Monday, July 24, 2006

கை விட்டு விடவில்லை தோழா-வழி தெரியாமல் விழிக்கின்றோம்

தமிழினி அவர்கள் "நீங்களும் கைவிட்டு விட்டீரோ!! என்ற தலைப்பில் பதிவிட்டிருந்தார்

இதற்க்கு திரு.மணியன் அவர்கள்,

//ஈழத்தின் வலி புரிகிறது; வழி தெரியாமல் விழிக்கிறோம் // என்று பின்னூட்டமிட்டிருந்தார்,

இது தான் என் போன்றவர்களின் நிலைமையும்,ஒவ்வொருமுறையும் ஈழத்தைப் பற்றி படிக்கும் போதும் நெஞ்சு வலிக்கின்றது, மனது கணக்கின்றது.நினைத்தால் கண்ணீர் வருகிறது

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஈழத்தை வேறு நாடு,அன்னிய பூமியாக நான்(நாங்கள்)கருதவில்லை,
அது எனது ஊர், அங்கு இருப்பவர்கள் என் சகோதரனும், சகோதரியும்,என் பெரியப்பா, சித்தப்பா, போன்ற உறவினர்களே என்ற எண்ணம் தான் உள்ளது.

சில சமயங்களில் ஈழத்து நண்பர்கள் சிலரின் பதிவுகளில் ஏதோ நாங்கள் (தமிழகத்தில்) பெருப்பில்லாமலும்,அவர்களைப் பற்றிய சிந்தனை இல்லாமலும் இருப்பதாக நினைக்கின்றனர், இதை நான் குறை சொல்லவில்லை. இது அவர்களின் வருத்தம் அவர்களுக்கு உரிமை உண்டு எங்களிடம் வருத்தப்படாமல் கன்னடர்களிடமோ, இல்லை ஆந்திராக்காரனிடமோ வருத்தப்பட முடியாது, ஏனென்றால் நாமெல்லாம் ஒரே இனம் தமிழ் நம்மை இணைக்கிறது.நாங்கள் என்ன செய்யவேண்டும் என்ற வழி தெரியவில்லை என்பது மட்டும் உண்மை.

கமலஹாசன் ஒரு சினிமா நிகழ்ச்சியில் சொன்னார், தமிழகம் இந்தியாவின் கடைக்கோடியில் உள்ளதால் எங்களுக்கு இராணுவத்தின் செயல்கள் பெரியதாக தெரியவில்லை, எல்லைச் சண்டையின் வெப்பம் எங்களைத் தாக்கவில்லை, ஒருவேளை இதனால் தான் தமிழன் இராணுவத்திற்க்கு மரியாதை செலுத்த தயங்குகிறான் என்று வருத்தப் பட்டார்,

இலங்கையின் போர் வெப்பம் தாக்கவில்லையென்று காஷ்மீரி சொல்லலாம், ஆனால் எந்த ஒரு தமிழனும் அதன் பாதிப்பில்லாமல் இருக்க இயலாது, ஏனென்றால் மறுபடியும் சொல்லுகின்றேன், ஈழத்தில் இறப்பது எமது சகோதரர்களும் , என் வீட்டுப் பெண்களுமே,

என் ஆதரவு புலிகளுக்கா என்றால் "தெரியாது" என்று தான் சொல்லுவேன், ஏனென்றால் அரசாங்க காரியங்கள் ஒரு கடல், எனக்கு தெரிந்தவை ஒரு துளி மட்டுமே, ஆனால் என் ஆதரவும் , என் பிரார்த்தனையும் என் அருமை ஈழத்தமிழ் சகோதரர்களுக்கு நிச்சயமாக உண்டு என்று சத்தமாக என்னால் சொல்ல இயலும்,

கணிப்பொறித்துறையில் பணியாற்றுகின்ற ஒரு சாதாரண இந்திய பிரஜை நான், என்னால் என்ன செய்துவிட முடியும் என்று சப்பைக் கட்டு கட்டவில்லை, வழி தெரியவில்லை அது தான் உண்மை
நம்புங்கள் நண்பர்களே .. தமிழகத்தில் பலருடைய நிலைமையும் இதுதான்...
என்றும் எங்களின் ஆதரவும், பிரார்த்தனையும் எங்கள் சகோதரர்களுக்கு உண்டு.

இந்தப்பதிவு சரவணன் என்ற தனிப்பட்ட மனிதனின் கருத்து
இதற்க்கு நீங்கள் ஒத்துப்போகலாம், இல்லை சில கருத்துக்களில் உங்களுக்கு உடன்படு இல்லாமல் போகலாம், அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை,
இதைப் பற்றி விவாத்திப்பதற்க்காக இந்த பதிவை போடவில்லை, என் கருத்தை தெரிவிக்கவே இந்தப் பதிவு.எனவே தயவுசெய்து இதைப் பற்றி யாரும் விவாதிக்க வேண்டாம்.

இந்தப் பதிவை எதிர்த்து தயவுசெய்து யாரும் எதிர்பின்னூட்டம் இட வேண்டாம், அப்படி இட்டாலும் மன்னிக்கவும் அதை நான் வெளியிடமாட்டேன்,



மீண்டும் சொல்கிறோம்..
ஈழத்தின் வலி புரிகிறது; வழி தெரியாமல் விழிக்கின்(றேன்)றோம்...கனத்த இதயத்துடன் முடிக்கின்றேன்.






அன்புடன்...
சரவணன்.

21 பின்னூட்டங்கள்:-:

said...

கண்ணில் நீர் வழிகிறது நண்பரே! ஏன் என்று இப்பொழுது என்னால் சிந்திக்க முடியவில்லை. என் உணர்வுகள்........ இப்போது எதையும் எழுத முடியவில்லை, மீண்டும் உங்கள் பதிவுக்கு வந்து பின்னூட்டம் இடுகிறேன். தற்போதைக்கு தங்களுக்கு நன்றிக் கரம்கூப்பத்தான் முடிகிறது நண்பா!

said...

நண்பரே! இப்பதிவை எனது பதிவின் பின்னூட்டங்களுடன் இணைக்க விரும்புகின்றேன். அனுமதி தரவும்.

said...

உங்களின் உணர்வுகளுக்கு நான் மதிப்பளிக்கின்றேன்.

ஆனால் நீங்கள் கரம் கூப்பி நன்றி சொல்லி எம்மை அன்னியனாக்கி விடாதீர்,
நான் உனது சகோதரன்
உமது அண்ணனோ,தம்பியோ உங்களிடம் வந்து.. உன்மீது எனக்கு அன்பு இருக்கின்றது என்று சொன்னால், ஒரு சிரிப்பு சிரித்து விட்டு, தலையில் தட்டிவிட்டு செல்வாய் அல்லவா அது போதும் எனக்கு,


//பின்னூட்டங்களுடன் இணைக்க விரும்புகின்றேன். அனுமதி தரவும்//

உங்களுக்கு இல்லாத அனுமதியா.. தாராளமாக இணைத்துக் கொள்ளுங்கள்,


அன்புடன்...
சரவணன்.

said...

இந்தப்பதிவு சரவணன் என்ற தனிப்பட்ட மனிதனின் கருத்து //
என் கருத்தும் அதே.

தமிழினியின் பதிவை வாசித்தபோது எப்படி எதை பின்னூட்டமிடுவது என்று தெரியாதிருந்தது. அரசியல்கள் புரிந்த அளவை விட அங்கே நடக்கும் நம் தமிழரின் அவல நிலை பற்றிய உணர்வே விஞ்சி நிற்கிறது.

said...

எனது பின்னூட்டத்தை விரிவாக்கி தனிப்பதிவிட்டிருக்கும் சரவணன் அவர்களுக்கு நன்றி. சொற்களைத் தேடிய என் உணர்வுகளை பகிர்ந்து அழகாக வடித்திருக்கிறீர்கள். அவர்களின் வலியை நீக்கும் சக்தி கிடைக்கும் என நம்புவோம்.

said...

சரவணன் உங்களின் தனிப்பட்ட கருத்தாக நீங்களை இப்பதிவை இட்டிருந்தாலும் இன்று பல தமிழ் மக்களின் மனமும் இப்படித்தான் இருக்கிறது உதவ வழி எதுவென தெரியாமல் நிற்கின்றனர்.

மணியனின் ஒரு வரி வலியை பதிவாக இட்டு எம்மைப் போன்றோருக்கெல்லாம் கொண்டு சேர்த்தமைக்கு நன்றி!

said...

//என் கருத்தும் அதே.//
//அரசியல்கள் புரிந்த அளவை விட அங்கே நடக்கும் நம் தமிழரின் அவல நிலை பற்றிய உணர்வே விஞ்சி நிற்கிறது//

நன்றி திரு.தருமி அவர்களே...


//அவர்களின் வலியை நீக்கும் சக்தி கிடைக்கும் என நம்புவோம்.//

அந்த சக்தி கூடுமானவரை அதி விரைவாக கிடைக்க வேண்டிக்கொள்வோம்.



அன்புடன்...
சரவணன்.

said...

நேசக்கரங்களே! பாசஉள்ளங்களே! சரவணன், Dharumi, மணியன், ப்ரியன்,மற்றும் அனைத்து தாய்த்தமிழ் நெஞ்சங்களே! உங்களின் இந்த ஆதரவுதான் இன்னும் நாங்கள், பலமுறை மடிந்து போனாலும் முழுதாய் ஒடிந்து போகாமல் காத்துக்கொண்டிருக்கிறது. என்றும் உங்களுக்கு நாங்கள், எங்களுக்கு நீங்கள் என்ற நிலை மாறாது கால காலத்துக்கும் இணைந்து தமிழின் சிறப்பை பாரறிய வைத்து உயர்ந்து வாழ்வோம் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

said...

வாழத்துடிக்கப் போராடும்
ஈழத்தமிழன் என் ரத்தம்

ரத்தம் அங்கே சிந்தவில்லை
மொத்தமாக ஓடுகிறது

ஓட்டத்தைத் தடுத்திடவே
ஓர்வழியும் தெரியவில்லை

தெரியாமல் விழிப்பதனால்
பலனேதும் வருவதில்லை

வருகின்ற நாட்களிலே
நல்முடிவும் வந்துவிடும்

வந்ததின்று வாழ்வுஎன
என்னுதிரம் மகிழ்ந்து நிற்கும்

நில்லாமல் போகாது
நிச்சயமாய் எம்முரிமை

உரிமையுடன் சொல்லுகிறேன்
பொறுத்ததிங்கு வீணாகா!

said...

//ஓட்டத்தைத் தடுத்திடவே
ஓர்வழியும் தெரியவில்லை

தெரியாமல் விழிப்பதனால்
பலனேதும் வருவதில்லை

வருகின்ற நாட்களிலே
நல்முடிவும் வந்துவிடும்//

உயரிய கருத்துள்ள வரிகள். திரு.SK அவர்களே....

என் எண்ணங்களை பிரதிபலித்த உங்களின் கவிதைக்கு நன்றி..


அன்புடன்...
சரவணன்.

said...

//வழி தெரியாமல் விழிக்கின்(றேன்)றோம//

சரியாக சொன்னீர்கள்..இதை எப்படி சொல்வது என்று தெரியாமல் விழித்து கொண்டிருந்தேன்...

//இந்தப்பதிவு சரவணன் என்ற தனிப்பட்ட மனிதனின் கருத்து //
என் கருத்தும் அதே//

உங்கள் கருத்து மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் கருத்து...அனைவரி பிரார்தனைகளூம் "ஆண்டவா எனது சகோத்ர சகோதரிகளை காப்பாற்று"

said...

Syam said...

//உங்கள் கருத்து மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் கருத்து...//


எனக்கும் "இது" ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் கருத்து போட ஆசை தான் ஆனால் சிலர் இருக்கின்றார்கள், அதெப்படி நீ ஒட்டுமொத்த தமிழினதிற்க்கும் பிரதிநிதியா..? என்பார்கள் ,
அதான் ஆறுதல் சொல்ல வந்த இடத்தில் எதற்க்கு அரசியல் என்று என் தனிப்பட்ட்ட கருத்து என்று கூறினேன்,

//அனைவரின் பிரார்தனைகளூம் "ஆண்டவா எனது சகோத்ர சகோதரிகளை காப்பாற்று"//

உமது பிரார்த்தனைக்கு நன்றி சொல்லி உம்மை அன்னியனாக்க விரும்பவில்லை, இது உன் கடமை,

அன்புடன்...
சரவணன்.

said...

சரவணன் ... நன்றாக உணர்வு பூர்வமாக எழுதியிருக்கிறீர்கள்... இதுபற்றி நானும் பதிவிட்டு இருக்கிறேன்... உங்கள் கருத்தில் எனக்கு கருத்துவேறுபாடு எதும் இல்லை

said...

//சரவணன் ... நன்றாக உணர்வு பூர்வமாக எழுதியிருக்கிறீர்கள்... இதுபற்றி நானும் பதிவிட்டு இருக்கிறேன்... உங்கள் கருத்தில் எனக்கு கருத்துவேறுபாடு எதும் இல்லை //

என்னுடன் கருத்தொருமித்த தலை கோவி அவர்களுக்கு நன்றி,



அன்புடன்...
சரவணன்.

said...

வணக்கம் சரவணன்

உங்களைப் போன்ற சகோதர்களின் வாஞ்சை கண்டு உண்மையிலேயே மனம் நெகிழ்கின்றேன்.

said...

உன் உணர்வுகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன் நண்பா..

said...

நன்றி சரவணன்.

said...

என் உணர்வுகளைப் புரிந்து கொண்டும் பகிர்ந்தும் கொண்ட அன்பு நண்பர்கள் கானா பிரபா,தேவு,மற்றும்
டிசேதமிழன் அவர்களுக்கு நன்றி!

அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

dear saravanan
many thanks. we need moral support
of TN. we need love and Friendship
From our Tamil brothers and sisters of TN. Your writings are fine. we Love TAMIL NADU AND INDIA.
Long Live INDIA

from Ceylon

said...

/என் ஆதரவு புலிகளுக்கா என்றால் "தெரியாது" என்று தான் சொல்லுவேன், ஏனென்றால் அரசாங்க காரியங்கள் ஒரு கடல், எனக்கு தெரிந்தவை ஒரு துளி மட்டுமே, ஆனால் என் ஆதரவும் , என் பிரார்த்தனையும் என் அருமை ஈழத்தமிழ் சகோதரர்களுக்கு நிச்சயமாக உண்டு என்று சத்தமாக என்னால் சொல்ல இயலும்,

கணிப்பொறித்துறையில் பணியாற்றுகின்ற ஒரு சாதாரண இந்திய பிரஜை நான், என்னால் என்ன செய்துவிட முடியும் என்று சப்பைக் கட்டு கட்டவில்லை, வழி தெரியவில்லை அது தான் உண்மை
நம்புங்கள் நண்பர்களே .. தமிழகத்தில் பலருடைய நிலைமையும் இதுதான்.../

நன்றி சரவணன். இது உங்கள் தனிப்பட்ட கருத்து போல தெரியவில்லை. என்னைப் போன்று இதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கும் பலரின் உணர்வுகள்.

இன்றும் இலங்கையில் அரசியல் ரீதியாகவோ, ராணுவ ரீதியாகவோ, நடக்கும் எந்தவொரு விஷயங்களையும், கனத்த இதயத்துடனும், பதை பதைப்புடனும், தெரிந்து கொள்ள முயல்கிற சாதாரண மனிதர்களாகவே இன்னும் இருக்கிறேன்(றோம்).

வெறும் பார்வையாளர்களாய் மட்டுமே இருக்க முடிந்ததற்கு வெட்கப்படுகிறோம். வேறு வழி தெரிய வில்லை. மன்னித்து விடுங்கள்.

said...

சரவணன்,

உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி.
நீங்கள் எல்லோரும் உங்கள் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய நடக்க வேண்டிய கடப் பாடுடையவர்கள். இருந்தும், மனித உரிமை மீறல்கள் எங்கே நடந்தாலும், அதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டும். பத்திரிகைகளுக்கு எழுதலாம், வானொலி தொலைக் காட்சிகளுக்கு எழுதலாம். இப்படிச் செய்வதன் மூலம் திட்டமிட்டு மறைக்கப் படும் செய்திகளை வெளிக் கொணர வேண்டும். புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் ஆனால் தமிழரைக் கண்டபடி கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கலாம். உங்கள் வாக்கு வேண்டி வரும் அரசியல் வாதிகளுக்கு விசயத்தைத் தெளிவு படுத்தலாம். அவர்களுக்குத் தெரியாததா என்று இருக்காமல், உங்கள் மன நிலையைத் தெரியப்படுத்தலாம்.