Sunday, July 30, 2006

தெரிந்தால் சொல்லுங்களேன்...

நண்பர்களே... எனக்கு ஒரு பழைய்ய்ய்ய்ய்ய்ய பாடல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் தெரிந்தவர்கள் உதவுங்கள்...
அந்தப் பாடல் தொகுப்பின் தலைப்பு,மற்றும் அதன் ஆசிரியர் யார் என்ற தகவல்கள் எனக்கு தெரியாது(ஆஹா.. காதலிக்கும் நாயகியின் பெயர்,ஊர் தெரியாமல் தேடுகின்ற நாயகன் கதை மாதிரில இருக்கு!!!)
ஆனால் அந்த பாடலின் சில கருத்துக்கள் மட்டும் குத்துமதிப்பாக நினைவில் உள்ளன,அது என்ன வென்றால்....

அந்த பாடலின் ஆசிரியர் மனிதனின் நீண்ட ஆயுளுக்கு ஒரு கணக்கு சொல்லி இருப்பார்,
அதாவது

வாரத்திற்க்கோ (அ) மாதத்திற்க்கோ இருமுறை தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும்,(மற்ற நாட்களில் குளிக்க வேண்டாமா??)

வாரம் ஒருமுறை உறவு கொள்ள வேண்டும்,(கண்டிப்பாக திருமணமானவர்கள் மட்டும்),

ஆறு மாதத்திற்க்கு ஒரு முறையோ. அல்லது வருடத்திற்க்கு ஒரு முறையோ பேதிக்கு(வயிற்றுப் போக்கு)மருந்து சாப்பிட வேண்டும்,

என்று படித்ததாக நியாபகம்,ஆனால் கணக்கு எனக்கு சரியாக தெரியவில்லை,இதைப்பற்றி உங்களுக்கும் நியாபகம் இருந்தால் சொல்லவும் , அல்லது முழுதும் தெரிந்தால் பாடலுடன் கூடிய விளக்கத்துடன் தெரிவிக்கவும்,

எனது இந்த பதிவு உடல் நலம் பற்றியது (மருத்துவர்கள் கவனிக்க...)
அதுவும் பழைய பாடல் (பாடத்தெரிந்த புலவர்கள் கவனிக்க...)

நன்றி..



அன்புடன்...
சரவணன்.

58 பின்னூட்டங்கள்:-:

said...

நான் சொல்லாம் என்று நினைத்தேன். நீ வேறு ஒருவரிடம் இருந்து பதிலை எதிர்பார்ப்பதால் நான் ஒதுங்கிக்குறேன்.
:)

said...

அய்யய்யோ...நாகையாரே... இதென்ன பிள்ளையார் புடிக்க போய் சிங்கம்(அப்பாடி... ஒரு வழியா சமாதானப்படுத்தியாச்சு) ஆன கதையல்ல இருக்கு,


அவருக்கு தெரிந்திருக்கலாம்.. என்று தான் சொன்ன்னேன், மற்றவர்களுக்கு தெரியாது என்று சொல்லவே இல்லை
உங்களை ஒதுக்குவதற்க்கள்ள இந்த பதிவு உதவி பெறவே...
தெரிந்தால் தயவுசெய்து சொல்லுங்கள்,


அன்புடன்...
சரவணன்.

said...

//அவரை குறிப்பிட்டு சொன்னதற்க்கு யாரும் "கோவி"த்துக் கொள்ள வேண்டாம்,உங்களுக்குத் தெரிந்தாலும் சொல்லுங்கள்//
கோவித்துக் கொள்பவர் யாருங்கோ !

said...

என்னதான் இருந்தாலும் அவர் உங்களின் "பின்னூட்ட பங்காளி" எனவே தான் சும்மா டமாசுக்கு சொன்னேன்,(அப்பாடி தப்பிச்சாச்சு..)
அதெல்லாம் சரி எனக்கான பதில் எங்கே கோவி?


அன்புடன்...
சரவணன்.

said...

//என்னதான் இருந்தாலும் அவர் உங்களின் "பின்னூட்ட பங்காளி" எனவே தான் சும்மா டமாசுக்கு சொன்னேன்,(அப்பாடி தப்பிச்சாச்சு..)
அதெல்லாம் சரி எனக்கான பதில் எங்கே கோவி?//
உண்மைதான்.... சொல்லியிருக்கிறீர்கள் கோவி க்கவில்லை.

எனக்கு பதில் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லியிருக்கமாட்டேனா ... குரு நாதருக்கு தெரிந்திருக்கலாம் :))

said...

தெரீலியேப்பாஆஆஆஆ தெரீலியேஏஏஏஏ.......... :)

said...

//எனக்கு பதில் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லியிருக்கமாட்டேனா...//

பரவாயில்லைகோவி...
என்னுடன் சேர்ந்து நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்..

//குரு நாதருக்கு தெரிந்திருக்கலாம் :)) //

பார்க்கலாம், ஆமா எங்கே அவர்..? எதாவது "அறுவை" சிகிச்சையில் இருப்பாரோ...
பாவம் யார் சிக்கியதோ...


அன்புடன்...
சரவணன்

said...

//தெரீலியேப்பாஆஆஆஆ தெரீலியேஏஏஏஏ.......... :)//

சரி சரி பரவா இல்லை, அதுக்கு எதுக்கு இம்பூட்டு பெரிய இழுவை...
யாராவது சொல்லுவாங்கள்ள அப்போ தெரிஞ்சிக்கிருவோம்...


அன்புடன்...
சரவணன்.

said...

சரி சரி அப்பவே தெரிஞ்சுக்கலாம் :0

said...

is it Thirumoolar's song?

said...

//பார்க்கலாம், ஆமா எங்கே அவர்..? எதாவது "அறுவை" சிகிச்சையில் இருப்பாரோ...
பாவம் யார் சிக்கியதோ...//

பாவங்க அவுரு ... இப்படி போட்டு தாக்குறீங்க ... கவலை இல்லை ... அவர் எதையும் தாங்கும் இதயம் கொண்ட வைத்தியநாதர்.

அவர் 'அறுவை' சிகிச்சை செய்பவர்தான். 'அறுவை வைத்து' அதாவது அறுமுகன் பெயரில் ... சித்தம் தெளியவைக்கும் சித்தவைத்தியம்.

எஸ்கே அவர்களே, நல்லா சமாளிச்சிட்டேன் :)

said...

எங்கேயோ கேட்ட பாடல்..

ஆனா ஞாபகம் இல்ல :((

அது சரி நண்பா..

இந்த லிஸ்ட்-ல எதை செய்யறதுக்கு இப்போ டைம் பார்த்துட்டு இருக்க??

said...

கப்பி பய said...
//எங்கேயோ கேட்ட பாடல்..
ஆனா ஞாபகம் இல்ல :((//

நமக்கும் அதே தான்,

//இந்த லிஸ்ட்-ல எதை செய்யறதுக்கு இப்போ டைம் பார்த்துட்டு இருக்க?? //

சும்மா கப்பித்தனமா பேசாதீம் ஓய்...
திடீர்னு நியாபகம் வந்துச்சு அதான் தெரிஞ்சிக்கிலாமேனு கேட்டேனுங்க...



அன்புடன்...
சரவணன்.

said...

கோவி.கண்ணன் [GK] said…
//அவர் 'அறுவை' சிகிச்சை செய்பவர்தான். 'அறுவை வைத்து' அதாவது அறுமுகன் பெயரில் ... சித்தம் தெளியவைக்கும் சித்தவைத்தியம்.//

ஓ...சித்த வைத்தியமா நான் கூட
மத்த வைத்தியம்(ஆங்கிலம்)என்று நினைத்தேன்,


அன்புடன்...
சரவணன்.

said...

//ஓ...சித்த வைத்தியமா நான் கூட
மத்த வைத்தியம் என்று நினைத்தேன்,//
மத்த வைத்தியம் தான் வலைப்பதிவில் 'சித்த' வைத்தியம்.

ஆங் எண்ணையைப் பற்றி இரண்டு பாடல்கள் நினைவு வருகிறது
சின்னத் தம்பி படத்தில் - அட உச்சந்தல உச்சியில் உள்ளிருக்கும் புத்தியில

ஆயுத பூஜை படத்தில் ரோஜா படத்தில் படும் பாடல் ... எண்ணைய வச்சி நல்ல தேச்சிடு மெல்ல
:) சத்தியம நீங்கள் கேட்ட பாட்டு இது அல்ல ஆனால் நீங்கள் கெட்ட பாட்டா என்று தெரியவில்லை :)

said...

Hi, greeting from malaysia. Visit my site please. I am glad to see you there.

said...

Rishi said…
//is it Thirumoolar's song? //

எனக்குத் தெரியவில்லை நண்பரே...
யாராவது விசயம் தெரிந்தவர்கள் சொல்லுவார்கள் என்று நானும் காத்திருக்கின்றேன்...



அன்புடன்...
சரவணன்.

said...

கோவி.கண்ணன் [GK] said... //மத்த வைத்தியம் தான் வலைப்பதிவில் 'சித்த' வைத்தியம்//

எனக்கு சித்தம் கலங்குகிறது.(யாருங்க அது, இனிமேல் தான் கலங்கனுமானு கலாய்க்கிறது..)

//சத்தியம நீங்கள் கேட்ட பாட்டு இது அல்ல ஆனால் நீங்கள் கெட்ட பாட்டா என்று தெரியவில்லை :) //

நிச்சயமாக இந்தப் பாடலைக் கேட்டால் கெட்டுத்தான் விடுவேன்,சொல்லுவதைப் பார்த்தால் நீங்கள் பல இடங்களில்(???)எண்ணை தேய்த்து
பட்டது போல் தெரிகிறதே...



அன்புடன்...
சரவணன்.

said...

நண்பர்களே...
நான் ஒரு செய்யுள் டைப் பாடல் கேட்டு ரெண்டு நாள் ஆச்சு,
யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்(சொல்லவில்லை என்றால் கண்டிப்பாக விட மாட்டேன், தினமும் வந்து நினைவு படுத்தவாவது ஒரு பின்னூட்டம் நானே இடுவேன்),

நேற்று பார்வை இடாதவர்களுக்காக இந்த பின்னூட்டம், விடை தெரியும் வரை இந்த"பின்னூட்டப் போராட்டம்" தொடரும் என்று எச்சரிகின்றேன்.


அன்புடன்...
சரவணன்.

said...

யாரது ?? இப்படி அறிவுப்பசியோடு அலைந்து கொண்டிருப்பது ? என்னா ஒரு சந்தேகம் ? என்ன ஒரு ஆர்வம் !! கண்ணே நீயும் ஒரு வருத்தப்படாத வாலிபன் என நிரூபித்துவிட்டாயடா !! :)))

ஆமா எதுக்குங்ண்ணா உங்களுக்கு அந்தப் பாட்டு?? ;))

ஆயினும் உங்கள் ஆர்வம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது !! :))))))

said...

ஜொள்ளுப்பாண்டி said...

//யாரது ??//

அண்ணா.. நான்தானுங்ன்னனோ...


//இப்படி அறிவுப்பசியோடு அலைந்து கொண்டிருப்பது ? என்னா ஒரு சந்தேகம் ? என்ன ஒரு ஆர்வம் !!///

ஹி ஹி.. இருக்கட்டும், இருக்கட்டும்,

//கண்ணே நீயும் ஒரு வருத்தப்படாத வாலிபன் என நிரூபித்துவிட்டாயடா !! :)))//

ரெம்ப டேங்ஸ்ங்னா...(யோவ் "எழுத்துப்பிழை" வந்துடாத)


//ஆமா எதுக்குங்ண்ணா உங்களுக்கு அந்தப் பாட்டு?? ;))//

பெருசா காரணமெல்லாம் ஒன்னுமில்லைன்கோ,சும்மா தெரிஞ்சிக்கலாமேனுதான்,

//ஆயினும் உங்கள் ஆர்வம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது !! :))))))//

பார்த்துங்க பாண்டி, ரெம்ப சிலித்துக்கப் போகுது....


அன்புடன்...
சரவணன்.

said...

enakku onRum ninaivukku varavillai.
Naagai siva, therindhaal sollunggaLEn!
odhunggellaam vENdaam!

[Surathaa sodhappal this morning!!

said...

என்னக் கொடுமை சரவணா இது?
இன்னும் யாரும் சொல்லலையா??

said...

SK said... //enakku onRum ninaivukku varavillai. //

நீங்கள் சொல்லுவீர்கள் என்று, கோவி, உட்பட அனைவரும் காத்திருந்தோம்,
பரவாயில்லை SK,
வாருங்கள் காத்திருப்போம், (என்ன திடீர்னு தங்கிலீஸ்)

//Naagai siva, therindhaal sollunggaLEn!
odhunggellaam vENdaam!
//

நாகையாரே... நீர் மட்டும் தான் தெரியும் என்று கூறினீர்,இதோ SK-யும் உங்களை அழைக்கிறார், தெரிந்தால் சொல்லுங்களேன்,


அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

இப்பாடல் கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்து மதத்தில் " குறிப்பிட்டுள்ளார். எத்தனையாம் பாகம் என்று சரியாகச் சொல்லமுடியவில்லை.
யோகன் பாரிஸ்

said...

கப்பி பய said...
//என்னக் கொடுமை சரவணா இது?
இன்னும் யாரும் சொல்லலையா?? //

உண்மை தான் கப்பி ..
கொடுமையாகத்தான் இருக்கின்றது, தமிழ் புலமை பெற்றோர் உள்ள இந்த அவையில் என் சந்தேகத்தை நீக்க எவருமில்லையா..?
(பழைய பாடல் இல்லையா.. கொஞ்சம் ஹோம் ஒர்க் பார்த்துவிட்டு யாராவது சொல்லக் கூடும்)
நிச்சயம் யாரேனும் சொல்லுவார்கள் என்ற நம்பிக்கையில் நான் இருகின்றேன், இருப்போம்,


அன்புடன்...
சரவணன்.

said...

johan -paris said... //இப்பாடல் கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்து மதத்தில் " குறிப்பிட்டுள்ளார். எத்தனையாம் பாகம் என்று சரியாகச் சொல்லமுடியவில்லை.
யோகன் பாரிஸ்//

இருக்கலாம் , ஒரு நண்பர் திருமூலர் பாடல் என்றும் சொல்லி இருக்கின்றார்,எனக்கும் அப்படித் தான் தோன்றுகிறது,

ஒரு வேளை கண்ணதாசன் இந்த செய்யுளை தன் "அர்த்தமுள்ள இந்து மதத்தில் "மேற்கோள் காட்டியிருக்கலாம்,ஆனால் நான் கேட்பது அந்த பாடலின் உண்மையான ஆசிரியரைப் பற்றியது,எனக்கு ஏதோ பழைய காலத்துப் பாடல்( சங்க காலத்துப் பாடல்) என்றே தோன்றுகிறது,
விடை கிடைக்கும் வரை காத்திருப்போம்,(வி.கி.வ.கா-சங்கம் எதாவது ஆரம்பிக்கனுமா...)


அன்புடன்...
சரவணன்.

said...

//நிச்சயமாக இந்தப் பாடலைக் கேட்டால் கெட்டுத்தான் விடுவேன்,சொல்லுவதைப் பார்த்தால் நீங்கள் பல இடங்களில்(???)எண்ணை தேய்த்து
பட்டது போல் தெரிகிறதே...//
நான் என்னை எங்கும் தேய்க்கவில்லை. இன்னாபா செல வெசயம் சொல்லித்தான் தெரியனுமா ?

said...

கோவி.கண்ணன் [GK] said...

//நான் என்னை எங்கும் தேய்க்கவில்லை. //

எண்ணையை -என்னை- என்று தவறுதலாக குறிப்பிட்டுவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன்,(எண்ணை ரெம்ப வழுக்கி விட்டதோ..)

//இன்னாபா செல வெசயம் சொல்லித்தான் தெரியனுமா?//

இப்போ மட்டும் எல்லாம் தெரியும், ஆனா பாவம், "சரோஜாதேவி" பற்றி மட்டும் தெரியாது,


அன்புடன்...
சரவணன்.

said...

Saravana,

OORS, Neenga cbe lae engae? My parents live near PSG TECH

said...

//தெரிந்தவர்கள் பின்னூட்டமிடவும//

தெரியாதவர்கள் வேற யார்கிட்டயாவது கேட்டு சொன்னா ஒத்துக்க மாட்டீங்களா :-)

said...

சங்க காலத்துப் பாடல்???

ஒரு வேளை பாண்ப்பத்திர ஓணாண்டியோ.. சஙக ஒற்றர் பிரிவுத் தலைவர் நன்மனத்தாரை விசாரிக்கச் சொல்லுவோமா?

said...

நாளிரண்டு
வாரமிரண்டு
மாதமிரண்டு
வருடமிரண்டு

சித்தர்கள் புத்தகத்தில் படித்ததாக நினைவு
அதிவீரராமபண்டியன் புத்தகத்திலும் படித்தாக நினைவு.

said...

Raji said...
//OORS, Neenga cbe lae engae?//


ஆமா இப்போ இது ரெம்ப முக்கியம்,
நான் கணபதி ஏரியா(on the way to saththiyamankalam),


//My parents live near PSG TECH//


ஒன்னும் பிரச்சனையில்லை uncle, aunty போய் கேட்டேன்னு சொல்லிடுறேன் ஓகேவா..

ஆமா நீங்க எப்போ CBE வருவீங்க..(சரவணா.. பதிவு போட்டது சங்க காலத்துப் பாடலுக்கு சந்து கோப்ல இது எதுக்கு?)


அன்புடன்...
சரவணன்.

said...

Syam said…
//தெரியாதவர்கள் வேற யார்கிட்டயாவது கேட்டு சொன்னா ஒத்துக்க மாட்டீங்களா :-)

படுத்துறாங்களே...
குத்தம் கண்டுபிடிக்கிறதுல ஒன்னும் கொரச்சல் இல்ல, பாடலை சொல்லுமையா...


அன்புடன்...
சரவணன்.

said...

//ஒரு வேளை பாண்ப்பத்திர ஓணாண்டியோ.. சஙக ஒற்றர் பிரிவுத் தலைவர் நன்மனத்தாரை விசாரிக்கச் சொல்லுவோமா?//

கண்டிப்பாக தேவ்,
இப்போழுதே ஆணையிடுங்கள்.
அப்படியே இந்தப் பாட்டையும் படத்துல சேர்க்கிற வாய்ப்பு இருக்கானு கொத்ஸுகிட்ட கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள்...


அன்புடன்...
சரவணன்.

said...

//தெரிந்தவர்கள் பின்னூட்டமிடவும்//

என்னைய்யா இது.. தப்பாட்டமா இருக்கு.. தெரிஞ்சவங்க மட்டும்தானே பின்னூட்டமிட சொன்னீரூ...

said...

ENNAR said…
//சித்தர்கள் புத்தகத்தில் படித்ததாக நினைவு
அதிவீரராமபண்டியன் புத்தகத்திலும் படித்தாக நினைவு//

என்னார் நீங்களே இந்த"லாம்" லிஸ்டை கொஞ்சம் பார்க்க"லாம்"

1.திருமூலர் பாட்டாக இருக்கலாம்,
2,கண்ணதாசன் எழுதி இருக்கலாம்
3,சங்க காலத்துப் பாடலாக இருக்கலாம்,
4,சித்தர்கள் பாடலாக இருக்கலாம்,
5,அதிவீரராமபாண்டியன் புத்தகத்தில் இருக்கலாம்


விடை தான் இன்னும் கிடைத்த பாடில்லை...
விடைகிடைக்கும் வரை விடப்போவதில்லை...


அன்புடன்...
சரவணன்.

said...

மனதின் ஓசை said...

//என்னைய்யா இது.. தப்பாட்டமா இருக்கு..//

எனது தப்பாட்டதை மனதில் கண்டுபிடித்து ஓசை எழுப்பியதால் தவறு திருத்தப் பட்டது,


//தெரிஞ்சவங்க மட்டும்தானே பின்னூட்டமிட சொன்னீரூ...//

நல்ல வேளை எடுத்தாச்சு, இல்லைனா யாருமே பின்னூட்டமாட்டாங்களே...

அன்புடன்...
சரவணன்.

said...

என்ன சரவணன், பாட்டை கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டமாயிருக்கா, ஒன்னு பண்ணுங்க...
சிவாஜி படத்துல, பாடல்கள் எல்லாம் இப்பத்தான் ரெடியாயிட்டு இருக்காம்.. பேசாம, நீங்க சொன்ன இந்த கருத்துக்களோடு ஒரு புது பாட்டை நீங்களே எழுதி அனுப்பிச்சுருங்க...

:-))

தலைவர் பாடுனா, எல்லாரும் கேட்டுப்பாங்க, அப்புறமா வந்து நான் 'இந்த பாடல் இடம்பெற்ற படம் சிவாஜி' அப்படின்னு பின்னூட்டம் கண்டிப்பா போடறேன் :-))))))

said...

//நல்ல வேளை எடுத்தாச்சு, இல்லைனா யாருமே பின்னூட்டமாட்டாங்களே...//

இதெல்லாம் நல்லா இல்ல..

said...

சோம்பேறி பையன் said...
//என்ன சரவணன், பாட்டை கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டமாயிருக்கா, ஒன்னு பண்ணுங்க...//

ஆமாங்க ரெம்ப கஸ்டமா இருக்கு, சொல்லுங்க பண்ணீடுவோம்,


//நீங்க சொன்ன இந்த கருத்துக்களோடு ஒரு புது பாட்டை நீங்களே எழுதி அனுப்பிச்சுருங்க...//

சும்மாவே அங்க தலையில் தொப்பியோட அண்ணன் கைப்பூ இருக்காக,
புலவர் பாணபத்திர ஓணாண்டி இருக்காக
இந்த கூட்டதுல நான் வேறயா..?


//நான் 'இந்த பாடல் இடம்பெற்ற படம் சிவாஜி' அப்படின்னு பின்னூட்டம் கண்டிப்பா போடறேன் :-)))))) //


நீ என் இணமடா...

அன்புடன்...
சரவணன்.

said...

//இதெல்லாம் நல்லா இல்ல..//

எது நான் பண்ணுரதா அது சரி,
இந்த 40+ பின்னூட்டம் வாங்குரதுக்குள்ள நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்,

அங்க ஒரு கூட்டம் என்னடானா "பின்னூட்ட கயமைத்தனம்"ங்கிற பொரூல என்னன்னமோ பண்ணுரதெல்ல்லாம் உம்ம கண்ணுக்கு தெரியாதோ...?

அன்புடன்...
சரவணன்.

said...

//இந்த 40+ பின்னூட்டம் வாங்குரதுக்குள்ள நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்,//

எனக்கும் புரியுது சரவனா..

//அங்க ஒரு கூட்டம் என்னடானா "பின்னூட்ட கயமைத்தனம்"ங்கிற பொரூல என்னன்னமோ பண்ணுரதெல்ல்லாம் உம்ம கண்ணுக்கு தெரியாதோ...?//

தெரியுது சரவனா.. தெரியுது.. அவங்க இங்க வந்தா அதுனால ஒரு ரென்டு பின்னுட்டம் . பதிலுக்கு ஒரு நாலு போட்டுடலாம்ன்னு நீ நினைக்கிறது புரியுது.. எனக்கு புரிஞ்சி என்ன பன்றது?

Anonymous said...

விவேக சிந்தாமணி.

said...

மனதின் ஓசை said…
//எனக்கும் புரியுது சரவனா.. //

பாத்தீகளாப்பூ எம்பூட்டு கஸ்டமுனு..,


/தெரியுது சரவனா.. தெரியுது.. அவங்க இங்க வந்தா அதுனால ஒரு ரென்டு பின்னுட்டம் . பதிலுக்கு ஒரு நாலு போட்டுடலாம்ன்னு நீ நினைக்கிறது புரியுது.. எனக்கு புரிஞ்சி என்ன பன்றது? //


ராஜ தந்திரங்கள் பலிக்கவில்லையே, இன்னும் டிரைனிங் வேணும்போல..


அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

சரவணன்!
நானும் கண்ணதாசன் "குறிப்பிட்டுள்ளார்" எனக் கூறியது. மேற்க்கோள் காட்டியுள்ளார் எனும் கருத்தே!;அவரே எழுதியதெனும் கருத்தல்ல!
மேலும் "அர்த்தமுள்ள இந்து மதம்"- 6ம் பாகம்-நெஞ்சுக்கு நிம்மதியில்;ஆரோக்கியத்தில் நிம்மதி எனும் பகுதியில் (பக்கம் 64- 66);பதினெட்டுச் சித்தர்களில் ஒருவரான தேரையாரின் பாடல்கள் என ;நீங்கள் குறிப்பிட்ட பொருளில் உள்ள 4 பாடல்கள் உள்ளன.இவற்றின் பிரதி உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புகிறேன்.
யோகன் பாரிஸ்

said...

சரவணா.. ஒரு சின்ன டவுட்டு.. உண்மையிலேயே அப்படி ஒரு பாட்டு இருக்குதா?
என் காதுல மட்டும் சொல்லு :-)


அப்படியே நம்ம பக்கம் ஒரு லுக்கு வுடுறது???

said...

மனதின் ஓசை said...
//சரவணா.. ஒரு சின்ன டவுட்டு.. உண்மையிலேயே அப்படி ஒரு பாட்டு இருக்குதா?//

உண்மைலேயே எனக்கும் இப்பொ டவுட் வந்துடுச்சுங்க...


/அப்படியே நம்ம பக்கம் ஒரு லுக்கு வுடுறது??? //


வுட்டாச்சு...

அன்புடன்...
சரவணன்.

said...

//வுட்டாச்சு...//

தாங்ஸ்பா.. இந்தா பிடி 50...

said...

வவாச விலிருந்து

50 தாவது பின்னுட்டம் இட சொல்லி கட்டளை வந்தது போட்டாச்சி ::)

said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றினு ஒத்தைப் பின்னூடத்தில் முடிக்க ஆசையில்லை தான் ஆனா என்ன பண்ணுறது நமக்கு இந்த கயமைத்தம் பண்ண புடிக்கலை(யாருங்க அது சிரிக்கிறது),

நான் வா.வா.சங்கத்தின் புதிய உறுப்பினர் என்ற முறையில் அதன் "வெளியுறவுத்துறை அமைச்சர்" மின்னல் பின்னூட்டியதற்க்கு நன்றி..

50வது பின்னூடமிட்டு வாழ்த்திய மனதின் ஓசைக்கும்,மின்னலுக்கும் சிறப்பு நன்றிகள்,
அப்படி இன்னும் பதில் இல்லை இன்னும் கொஞ்ச பின்னூட்டம் வரும்...

அன்புடன்...
சரவணன்

said...

பாட்டு என்னதான் கடைசியில....

ஊட்டச்சத்து உள்ள பதிவுதான் போங்க..

said...

//நான் சொல்லாம் என்று நினைத்தேன். நீ வேறு ஒருவரிடம் இருந்து பதிலை எதிர்பார்ப்பதால் நான் ஒதுங்கிக்குறேன்.
:) //

சரவணா,

இவரு எங்கப்பா ஆளைக் காணோம்??

said...

செந்தழல் ரவி said…
//பாட்டு என்னதான் கடைசியில....
ஊட்டச்சத்து உள்ள பதிவுதான் போங்க..//



பாட்டு என்னனு தெரியலை ரவி
அதான் பிரச்சனையே,
சித்தர் பாட்டு சித்தர் பாட்டுனு நமக்குத்தேன் சித்த பிரமை புடிக்குது யாரும் சொன்ன பாடில்ல..
ஏன்டா இந்தப் பதிவு போட்டோம்னு இருக்கு...


அன்புடன்...
சரவணன்.

said...

கப்பி பய said...
//நான் சொல்லாம் என்று நினைத்தேன். நீ வேறு ஒருவரிடம் இருந்து பதிலை எதிர்பார்ப்பதால் நான் ஒதுங்கிக்குறேன்.
:) //

//சரவணா,
இவரு எங்கப்பா ஆளைக் காணோம்?? //


கப்பி அவரைத்தான் நானும் தேடுரேன்
நாகையார்(சிங்கம்) இன்னியாரம் எந்தக் குகைல இருக்காரோ..
யாராவது அழைச்சிட்டு வந்து பதில் போட சொல்லுங்கப்பா...

தெரியாததுக்கு நொண்டிச்சாக்கு சொல்லிடு போய்ட்டரு,

ஆடத்தெரியாத_________ தெருக்கோணல்னு சொன்னாலாம் அந்தக் கதையால இருக்கு,

அன்புடன்...
சரவணன்.

said...

//உண்மைலேயே எனக்கும் இப்பொ டவுட் வந்துடுச்சுங்க...//

எங்களுக்கு டவுட்டு கிளியர் ஆகிடுச்சு...

said...

//"அர்த்தமுள்ள இந்து மதம்"- 6ம் பாகம்-நெஞ்சுக்கு நிம்மதியில்;ஆரோக்கியத்தில் நிம்மதி எனும் பகுதியில் (பக்கம் 64- 66);பதினெட்டுச் சித்தர்களில் ஒருவரான தேரையாரின் பாடல்கள் என ;நீங்கள் குறிப்பிட்ட பொருளில் உள்ள 4 பாடல்கள் உள்ளன.இவற்றின் பிரதி உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புகிறேன்.
யோகன் பாரிஸ் //

சொன்னது போல் பிரதிகளை என் மின்ஞ்சலுக்கு அனுப்பிய திரு.யோகன் பாரிஸ் அவர்களுக்கு நன்றி.
நான் குறிப்பிட்ட பொருளில் உள்ள பாடல்களைத் தான் திரு.யோகன் அனுப்பினார், நான் கேட்ட மூலப் பாடலை தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்.


அன்புடன்...
சரவணன்.