Saturday, July 22, 2006

BLOGGER-தடை நீக்கம்.

இண்டர்நெட்டில் கருத்துக்களை எழுதும் வலைப்பதிவர்கள், பொதுநலத்தில் அக்கரை கொண்டவர்கள்(???), கருத்து மற்றும் பத்திரிக்கை சுதந்திர ஆதரவாளர்கள் முயற்சியால், வலைப்பதிவுகளுக்கான தடை உத்தரவை மத்திய அரசு நீக்கியுள்ளது. பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் இது தொடர்பாக கோரிக்கை வைக்கப்ப்பட்டது.இதனால்,நேற்று இரவு முதல் பிளாக்குகள் செயல்பட தொடங்கின.வலைப்பதிவுகளுக்கு விதிக்கபட்ட தடை ஒரு தொழில்நுட்பத் தவறு என்று தொலைதொடர்பு அமைச்சகத் தகவல்கள் கூறுகின்றன.ஒரு சில குறிப்பிட்ட வலைப்பதிவுகளை தடைசெய்தோம். அது எல்லா வலைப்பதிவுகளையும் தடை செய்து விட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.(நமது தகவல்தொழில்நுட்பத்தை அசிங்கப்படுத்த வெளியில இருந்து ஆள் வரவேண்டியதில்லை.. நமது அரசாங்கமே போதும்)வலைப் பதிவுகளை தடை செய்ய மத்திய அரசு வாய்மொழி உத்தரவிட்டது என்று டில்லி மற்றும் பெங்களூர் இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.


(நன்றி.. தினமலர்-22/07/2006)


அதான் தடை நீக்கியாச்சுல்ல அப்புறம் என்ன யோசனை.... எழுத ஆரம்பிச்சுட வேண்டியது தானே...

அன்புடன்...
சரவணன்.

3 பின்னூட்டங்கள்:-:

said...

ஆனால் இன்னமும் தமிழ்மணத்தில் புதிய இடுகைகளைச் சேர்க்க "அளி"யைச் சொடுக்கினால் ஜன்னல் திறக்க மாட்டேன் என்கிறதே? என்ன செய்யலாம்?

said...

கீதா சாம்பசிவம் ...
எனக்கு அந்த மாதுரி ஒன்றும் பிரச்சனை தோன்றவில்லை...
விவரம் தெரிந்தவர்கள் தயவுசெய்து விளக்கவும்....

ஆமா.. அதான் Blogger க்கான தடையை நீக்கி, பழைய நிலைக்கு வந்தாச்சுல்ல பின் ஏன் இன்னமும் தமிழ்மணத்தில் அந்த PK...?



அன்புடன்...
சரவணன்.

said...

அந்த PK இருப்பது நல்லது என்று தான் படுகின்றது...ஆளும் "சனநாயக" "முற்போக்கு" கூட்டணி மந்திரி மும்பை குண்டு வெடிப்புக்கு வலைப்பதிவுகள் "செகுலர் வாத" அரசியலை கிண்டல் அடிக்கின்றன என்ற போர்வையில் கம்யூனிச சீனா, இஸ்லாமிய ஈரான் போல் தடை செய்தார்... நாளையே, தில்லியில் குண்டு வெடிப்பு நடந்தால் இப்படி வலைப்பதிவர்கள் நல்லது எழுதி மக்களை விளிப்புணர்வுக்கு கொண்டுவருவார்கள்...அப்போது திருப்பியும் தடை செய்வார்கள்...இந்த ஆளும் ஐக்கிய வயிற்றுப் போக்குக் கூட்டணி அரசு.