Sunday, July 30, 2006

தெரிந்தால் சொல்லுங்களேன்...

நண்பர்களே... எனக்கு ஒரு பழைய்ய்ய்ய்ய்ய்ய பாடல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் தெரிந்தவர்கள் உதவுங்கள்...
அந்தப் பாடல் தொகுப்பின் தலைப்பு,மற்றும் அதன் ஆசிரியர் யார் என்ற தகவல்கள் எனக்கு தெரியாது(ஆஹா.. காதலிக்கும் நாயகியின் பெயர்,ஊர் தெரியாமல் தேடுகின்ற நாயகன் கதை மாதிரில இருக்கு!!!)
ஆனால் அந்த பாடலின் சில கருத்துக்கள் மட்டும் குத்துமதிப்பாக நினைவில் உள்ளன,அது என்ன வென்றால்....

அந்த பாடலின் ஆசிரியர் மனிதனின் நீண்ட ஆயுளுக்கு ஒரு கணக்கு சொல்லி இருப்பார்,
அதாவது

வாரத்திற்க்கோ (அ) மாதத்திற்க்கோ இருமுறை தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும்,(மற்ற நாட்களில் குளிக்க வேண்டாமா??)

வாரம் ஒருமுறை உறவு கொள்ள வேண்டும்,(கண்டிப்பாக திருமணமானவர்கள் மட்டும்),

ஆறு மாதத்திற்க்கு ஒரு முறையோ. அல்லது வருடத்திற்க்கு ஒரு முறையோ பேதிக்கு(வயிற்றுப் போக்கு)மருந்து சாப்பிட வேண்டும்,

என்று படித்ததாக நியாபகம்,ஆனால் கணக்கு எனக்கு சரியாக தெரியவில்லை,இதைப்பற்றி உங்களுக்கும் நியாபகம் இருந்தால் சொல்லவும் , அல்லது முழுதும் தெரிந்தால் பாடலுடன் கூடிய விளக்கத்துடன் தெரிவிக்கவும்,

எனது இந்த பதிவு உடல் நலம் பற்றியது (மருத்துவர்கள் கவனிக்க...)
அதுவும் பழைய பாடல் (பாடத்தெரிந்த புலவர்கள் கவனிக்க...)

நன்றி..



அன்புடன்...
சரவணன்.

Monday, July 24, 2006

கை விட்டு விடவில்லை தோழா-வழி தெரியாமல் விழிக்கின்றோம்

தமிழினி அவர்கள் "நீங்களும் கைவிட்டு விட்டீரோ!! என்ற தலைப்பில் பதிவிட்டிருந்தார்

இதற்க்கு திரு.மணியன் அவர்கள்,

//ஈழத்தின் வலி புரிகிறது; வழி தெரியாமல் விழிக்கிறோம் // என்று பின்னூட்டமிட்டிருந்தார்,

இது தான் என் போன்றவர்களின் நிலைமையும்,ஒவ்வொருமுறையும் ஈழத்தைப் பற்றி படிக்கும் போதும் நெஞ்சு வலிக்கின்றது, மனது கணக்கின்றது.நினைத்தால் கண்ணீர் வருகிறது

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஈழத்தை வேறு நாடு,அன்னிய பூமியாக நான்(நாங்கள்)கருதவில்லை,
அது எனது ஊர், அங்கு இருப்பவர்கள் என் சகோதரனும், சகோதரியும்,என் பெரியப்பா, சித்தப்பா, போன்ற உறவினர்களே என்ற எண்ணம் தான் உள்ளது.

சில சமயங்களில் ஈழத்து நண்பர்கள் சிலரின் பதிவுகளில் ஏதோ நாங்கள் (தமிழகத்தில்) பெருப்பில்லாமலும்,அவர்களைப் பற்றிய சிந்தனை இல்லாமலும் இருப்பதாக நினைக்கின்றனர், இதை நான் குறை சொல்லவில்லை. இது அவர்களின் வருத்தம் அவர்களுக்கு உரிமை உண்டு எங்களிடம் வருத்தப்படாமல் கன்னடர்களிடமோ, இல்லை ஆந்திராக்காரனிடமோ வருத்தப்பட முடியாது, ஏனென்றால் நாமெல்லாம் ஒரே இனம் தமிழ் நம்மை இணைக்கிறது.நாங்கள் என்ன செய்யவேண்டும் என்ற வழி தெரியவில்லை என்பது மட்டும் உண்மை.

கமலஹாசன் ஒரு சினிமா நிகழ்ச்சியில் சொன்னார், தமிழகம் இந்தியாவின் கடைக்கோடியில் உள்ளதால் எங்களுக்கு இராணுவத்தின் செயல்கள் பெரியதாக தெரியவில்லை, எல்லைச் சண்டையின் வெப்பம் எங்களைத் தாக்கவில்லை, ஒருவேளை இதனால் தான் தமிழன் இராணுவத்திற்க்கு மரியாதை செலுத்த தயங்குகிறான் என்று வருத்தப் பட்டார்,

இலங்கையின் போர் வெப்பம் தாக்கவில்லையென்று காஷ்மீரி சொல்லலாம், ஆனால் எந்த ஒரு தமிழனும் அதன் பாதிப்பில்லாமல் இருக்க இயலாது, ஏனென்றால் மறுபடியும் சொல்லுகின்றேன், ஈழத்தில் இறப்பது எமது சகோதரர்களும் , என் வீட்டுப் பெண்களுமே,

என் ஆதரவு புலிகளுக்கா என்றால் "தெரியாது" என்று தான் சொல்லுவேன், ஏனென்றால் அரசாங்க காரியங்கள் ஒரு கடல், எனக்கு தெரிந்தவை ஒரு துளி மட்டுமே, ஆனால் என் ஆதரவும் , என் பிரார்த்தனையும் என் அருமை ஈழத்தமிழ் சகோதரர்களுக்கு நிச்சயமாக உண்டு என்று சத்தமாக என்னால் சொல்ல இயலும்,

கணிப்பொறித்துறையில் பணியாற்றுகின்ற ஒரு சாதாரண இந்திய பிரஜை நான், என்னால் என்ன செய்துவிட முடியும் என்று சப்பைக் கட்டு கட்டவில்லை, வழி தெரியவில்லை அது தான் உண்மை
நம்புங்கள் நண்பர்களே .. தமிழகத்தில் பலருடைய நிலைமையும் இதுதான்...
என்றும் எங்களின் ஆதரவும், பிரார்த்தனையும் எங்கள் சகோதரர்களுக்கு உண்டு.

இந்தப்பதிவு சரவணன் என்ற தனிப்பட்ட மனிதனின் கருத்து
இதற்க்கு நீங்கள் ஒத்துப்போகலாம், இல்லை சில கருத்துக்களில் உங்களுக்கு உடன்படு இல்லாமல் போகலாம், அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை,
இதைப் பற்றி விவாத்திப்பதற்க்காக இந்த பதிவை போடவில்லை, என் கருத்தை தெரிவிக்கவே இந்தப் பதிவு.எனவே தயவுசெய்து இதைப் பற்றி யாரும் விவாதிக்க வேண்டாம்.

இந்தப் பதிவை எதிர்த்து தயவுசெய்து யாரும் எதிர்பின்னூட்டம் இட வேண்டாம், அப்படி இட்டாலும் மன்னிக்கவும் அதை நான் வெளியிடமாட்டேன்,



மீண்டும் சொல்கிறோம்..
ஈழத்தின் வலி புரிகிறது; வழி தெரியாமல் விழிக்கின்(றேன்)றோம்...கனத்த இதயத்துடன் முடிக்கின்றேன்.






அன்புடன்...
சரவணன்.

Sunday, July 23, 2006

51அடி ஆழ கிணற்றில் 5-வயது சிறுவன்

மாலை 6:30 மணி : அரியானா மாநிலம் ஷாகாபாத் கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் பிரின்ஸ், எதிர்பாராத விதமாக அங்கிருந்த 51 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து விட்டான்.

இதையடுத்து கிராமமே பதறிப் போனது. போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினரும் தகவல் தரப்பட்டு அனைவரும் விரைந்து வந்தனர்.முதல் கட்டமாக சிறுவன் மயக்கமடந்து விடக் கூடாது என்பதற்க்காக கிணற்றுக்குள் ஆக்சிசன் அனுப்பப்பட்டது,

சிறுவனை மீட்க்க அவர்கள் துரித கதியில் நடவடிக்கையில் இறங்கினர்.சிறுவன் விழுந்துள்ள கிணற்றுக்கு அருகே பெரிய குழி தோண்டி அதன் வழியே பிரின்ஸை மீட்க திட்டமிடப்பட்டது. அந்தப் பணியை தொடங்கிய ராணுவ வீரர்கள், இன்னொரு புறம், குழுக்குள் சிறுவனின் நிலைமையை அறிவதற்க்காக அதி நவீன கேமராவை உள்ளே அனுப்பினர். அந்த கேமராவை தொலைக்காட்சி ஒன்றுடன் இணைத்தனர்.

இதன் மூலம் குழிக்குள் உள்ள சிறுவன் நலமுடன் இருப்பது தெரிய வந்தது. தைரியமாக இருக்குமாறும்,பயப்படாமல் இருக்குமாறும் சிறுவனுக்கு மேலிருந்து தகவல் கொடுத்த ராணுவத்தினர்,சிறுவனுக்கு பிஸ்கட் மற்றும் டீ-யை கயிற்றில் மூலம் உள்ளே அனுப்பினர்.அதைப் பெற்றுக் கொண்ட பிரின்ஸ் அவ்ற்றை சாப்பிட்டான்.

சிறுவன் குழிக்குள் விழுந்து இன்று காலை 9 மணியுடன் 39 மணி நேரம் முடிவடைந்துள்ளது. இதனால் விரவாக அவனை மீட்கும் முயற்ச்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

முற்பகல் 11:30 : மும்பையிலிருந்து மீட்புப் பணியில் சிறந்த நிபுணர் படை ஷாகாபாத் விரைந்தது.9 போர் கொண்ட இந்த வீரர்கள் , மும்பை தீயணைப்புப் படையில் இடம் பொற்றுள்ளனர்.இவர்கள் அனைவரும் சுரங்கம் மற்றும் பள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதில் அனுபவம் வாய்ந்தவர்கள்.


பிரின்ஸ் நலமுடன் பத்திரமாக மேலே வருவதைக் காண நாடு முழுவதும் தீவிரப் பிரார்த்தனை நடந்து வருகின்றது.அவர்களுடன் சேர்ந்து நாமும் பிரார்த்திப்போம்.





அன்புடன்...
சரவணன்

Saturday, July 22, 2006

வ.வா.சங்கத்திலிருந்து அறிக்கை - இது ஓர் எச்சரிக்கை.

இன்று இலவச கொத்தனார் நமது தல கைப்பிள்ளையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக வ.வா. சங்கத்தினரின் மெகா பதிவுக் கயமைத்தனம் என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்,
தல இப்போழுது கானா(???) நாட்டில் மாமியார் வீட்டிற்க்கு சென்றுவிட்டு அப்படியே வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்,வந்ததும் இதற்க்கான மறுப்புஅறிக்கை விடப்படும் இருந்தாலும் அவருடைய சங்கத்தின் சார்பாக புதிய உறுப்பினர் என்ற முறையில் என் கண்டன அறிக்கையை வெளியிடுகிறேன்.(வேகமா உறுப்பினர் அட்டையை வழங்குங்கப்பா..
இது வேற அப்புறம் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கலைனு சொல்லி சங்கத்துல இருந்து நீக்கிடப் போறாங்க..)


லகுட பாண்டிகளே....
எங்கள் "இனமானதலை" மீதா நம்பிக்கை இல்லாத்தீர்மானமும் ஓட்டெடுப்பும்...
அய்யகோ... நெஞ்சு பொருக்குதில்லையே....

தலை இதுக்கெல்லாம் நீ வந்து பதில் சொல்லனும்னு அவசியம் இல்லை..
இருந்தாலும் ஒரு கெத்துக்கு நீ வந்து ஒரு சலம்பல் பண்ணீட்டு போ...தலை,

எதிரிகளின் விஷமச் செயல் எங்களை ஒன்றும் செய்யாது என்பதை இங்கு நான் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருகின்றேன், ஓயாது இந்த அலை,காயாது இந்த சிலை,உங்களின் பொய் பிரச்சாரத்திற்கு மசியாது எங்கள் தலை..(ஆஹா கவித கவித..)


யார் யாரெல்லாம் எங்களுக்கு எதிராக வாக்களிக்கிறார்களோ, பின்னூட்டமிடுகிறர்களோஅவர்களை பற்றிய தகவல்கள் புலனாய்வுத்துறையினரால் ரகசியமாக கைப்பிள்ளையின் கவனத்திற்க்கு கொண்டு செல்லப்படும், எனவே யாரும் எங்களுக்கு எதிராக வாக்களிக்க வேண்டாம் என்று எச்சரிக்கிறோம், மீறுபவர்கள் டரியல் ஆகிவிடுவீர்கள்.
சரி நான் கெளம்புறேன்.. பின்னூட்டமிடுங்க அங்க மீட் பன்னுவோம்


யார் அங்கே.. யார் அங்கே.. அடே யாரடா அங்கே..

அடடா இப்படி தலை... பற்றிய தலைப்புல(ஆஹா..) எழுத படிக்க எவ்வளவு சந்தோசமாக இருக்கு, இதை விட்டுட்டு எப்போ பார்த்தாலும் சாதி இல்லையென்றால் அரசியல் இப்போ புதுசா கடவுள் வேற...அட போங்கப்பா...



அன்புடன்...
சரவணன்.

BLOGGER-தடை நீக்கம்.

இண்டர்நெட்டில் கருத்துக்களை எழுதும் வலைப்பதிவர்கள், பொதுநலத்தில் அக்கரை கொண்டவர்கள்(???), கருத்து மற்றும் பத்திரிக்கை சுதந்திர ஆதரவாளர்கள் முயற்சியால், வலைப்பதிவுகளுக்கான தடை உத்தரவை மத்திய அரசு நீக்கியுள்ளது. பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் இது தொடர்பாக கோரிக்கை வைக்கப்ப்பட்டது.இதனால்,நேற்று இரவு முதல் பிளாக்குகள் செயல்பட தொடங்கின.வலைப்பதிவுகளுக்கு விதிக்கபட்ட தடை ஒரு தொழில்நுட்பத் தவறு என்று தொலைதொடர்பு அமைச்சகத் தகவல்கள் கூறுகின்றன.ஒரு சில குறிப்பிட்ட வலைப்பதிவுகளை தடைசெய்தோம். அது எல்லா வலைப்பதிவுகளையும் தடை செய்து விட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.(நமது தகவல்தொழில்நுட்பத்தை அசிங்கப்படுத்த வெளியில இருந்து ஆள் வரவேண்டியதில்லை.. நமது அரசாங்கமே போதும்)வலைப் பதிவுகளை தடை செய்ய மத்திய அரசு வாய்மொழி உத்தரவிட்டது என்று டில்லி மற்றும் பெங்களூர் இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.


(நன்றி.. தினமலர்-22/07/2006)


அதான் தடை நீக்கியாச்சுல்ல அப்புறம் என்ன யோசனை.... எழுத ஆரம்பிச்சுட வேண்டியது தானே...

அன்புடன்...
சரவணன்.

Friday, July 07, 2006

கடவுளும்....கமலஹாசனும்....,

வலைப்பதிவுகளில் இப்பொழுதெல்லாம் அதிகமாக "கடவுள்" பெயர் அடிபடுகிறது,
கடவுளை பற்றீ நமது நாத்திகர்"கமலஹாசன்"வசூல்ராஜா MBBS படத்துல
சொல்லுவாரு

"கடவுள் இருக்காருனு சொல்லுறான் பாரு அவனை நம்பலாம்,
கடவுள் இல்லைனு சொல்லுறான் பாரு அவனையும் நம்பலாம்,
ஆனா நான்தான் கடவுள் அப்படினு சொல்லுறான் பாரு அவனை மட்டும் நம்பகூடாது"

அதே போல் "அன்பே சிவம்" படத்திலும்
மாதவனுக்கும் கமலஹாசனுக்கும் நடக்கும் கடவுளை பற்றிய விவாத்ததின் போது கடவுள் என்றால் யார்? என்ற கேள்விக்கு கமல் சொல்லுவார்"அன்புதான் கடவுள்"
"சக மனிதன் மீது காட்டப்படும் அன்பே கடவுள்" என்று
எனவே சக மனிதன் மீது அன்பு காட்டிய அனைத்து வலைப்பதிவு நண்பர்களும் கடவுள்களே..
எனவே என் சக கடவுள்களே...
இனிமேலாவது கண்ணகி, ஐய்யப்பன்,ஜெயமாலா,மீரா ஜாஸ்மின் ஆகியோரை விட்டுவிடுங்கள் பாவம் அவர்கள்,
உங்கள் அருகில் இருக்கும் சக மனிதனை நேசியுங்கள், அவர்கள் மீது அன்பு செலுத்துங்கள்..(ஹி, ஹி,ஹி கொஞ்சம் ஓவரா தான் ADVISE பண்ணீட்டனோ....)
இப்படிக்கு,

உங்கள் சக கடவுள்,




அன்புடன்...
சரவணன்.

Monday, July 03, 2006

இந்திய சுதந்திரமும்,வெளிவராத ரகசியமும்