மாலை 6:30 மணி : அரியானா மாநிலம் ஷாகாபாத் கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் பிரின்ஸ், எதிர்பாராத விதமாக அங்கிருந்த 51 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து விட்டான்.
இதையடுத்து கிராமமே பதறிப் போனது. போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினரும் தகவல் தரப்பட்டு அனைவரும் விரைந்து வந்தனர்.முதல் கட்டமாக சிறுவன் மயக்கமடந்து விடக் கூடாது என்பதற்க்காக கிணற்றுக்குள் ஆக்சிசன் அனுப்பப்பட்டது,
சிறுவனை மீட்க்க அவர்கள் துரித கதியில் நடவடிக்கையில் இறங்கினர்.சிறுவன் விழுந்துள்ள கிணற்றுக்கு அருகே பெரிய குழி தோண்டி அதன் வழியே பிரின்ஸை மீட்க திட்டமிடப்பட்டது. அந்தப் பணியை தொடங்கிய ராணுவ வீரர்கள், இன்னொரு புறம், குழுக்குள் சிறுவனின் நிலைமையை அறிவதற்க்காக அதி நவீன கேமராவை உள்ளே அனுப்பினர். அந்த கேமராவை தொலைக்காட்சி ஒன்றுடன் இணைத்தனர்.
இதன் மூலம் குழிக்குள் உள்ள சிறுவன் நலமுடன் இருப்பது தெரிய வந்தது. தைரியமாக இருக்குமாறும்,பயப்படாமல் இருக்குமாறும் சிறுவனுக்கு மேலிருந்து தகவல் கொடுத்த ராணுவத்தினர்,சிறுவனுக்கு பிஸ்கட் மற்றும் டீ-யை கயிற்றில் மூலம் உள்ளே அனுப்பினர்.அதைப் பெற்றுக் கொண்ட பிரின்ஸ் அவ்ற்றை சாப்பிட்டான்.
சிறுவன் குழிக்குள் விழுந்து இன்று காலை 9 மணியுடன் 39 மணி நேரம் முடிவடைந்துள்ளது. இதனால் விரவாக அவனை மீட்கும் முயற்ச்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
முற்பகல் 11:30 : மும்பையிலிருந்து மீட்புப் பணியில் சிறந்த நிபுணர் படை ஷாகாபாத் விரைந்தது.9 போர் கொண்ட இந்த வீரர்கள் , மும்பை தீயணைப்புப் படையில் இடம் பொற்றுள்ளனர்.இவர்கள் அனைவரும் சுரங்கம் மற்றும் பள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதில் அனுபவம் வாய்ந்தவர்கள்.
பிரின்ஸ் நலமுடன் பத்திரமாக மேலே வருவதைக் காண நாடு முழுவதும் தீவிரப் பிரார்த்தனை நடந்து வருகின்றது.அவர்களுடன் சேர்ந்து நாமும் பிரார்த்திப்போம்.
அன்புடன்...
சரவணன்
Sunday, July 23, 2006
Subscribe to:
Post Comments (Atom)
14 பின்னூட்டங்கள்:-:
NDTV-யில் தற்பொழுது இந்திகழ்வு பற்றிய ஒரு செய்தித் தொகுப்பில் அச் சிறுவனை காண்பித்தார்கள், பிரின்ஸ் நலமுடனும், தைரியமாகவும் இருப்பது தொலைக்காட்ச்சியில் தெளிவாகத் தெரிகிறது, இதுவே ஒரு ஆறுதலான விசயம் தான், நிச்சயமாக அச்சிறுவன் நலமுடன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையுடன் பிரார்த்திப்போம்.
அன்புடன்...
சரவணன்
உங்கள் பிராத்தனையில் என்னையும் இணைத்துக்கொள்கிறேன். சிறுவன் எந்த சிக்கலுமின்றி மீட்கப்பட வேண்டும்.
ஐய்யோ.... பாவம் புள்ளெ.
கடவுள் அருளாலெ நல்லபடியா வந்து சேர்ந்துரணுமுன்னு நாங்களும் பிரார்த்திக்கிறோம்.
மாட்டிக் கொண்ட இடரிலிருந்து நலமாய் மீண்டுவர அச் சிறுவனுக்கு எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் புரியட்டும். உங்கள் ப்ரார்த்தனையில் இணைகிறேன்.
இங்கு சன் டிவியிலும் பார்த்தேன் பாவம் அந்த இருட்டில் காற்று இல்லாமல் எப்படி இருக்கிறானோ. தூக்கம் மயக்கம் ஆனால் சுட்டிப்பயளாக இருந்தால் அவ்வளவுதான் மக்குப்பையனாக இருந்தால் இந்த இடத்தில் பிழைத்துக்கொள்வான்
சிறுவன் பிரின்ஸ்க்காக உலகம் முழுவதிலும் குறிப்பாக இந்தியாவில் பிரார்த்தனைகள் நடந்தன,
பிரதமர், மற்றும் சோனியா காந்தி ஆகியோரும் பிரார்த்தனை செய்தனர்
கப்பாற்றச் சென்ற மருத்துவர் குழுவினர் தற்பொழுது, பிரின்ச்ஸை அடைந்து விட்டனர், எனவே பத்திரமாக இன்னும் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்துவிடுவான் என் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அன்புடன்...
சரவணன்
இதில் இன்னொறு முக்கியமான விசயம் என்னவென்றால்
இன்று பிரின்ஸ்க்கு
6-வது பிறந்தநாள்..
பிறந்தநாளில் மறுபிறவி எடுத்து
மீண்டு(ம்)வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்
அன்புடன்....
சரவணன்.
அனைவருக்கும் மிகவும் சந்தோசமான செய்தி..
ஆம்... அனைவரும் எதிர்பார்த்தது போல அந்தச்சிறுவன் பிரின்ஸ் மீட்க்கப்பட்டான்.
2-நாள் போராட்டத்திற்க்குப் பிறகு அந்த சிறுவன் பிரின்ஸ் மிகவும் பத்திரமான முறையில் காப்பாற்றப்பட்டான்...
நான் இதை மிகவும் சந்தோசமாக உணர்கிறேன்,
வலைப்பூவில் இச் செய்தி படித்துவிட்டு அச்சிறுவனுக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் தனிப்பட்ட நன்றிகள்.
அன்புடன்....
சரவணன்.
நல்ல செய்தி சொன்னீர்கள் சரவணன்.
மனம் இப்போதுதான் சந்தோசமடைகிரது. மறுபிறவி எடுத்த அவன் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்
அப்பாடா..... மனசுலே பாலை வார்த்தீங்க.
அந்தப் புள்ளைக்கு இனி ஆயுசு 100. நல்லா இருக்கட்டும்.
நண்பரே,
தமிழகத்தில் ஏற்கனவே இதுபோன்ற சம்பவத்தில் விரும்பத்தகாத நிகழ்வு ஏற்பட்டது.
ஆனால் நல்ல stamina அந்த பிரின்சுக்கு.
சிறுவனுக்கும் காப்பாற்றிய ராணுவத்துக்கும் வாழ்த்துக்கள்.
நாடு முழுவதும் பல்வேறு மதத்தினர் (நானும் தான்), அவனுக்காக செய்யப்பட்ட பிரார்த்தனை பலன் கொடுத்தது.
பிரின்ஸ் மூலம் நாட்டில்/உலகில் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்.
அதே சமயம் இது போன்ற நிகழ்வுகளை தொலைக்காட்சிகளில் காண்பிப்பதை தவிர்க்கவேண்டும், காரணம் இளைய மனம் படைத்தவர்கள், முதியோர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கலாம்.
மாஹிர்
ஒரு பிஞ்சு உயிர் காப்பற்றப்பட்டது... மீட்டவர்களுக்கு என் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதே நேரம் இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? உயிரின் மதிப்பு அது போகும்போதுதான் கவனிக்கப்படுமா?
இது பற்றிய என் பதிவு :
http://manathinoosai.blogspot.com/2006/07/blog-post.html
இது போன்ற ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்து 'மாலுட்டி' என்ற மலையாளப்படம் 90களில் மோகன்லால்,ஊர்வசி நடித்து வந்தது. இன்றைய செய்திபோலவே குழிக்குள் ஆக்ஸிஜன், தண்ணீர் கொடுக்கப்படுவதும் பக்கத்தில் குழி வெட்டி சிறுமியை
(படத்தில் சிறுமி) காப்பாற்றுவதுமாக எடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அது நிழல்; இது நிஜம். கடவுளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் நன்றி.
Post a Comment