Friday, May 04, 2007

சென்னைப்பதிவர்கள் சந்திப்பில் - விடுபட்டவை சுவாரஸ்யத்துடன் - நிறைவுப் பகுதி

சந்திப்பு பற்றிய முதல் பகுதிக்குச் செல்ல இங்கே கிளிக்கவும்!

பார்க்கிலிருந்து வெளிவந்த போது பதிவர்களின் எண்ணிக்கை 20 தாக இருந்தது.சந்திப்பிற்கு வந்த பதிவர்களில் குறிப்பிட்டுச் சொல்லப் படவேண்டியவர் திரு.வினையூக்கி அவர்கள்,வந்த பதிவர்களில் மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டவர் இவரே!அவரிடம் சிறிது நேரம் பேசினேன் அப்பொழுது தங்களைப் பார்த்தால் மானுஷ்யபுத்திரன் நினைவுக்கு வருகிறார்,தாங்களும் அவர்போல் நிறைய எழுதி பெயர் பெற வேண்டுமென்றேன், அதற்கு மானுஷ்யபுத்திரன் அளவிற்க்கு முடியாவிட்டாலும் என்னால் இயன்ற அளவிறக்கு முயல்வேன் என்றார்.

எங்கநேரம் வெளியிலிருந்த பொட்"டீ"க்கடையில் டீ இல்லை! சரி என்று சிலர் ஜீஸும், சிலர் மோரும் குடித்தோம்! (ஸ்பான்சர் யார் என்று இதுவரை தெரியவில்லை! அனேகமாக மொட்டையாக இருக்கலாம்,யாரோ அவருக்கு ஒரு நன்றி!)அப்பொழுது சிறில்அலெக்ஸ் மோர் குடிக்கும் நேரமா இது? என்று தனது பீர் தாகத்தை நினைவுப் படுத்தினார்.பொன்ஸ் அக்கா என் அருகில் வந்து இந்த பதிவர் சந்திப்பு கண்ணைக்கட்டி காட்டில் விட்டது(நாகர்கோவில் சந்திப்பு)மாதிரி இல்லையே? என்றார், நானும் இல்லை,நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்றேன். பின் அனைவருக்கும் எள்ளுருண்டை கொடுத்தார்.உடனே நமது "கலாய்த்தல்"சிபி, இது சாப்பிடுவதற்கு அல்ல மொட்டையில் அடிப்பதற்கு பாகச மகளிரணியால் வழங்கப்படுகிறது என்றதும் அனைவரும் சிரிக்க! அப்பாவியாய் பாலபாரதி மொட்டையில் கைவைத்து மறைத்துக் கொண்டார்! பாஸ்டன்பாலா இரவே பாஸ்டன் கிளம்பவேண்டி இருப்பதால் அனைவரிடமும் விடை பெற்றார்.

மகரிஷியை பார்த்தாயிற்று வாருங்கள் மகிரிஷி தீர்த்தம் குடிக்க என்று சிபியார் வேண்டுகோள் வைக்க! அதற்காகத் தானே காத்திருந்தோம் என்று பார்போற்றும் பதிவர்கள் அடுத்து சென்றது பார் நோக்கி!

பதிவர்கள் கிடைத்த வாகனத்தில் தொற்றிக் கொள்ள ஓகையாரின் கார் எங்களுக்குக் கிடைத்தது! காரின் முன்னிருக்கையில் ஓகை, வரவணைசெந்தில், பின்னிருக்கைகளில் இடதுபுறம் சிபி, வலதுபுறம் ஓசைசெல்லா நடுவில் நான்! கார் சென்னை போக்குவதத்தில் போதை(?)யில் போவதுபோல் மிதந்து சென்றது,

காரில் செல்லும் போது நடந்த உரையாடல்,

வரவணை:-செல்லா, உங்களின் பதிவுகளைப் பெண்கள் அதிகம் படிக்கின்றனர்,(இது இவருக்கு எப்படித் தெரியும்?), நன்றாக இருக்கின்றதாம்,என் நண்பர்(பெண் நண்பியாக இருக்கலாம்) செல்லமாக உங்கள் தலையில் குட்டச் சொன்னார் என்றார்(பாலபாரதி நமது நண்பர் வரவணையின் குட்டை உடைக்கவும், இல்லையேல் உம்ம மண்டை உடையும்).

சிபி:- ஓகை தாங்கள் பேராசிரியரா?
ஓகை:- இல்லை! ஏன்?
சிபி:-தங்களின் ஒருபதிவில்,பதிவில் உடன்பாடில்லை என்றும் எதிர்மறையாகவும் பின்னூட்டமிட்டிருந்தேன், அதற்கு ஒருபதிவர், அவர்(ஓகை)பேராசிரியர் போன்று தோன்றுகிறது,கவனம் என்று கூறியிருந்தார்,அதான் கேட்டேன்.
ஓசை செல்லா: ஏன் ஓகை பேராசிரியராக இருந்தால் எதிர்மரைப் பின்னூட்டம் போடக் கூடாதா? யாருடைய பதிவில் நமக்கு உடன்பாடில்லையோ அதில் எதிர்த்து பின்னூடமிடுவது தவறில்லை,அது ஓகையாக இருந்தாலும் விதிவிலக்கில்லை!

(நாங்கள் சென்றது ஓகையின் காரில்!)

பின் நான் சிபியிடன் இந்த எலிக்குட்டி சோதனை என்றால் என்ன? என்றேன்.அதற்கு அவர் அதைப் பற்றி சிறிது விளக்கினார், பின் எலிக்குட்டி பற்றி திரு.டோண்டு அவர்களுக்குத்தான் நன்றாக தெரியும், நம்பர் தருகிறேன் பேசுறியா? என்றார். நான் உடனே, எலிவாலைப் பற்றிக் கேட்டால் நீர் புலிவாலை புடிக்கச் செல்லுகின்றீரே என்றேன்.(டோண்டு கோச்சுக்காதீங்க சும்மா டமாசு!)

இப்படியாக ஓகையின் கார் ஒரு பாரின் முன் நின்றது. அங்கு முன்னமே குடிமகன்களால் நிரம்பிவழிய, மற்றவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்று தெரியாத நிலையில் (நம்மை விட்டு போயிட்டாங்களோனு வருத்தம் எனக்கு) தருமிக்கு கைத்தொலைபேசினார் வரவணை, பின் "ஓகையின்"கார் EAGLE பார் நோக்கி பறந்தது! ஓகையின் வீடு அருகிலேயே இருப்பதால் காரை வீட்டிலேயே பார்க் செய்துவிட்டு வந்து விடுவதாக அப்"போதை"க்கு எங்களை EAGLE-ன் முன் இறக்கிவிட்டுச் சென்றார்,அங்கு நமது பதிவர்கள் காத்திருந்தனர்,அங்கும் தரைத்தளம் நிரம்பியிருந்தது! எனவே எங்களை அடுத்த(இரண்டாவது) தளத்திற்க்கு போகச் சொன்னார்கள்!(சந்திப்பில் பதிவுகளை அடுத்த தளத்திற்கு கொண்டுசெல்லவேண்டுமென்ற கேரிக்கை நினைவில் வந்துபோனது! பதிவு போகாவிட்டால் என்ன,பதிவர்களாவது போவோம்!)படியில் ஏறுவது சிரமமாக இருந்தது உடனே ஒரு அனானி கமெண்டு:- ஹிம்!இன்னும் தண்ணீயே அடிக்கலை,அதுக்குள்ள தலை சுத்துதே என்று!

படியில் ஏறும் போது கருப்புநிற தேனீர்ச்சட்டை அணிந்திருந்த இளைஞர் தருமி என்னிடம் எங்கிருந்து வருகிறேன், தொழில் பற்றி விசாரித்தார்.சுதந்திரமாக விவாதிப்பதற்கு ஏற்றாற்போல் இரண்டாவது தளத்தில் வேறு யாருமில்லை! வட்டமாக அமர்ந்தோம்!நான் , எனது இருபுறமும் சிபி மற்றும் "7அப் புகழ் "லக்கி, ஏனையோர் ரோஜா வசந்த்,ஓகை, ஓசை செல்லா,சிரில்,மற்றும் பெயர் மறந்த இருவர். மற்றவர்கள் எல்லாம் ஹாட்டாக அடிக்க என்னுடன் சேர்ந்து பியர் அடித்த பியரர் திரு.ரோசவசந்த், சிக்கன், மட்டன், மீன் மற்றும் சில வெஜிடேரியன் ஐட்டங்களும் வந்தன, சிறிது நேரத்தில் களை கட்டியது அந்தத் தளம்,

ஆரம்பம் மங்களகரமாக இருக்கவேண்டும் என்பதாலோ என்னவோ பேச்சு சிம்ரன் ஆப்பக்கடை, நமீதா ரசிகர் மன்றம் என்று போனது, சிபி உடனே தருமியிடன் உங்களுக்கும் இவர்கள் தானா? என்று வம்பிழுத்தார்.அதற்கு தருமி இவர்களில்லை....... என்று இழுத்து சிரித்தார், பின்ன யாரு ? என்று கேட்டதற்கு, அசின் தான் தனக்குப் பிடிக்கும் என்று தனது இளமையை நிருபித்தார்.சிறிது நேரத்தில் இரண்டாவது தளம் விவாதக் களம் ஆனது.சீரியஸான விவாதங்கள், இங்கும் நாகரீகமாகவே!

லக்கி தண்ணீ அடிக்காததால் நான்-வெஜ் அவரிடமிருந்து தள்ளியே இருந்ததை மற்றவர்கள் "தள்ளி"க் கொண்டிருந்தனர் , நான் சில ஃபீஸ்களை எடுத்துக் கொடுத்தேன், அவ்வளவு நேரம் சீராக இருந்த சிபியார் ஒரு லார்ஜ் போனதும் சேஷ்டைகளை ஆரம்பித்தார். அதாவது ஒருகாலத்தில் தான் புறாவிற்கு கறி கொடுத்ததாகவும்,எனவே தனக்கு தற்பொழுது புறாவின் கறி வேண்டுமென்றும் "பறக்க" ஆரம்பிததார். அவரை சமாதானம்"படுத்த" சிறிது நேரமானது! சிபி எத்தனை சிகரெட் அடித்தார் என்ற கணக்கெல்லம் நமக்கெதுக்கு அதை மறக்கும்படியும் சொல்லிவிட்டார்.கையில் வைத்திருந்த ஒரு முழு பாக்கெட் காலிபண்ணிவிட்டு அடுத்த பாக்கெட் ஆர்டர் பண்ணியது மட்டுமே நினைவில். பதிவர்களின் பேச்சு இடஒதுக்கீடு,ஆரிய-திராவிட ஆத்திக-நாத்திகம் பக்கம் போனது, நானும் சிபியும் இரண்டுபக்கமும் கலாய்த்தல் கமெண்டுகள் மட்டும் போட்டு விட்டு சிரித்துக் கொண்டிருந்தோம்! அருகில் இருந்த லக்கியாரை திடீரென காணவில்லை! எங்கே?என்று பார்த்தால் ஓகைக்கும்,ஓசைசெல்லாவுக்கும் நடுவில் போய் கன்னத்தில் கை வைத்தபடி அவர்களிருவரின் விவாதங்களை சீரியசாக கவனித்துக் கொண்டும் கலந்துகொண்டும் இருந்தார்!

சிறில் என்னிடம் நாகர்கோவிலில் 2 வருடமாக இருகின்றீர்கள் எங்க ஊர் எப்படி என்றார்? நான் நல்லதா நாலு வார்த்தை சொல்லி இருக்கலாம்,அதை விட்டுட்டு கன்யாகுமரி மாவட்டத்தில் பேசப்படும் ஆபாசவார்த்தைகள் குறித்து பேசினேன், அதிலும் குறிப்பாக கடல்புறங்களில் மக்கள் அதிகப்படியாக நாம் சொல்லத் தயங்கும் வார்த்தைகளை வீட்டில் அம்மா, சகோதரி இருந்தால் கூட சிறிதும் கூச்சமின்றி பேசுகின்றனர் என்று எனது சொந்த அனுபவத்தைச் சொன்னேன்! தருமி கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார், சிறிலின் முகம் களையிழந்ததுபோல் தோன்றியதும் எனக்கு வருத்தமாக இருந்தது,உடனே ஊரில் நல்ல விசயங்களையும் சொல்லி சமாதானப்பட்டுக் கொண்டோம்! உடனே லக்கி சென்னையில் பேசப்படும் அந்த மூன்றெழுத்து வார்த்தைப் பற்றியும் மற்றொருவர் மதுரைப் பகுதியில் பேசப்படும் வார்த்தை பற்றியும் பேசினார்கள் இறுதியில்,அப்படிப் பேசுவது அவர்களுக்குத் தவறாகக்தெரியாது என்றும் அது அவர்களின் வட்டார வழக்கு என்றும் பேசி ஒருவழியாக முடிக்கப்பட்டது!

பின் சரியாக 8:45 மணிக்கு என்னை அழைத்துச் செல்லவந்த எனது தம்பி பாரின் கீழ் வந்து கைத்தொலைபேசியில் அழைத்தார், நான் உடனே அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினேன்,சிறில் கூட, இருங்க சரவணன், பேச்சுலர் தானே இருக்கலாம் தானே, என்று வற்புறுத்தினார்.அனைவரும் "பாதியில்" இருக்கும்போது நான் நடுவில் கிளம்புவதால் பணம் எப்படிக் கொடுப்பது என்று சங்கடம் எனக்கு, எனது நிலைமையை உணர்ந்த சிபி, நீங்கள் செல்லுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார் வாயில் சிகரெட் வைத்தபடி. என்னுடன் நண்பர் லக்கியும் வந்தார்,பின் லக்கி தன் பைக்கில் கிளம்ப நான் கடைசியாக அவரின் கன்னங்களைப் பிடித்து செல்ல முத்தம் கொடுத்து அனுப்பிவிட்டு என் தம்பியின் பைக்கில் நானும் கிளம்பினேன்!இப்படியாக எனது சென்னை பதிவர்களின் சந்திப்பு சந்தோசமாகவும், மன நிறைவுடன் முடிவுற்றது!


அன்புடன்...
சரவணன்.

10 பின்னூட்டங்கள்:-:

said...

ம். இப்ப உமக்கு சந்தோஷமா?

said...

//சந்திப்பிற்கு வந்த பதிவர்களில் குறிப்பிட்டுச் சொல்லப் படவேண்டியவர் திரு.வினையூக்கி அவர்கள்,வந்த பதிவர்களில் மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டவர் இவரே!//

:):):) நன்றி நன்றி. உங்களுடன் பேசிக்கொண்டிருந்த அந்த சில மணித்துளிகளும் உற்சாகமாக இருந்தது.

said...

I've always been trying to attend one such stuff just curious to be in place and see what'z happening.. do any announcements come in thamizmanam regd this priorly ?

said...

நல்லா விவரிச்சு இருக்கீங்க. அதான் 'மனுஷன் எவ்வளவு
குடிச்சாலும் 'ஸ்டடி'யா இருப்பேன்' சொல்றாங்களே அந்த விதமா?
ஒண்ணும் மறக்காம எழுதினீங்கதானே?

said...

சரவணன் நல்லா எழுதி இருக்கீங்க. சிபி பண்ண சேட்டையில் பாதியை மட்டும் எழுதிவிட்டு மீதியை எழுதாததை வன்மையாக கண்டிக்கிறேன்.

said...

//நாமக்கல் சிபி said...
ம். இப்ப உமக்கு சந்தோஷமா? //

உண்மையச் சொன்னால் சிலருக்குப் பொல்லாப்பு! தேவையா எனக்கு?


//வினையூக்கி said...
உங்களுடன் பேசிக்கொண்டிருந்த அந்த சில மணித்துளிகளும் உற்சாகமாக இருந்தது. //

உற்சாக மனிதருக்கு மேலும் வாழ்த்துக்கள்!

//யாத்ரீகன் said...
I've always been trying to attend one such stuff just curious to be in place and see what'z happening.. //

yes,thats y i explain whats happend in that chennai bloggers meet.

said...

//துளசி கோபால் said...
நல்லா விவரிச்சு இருக்கீங்க. அதான் 'மனுஷன் எவ்வளவு
குடிச்சாலும் 'ஸ்டடி'யா இருப்பேன்'
சொல்றாங்களே அந்த விதமா? //

குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு என்கிறார்கள்,அதான் போகாமல் இருக்க இந்த நினைவுப் பதிவு!

//ஒண்ணும் மறக்காம எழுதினீங்கதானே? //

வகுப்பில் பரிச்சை எழுதியதும் கேட்பது மாதிரியே கேட்குறீங்களே டீச்சர்! முடிந்தவரை மறக்காமல் எழுதி இருக்கின்றேன்!


//சந்தோஷ் aka Santhosh said...
சரவணன் நல்லா எழுதி இருக்கீங்க. சிபி பண்ண சேட்டையில் பாதியை மட்டும் எழுதிவிட்டு மீதியை எழுதாததை வன்மையாக கண்டிக்கிறேன்//

உண்மைதான், பதிவு நடக்கும் பொழுதும் சரி வெளியில் வந்தும் கூட யாரைப் பார்த்தாலும் இவர்தான் இட்லிவடை, இல்லை அவர்தான் இட்லிவடை என்று ஒரே படுத்தல், இளநீர் வெட்டிக் கொடுத்த தாத்தா மற்றும் பாரில் சர்வ் செய்தவரைக்கூட அவரின் சந்தேகக் கண் விட்டு வைக்கவில்லை!
சரி யாரா இருந்தால் உமக்கு என்னையா? என்றால் இல்லை எப்படியும் தெரியாமல் போட்டோ எடுத்து பதிவில் போடப் போகிறார், சிறிது மேக்கப் செய்து இளைமையுடன் இருக்கலாமே! என்றுதான் என்றார். வகுப்பறை வாத்தியார் தொப்பை பற்றி சொன்னதை சிபி மறந்துவிட்டார் போலும்!
பாரில் சிபி பண்ணிய பல களோபரங்களைப் பதிவில் (பொதுவில்) சொல்ல எனக்கும் சிறுது மன உறுத்தல்.என்னதான் இருந்தாலும் எனக்கும் மனசாட்சினு ஒன்னு இருக்கில்லையா:)))))

அன்புடன்...
சரவணன்.

said...

என்னையும் கூட்டிட்டுப் போயிருந்தா இப்போ எழுதுறதுக்கு ஒத்தாசையா இருந்திருக்குமே சரவணா.. விட்டுப்புட்டியேப்பா.. எம்புட்டு பெரிய மெகா மேட்டரை விட்டுப்புட்டான் உண்மைத் தமிழன்..

நாமக்கல் சிபியாரை கொஞ்சம் கலாய்க்கலாம்னு நினைச்சிருந்தேன். தப்பிச்சிட்டாரு. அடுத்த தபா வரட்டும்.. மெரீனால நொண்டிச் சரக்கு கிடைக்குற இடத்துக்குத் தள்ளிட்டுப் போய் கவுத்துப்புடறேன்..

Anonymous said...

ஆகா மது சாப்பிட்ட பின்னரும் உங்கள் ஞாபகசக்தியை என்ன சொல்ல...

சிபி - இதெல்லாம் ஓவரா தெரியலையா?? இருங்க வீட்டுக்கு போன் போடுறேன்..

said...

சரவணன்

குடிச்சி கும்மி அடிச்சிட்டு அத பதிவா வேற போடுறிங்களா நற..நற..

:)