து விளக்கவும்.



அன்புடன்...
சரவணன்.

Tuesday, June 13, 2006

அழகான ராட்சஷி


ஒரு கார்த்திகை இரவில் அகல்
விளக்குகளுக்கு நடுவே நிற்கும் உன்னைப்
பார்த்த பிறகு - உன்னைக் காதலிக்கவே
பயமாய் இருக்கிறது.
(நன்றி...தபு.சங்கர்)



அன்புடன்...
சரவணன்.

Monday, June 12, 2006

பாரதியின் அச்சமில்லை


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்றபோதினும்
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்
பிச்சை வாங்கி உண்ணு, வாழ்க்கை பெற்று விட்ட போதினும்
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்
கச்கணிந்த கொங்கை மாதர் கணகள் வீசு போதினும்
நச்சை வாயிலே கொணர்ந்து நணப ரூட்டு போதனும்
பச்சை நுனினையந்த வேற்படைகள் வந்த போதினும்
உச்சமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

மகாகவி பாரதியார்.


அன்புடன்...
சரவணன்.

Friday, June 09, 2006

பெங்களூரில் கைப்புள்ள.........

நாம் பாட்டுக்கு சென்னையில செவனென்னு பெஞ்சுல ஒக்காந்திருந்தேன்... திடீர்னு ஒரு PM மெயில் பண்ணி மச்சி ஒரு Project இருக்கு சேர்ந்துகிறியானு கேட்டான்.நானும் சரின்னு சொன்னது வம்பா போச்சு...அவன் பெங்களூர்ல ஒரு PMக்கு போனப்போட்டு இங்க ஒருத்தன் சிக்கியிருக்காண்டா வாடா அலம்பிரலாம்னான்.. அதுக்கு அவன் சொன்னான் அவன இங்க அனுப்புடா நான் பாத்துக்கறேன்னு... ஒரு volvo bus-ல ஏத்தி என்ன பெங்களூருக்கு அனுப்பினாங்க.. நானும் வெயில் காலத்துல குளு குளுன்னு இருக்குமேன்னு நம்ம்ம்ம்ம்பி... பெங்களூருக்கு வந்துட்டேன்...இங்க டீம்ல ஒரு 20 பேரும்மா... எல்லாப் பயலுகளும் மூச்சு தெணற தெணற வெலை செய்யறானுங்க..outlook um orkuttum மட்டுமே பார்த்த எனக்கு இது புதுசாஇருக்கு... என்னொட PL வெற அவரால எவ்வளவு முடியுமோ அவ்வளவு modules-சையும் எங்கிட்ட தள்ளி விட்டாரு... நானும் எவ்வளவு நேரம் தான் code எழுதுற மாதிரியே நடிக்கிறது?
(உங்களால முடியலைனு சொல்ல வேண்டியது தானே?)

நான் எப்பவும் வேலை செய்யாம மெயில் பண்ணிகிட்டே இருக்கிறதை பர்த்துட்டு என்னோட PL "எவ்வளவு வேல கொடுத்தாலும் இவன் மெயில் பண்ணிகிட்டே இருக்கான் இவன் ரெம்ப நல்லவன்"னு சொல்லிட்டாருமா..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்



அன்புடன்...
சரவணன்.

Tuesday, June 06, 2006

உன்னை நினைவுபடுத்துபவை


அழகான பொருட்களெல்லாம் உன்னை
நினைவுபடுத்துகின்றன.உன்னை
நினைவுபடுத்துகிற எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன...
(நன்றி... தபு.சங்கர்)


அன்புடன்...
சரவணன்.

Sunday, June 04, 2006

ஆனாலும் மகிழ்ச்சி...




அவளுக்கு என்னை பிடிக்கவில்லையாம்....
ஆனாலும் மகிழ்ச்சி....
அவள் வாயிலிருந்து எனது பெயர்...


அன்புடன்...
சரவணன்.

Saturday, June 03, 2006

கண்ணாடியின் ஏக்கம்....



அனைவரும் உன்னை பார்த்து
அலங்கரிக்கும் போது
நீ மட்டும் காத்திருக்கிறாய்
அவள் வருகைக்காக.....
உன்னை அலங்கரித்துக் கொள்ள....


அன்புடன்...
சரவணன்.

Friday, June 02, 2006

அப்பாவின் நம்பிக்கை...



அடர்ந்த இரவின் நடுவே
அனைவரும் உறங்கியபின்...
வெகு நேரம் விழித்திருந்து
யாரும் அறியாவண்ணம்
உன்னிடம் தொலைபேசுவதில்
கரைவது என் BALANCE மட்டுமல்ல
என் தந்தையின் நம்பிக்கையும் தான்....

Thursday, June 01, 2006

முத்தமிட்ட கை....


நீ முத்தமிட்டுவிட்ட கையை
வைத்துக்கொண்டு ரெம்பவும்
அவஸ்தைப்படுகிறென்.எதையுமே தொட
மறுக்கிறது கை.'அப்படியெ புதுசாக
வைத்துக் கொள்; சின்ன குழந்தை தன்
கைக்குள் பத்திரமாய் பதுங்க வைத்துக்
கொள்கிற மிட்டாய் மாதிரி என்னையும்
வைத்துக்கொள்..." என்கிறது அந்தக் கை.

(நன்றி.. தபு.சங்கர்)


அன்புடன்...
சரவணன்.

பேச ஆசை...




உன்னிடம் பேச எவ்வளவு
ஆசைபடுகிறனோ அவ்வளவு ஆசை
உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேசவேண்டும் என்பதில்.........

(நன்றி... தபு.சங்கர்)

அன்புடன்...

சரவணன்