Thursday, May 03, 2007

சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பில் விடுபட்டவை - சுவாரஸ்யத்துடன்...

சென்னையில் பதிவர் சந்திப்பு 22ஆம் தேதி என்றாலும் நான் 20 ஆம் தேதியே சென்னைக்கு வந்துவிட்டேன்!இந்த சென்னைபயணத்தின் முக்கியக் காரணம் பதிவர்கள் சந்திப்பே! என்வே அந்த 22ஆம் தேதிக்காக காத்திருந்தேன்,

22ஆம் தேதியன்று நானும் எனது தம்பியும் சரியாக 2:50 க்கு நடேசன் பார்க்கில் நுழைந்தோம்!முன்னமே வலைப்பதிவர்கள் பற்றி பல பில்டப்கள் கொடுத்திருந்தேன்,அங்கே உள்ளே இருந்த மண்டபத்தில் சுமார் 25 பேர் குழுமி இருந்ததை பார்த்துவிட்டு இது தான் வலைப்பதிவர்கள் கூட்டம் என்று பெருமையடித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு இளைஞனும் யுவதியும் நெருக்கமாக நடந்து வந்தனர்.எங்களைக் கடந்த பின்னும் அவர்களிடையே கொஞ்சல் அதிகமாக இருந்தது ,அவர்களிருவரும் நேராக அந்த மண்டபத்திற்குச் சென்றனர், இதைக் கண்ட என் தம்பி என்னை கேவலமான ஒரு பார்வை பார்த்துவிட்டு, உண்மைய சொல்லு பதிவர்கள் சந்திப்பு தானா?இல்லை வேற எதாவதா என்று இழுழுழுத்தான்?

ஐய்யயோ! இதென்ன புது வம்பு என்று நினைத்து விட்டு மா.சிக்கு கைத்தொலைபேசினேன் , அனைவரும் மண்டத்தில் அருகில் புல்வெளியில் அமர்ந்திருப்பதாக கூறினார், நான் பதிவர்களுடன் சென்று உட்கார்ந்ததும் என் தம்பி கிளம்பிவிட்டான்(சில பெரிய பதிவர்களை பார்த்ததும் தான், என்னை நம்பி பார்க்கில் விட்டு விட்டுச் சென்றான்) அங்கு சென்று மாசியிடம் வணக்கத்தை தெரிவித்துவிட்டு மற்ற பதிவர்களை முதல்முறையாக பார்ப்பதால் யார் "எது"(பதிவு) என்று தெரியாமல் பொத்தாம் பொதுவாக சிரித்து வைத்தேன்! அருகில் ஒரு குரல் "வாயா மாப்ள உக்காருயா!" என்று பார்த்தால், அது மொட்டை! அது பாலபாரதி என்று புரிந்து கொள்ள எனக்கு அதிகநேரம் எடுத்துக் கொள்ளவில்லை! "அட சும்ம உக்காரு வெயிள்ள கருத்துட மாட்ட மாப்ள" என்று உரிமையுடன் பே(ஏ)சினார் எங்க ஊர்க்காரர்( பாலபாரதி ராமேஸ்வரம் நான் பரமக்குடி இருவரும் வளமையான(??!) இராமநாதபுரம் மாவட்டதை சேர்ந்தவர்கள்). கூட்டம் ஆரம்பிக்கும் முன் சும்மா பேசிக்கொண்டிருந்தனர் அப்பொழுது பேசிய டாப்பிக் - சட்டா"அம்பி".

சரியாக 3 மணிக்கு சாகரன் நினைவு மலர் வெளியீட்டுடன்,அவருக்கு மவுன அஞ்சலி செலுத்திவிட்டு கூட்டம் ஆரம்பமானது.அப்பொழுது பதிவர்களின் எண்ணிக்கை 24 ஐ எட்டி இருந்தது ,நேரம் ஆக ஆக வந்த பதிவர்களின் எண்ணிக்கை 40 ஆனது, என்ன பேசினார்கள் என்பதை பல பதிவர்கள் எழுதி விட்டார்கள்! வெளி நாட்டிலிருந்து அபி அப்பா முதலில் தொலைபேசினார் பலரிடமும் பேசினார்(சித்தப்பு நம்மளை மறந்துட்டீயல்ல! இருங்க அபி பாப்பாகிட்ட சொல்லி உம்மை என்ன பண்ணுறேன்னு). சிறிது நேரத்தில் எனக்கு பிடித்த பதிவர்களில் ஒருவரான கோவியார் தொலைபேசினார் என்னுடனும் பேசவேண்டுமென்று பலமுறை நினைத்ததாகவும் இப்பொழுதே முடிந்தது என்றார், நானும் சந்தோஷப்பட்டேன்!

சிறிது நேரத்தில் ஓசை செல்லா என் அருகில் வந்து உக்கார்ந்தார், இங்கு ஒரு விசயம் சொல்ல வேண்டும் மதியம் 1 மணிக்கு நான் டி.நகர் - ரங்கநாதன் தெருவில் தம்பியுடன் பர்ச்சேஸ் பண்ணீக் கொண்டிருக்கும் போது அந்தக் கூட்டத்தில் செல்லாவை பார்த்தேன், அவரின் புகைப்படத்தை முன்னமே பார்த்திருந்ததால் எளிதில் அடையாளம் காண முடிந்திருந்தது, கையில் ஒரு குழந்தையுடன் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார், சரி அவருக்குத் தெரியாமல் அவரை புகைப்படமெடுத்து அவருக்கு ஷாக் ட்ரீட்மெண்டாக பதிவிடலாம் என்ற ஒரு ஆசை கூட வந்தது, கையிலிருந்த கேமராவும் துறு துறுத்தது, ஆனால் இருந்த கூட்ட நெருக்கடியில் அது சாத்தியப்படவில்லை, நான் யோசிப்பதற்க்குள் அவர் வேறு இடத்திற்கு சென்று விட்டார் அத்துடன் எனது "ஆப்பரேஷன் செல்லா"வை விட்டுவிட்டடேன்!, இந்த நிகழ்வை செல்லாவிடம் கூறியதும் நல்ல வேளை சரவணன் நீங்கள் அப்படிச் செய்யவில்லை! ஏனென்றால் அது தனது நண்பனின் குடும்பம் என்றார், "சென்னையில் செல்லா-குடும்பத்துடன் "என்று நீங்கள் பதிவிட்டிருந்தால் என் வீட்டில் பிரச்சனை தான் என்று சிரித்தார்.பின் செல்லா பேசும் போது புரவுஸிங் சென்டர்களில் முக்கிய உரல்களை பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டி இருப்பதாகவும் அவை, தமிழ்மணம், தேன் கூடு மற்றும் சற்றுமுன் என்று கூறும் போது, சற்றுமுன் நிறுவிய சிரிலின் முகத்தில் 1008 வாட்ஸ் பல்பு!

மக்கள் டீவியிலிருந்தும் , குங்குமம் பத்திரிக்கையிலிருந்தும் வந்திருந்தனர். பொன்ஸ் அக்கா வந்ததும் அட்டனென்ஸ் எடுத்துப் பார்த்துவிட்டு முதல் பெயரான உங்கள் நண்பனைப் பார்த்துவிட்டு அருகிலிருந்தவரிடன் சரவணன் யார்? என்று விசாரித்தது என் காதில் விழவே நானாகவே , அது நான் தான் என்றேன்,அவர் புன்னகைத்தார்.என் அருகில் சிபி, யார் என்ன பேசினாலும் எங்களுக்கு மட்டுமே கேட்பதுபோல் கலாய்த்தல் கமெண்டுகள், மற்றொருவர் நவீன் பிரகாஷ் தன் கவிதைக்களுக்கு கரு தேடும் முயற்சியில் தீவிரமாக(??!) வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். ஜிராவிற்கு அவசர அழைப்பு வரவும் உடனே கிளம்பினார், எனதருகில் வந்து கை குழுக்கி விட்டு" உங்கள் நண்பன்" என்று சொன்னதும் உங்களின் பதிவுகள் அனைத்தும் நினைவில் வந்து போனது சரவணன் தொடர்ந்து நல்ல பல பதிவுகள் எழுதுங்கள், என்று என் தலையில் பனங்காயை வைத்தார்! அவருடன் நிறைய உரையாடவேண்டும் என்று நினைத்திருந்தேன், உடனே கிளம்பியது எனக்கு ஏமற்றமே!

பதிவுகளில் நடப்பதுபோன்று அங்கும் அனைத்துவிதமான விவாதங்களும் வந்தன , ஆனால் நாகரீகமான முறையில்,லக்கியாரைப் முன்னமே ஒருமுறை இட்லிவடையாரின் பதிவில் இட்ட படத்தில் பார்த்திருந்ததால் அடையாளம் காண சிரமமாகவில்லை!என் அருகில் வந்த லக்கியிடம் உங்களை எளிதில் அடையாளம் கண்டுகொண்டேன் என்றேன். எப்படி? என்றார், உங்களின் உடன்பிறப்பு உடையைப் பார்த்துத்தான் என்றேன் சிரித்தார்.(கருப்பு சிகப்பு நிற உடையணிந்திருந்தார்). ஒரு பதிவர் அனைவரிடமும் வந்து ,சென்றுவருவதாக கூறினார், என்னிடமும் கூறிச்சென்றார், பின் கேட்டதற்கு அவர் வடுவூர்குமார் என்றார்கள் அவரிடம் லினக்ஸ் பற்றி சில விசயங்கள் கேட்களாம் என்றிருந்தேன் , அவரிடமும் உரையாடமுடியாமை எனக்கு மீண்டும் ஏமாற்றமே!

ஒருமணி நேரத்திற்க்குப் பின் தனித்தனியாக பிரிந்து சென்றனர் தம் அடிப்பதற்கு! பாஸ்டன் பாலா ஒருகுழுவுடன் திடீரென தீர்த்த(??)யாத்திரைக்கு கிளம்பிவிட்டார்.பொன்ஸ் அக்கா அனைவருக்கும் தட்டைமுருக்கு கொடுத்தார்,பின் நான், சிபி மற்றும் நவீன் மூவரும் வெளியிலிருக்கும் கடைக்குச் செல்ல அங்கு சிபி "மட்டும்" தம் அடித்தார். அப்பொழுது எதிபுறத்தில் இராமகி ஐயா அவர்கள் தமது வாகனத்திற்காக காத்திருப்பதைப் பார்த்திவிட்டு நான் மற்ற இருவரிடமும் அனுமதி பெற்று அவரிடம் சென்று சிறிதுநேரம் பேசினேன், தமிழ்பற்றிய அவரின் பதிவுகளையும் சமீபத்திய சுடர்பதிவில் இடம் பெற்றிருந்த வரலாற்றுச் சம்பவங்களையும் நினைவு கூர்ந்தேன், மகிழ்ந்தார், அவரும் எனது கிராமம் பற்றிய பதிவைப் பற்றிச் சொன்னார்.அவர் கிளம்ப நாங்கள் மூவரும் மீண்டும் பார்க்கின் உள்ளே வந்தோம்!, பதிவர்கள் அனைவரும் தனித்தனிக் குழுவாக நின்று பேசிக்கொண்டிருந்தனர் , தோராயமாக ஒரு 10 குழு அங்கு நின்றிருக்கும்!

பின்னர், வாருங்கள் தேனீர் சாப்பிட என்று பாலபாரதி அழைக்க , அனைவரும் பார்க்கிலிருந்து வெளியேறினோம்!


அடுத்த(நிறைவுப்)பகுதியில்....

* தேனீர் சாப்பிடும் போது பாகச மகளிரணியால் பாலாவிற்க்கு எதிராக நடந்த சதி!

* பார் நோக்கி சென்ற பார்புகழும் பதிவர்கள்

* புறாக்கறி கேட்ட சிபியாரின் லொள்ளூ

மற்றும் சில சுவாரஸ்யமான தகவல்களுடன்........

இரண்டாவது(நிறைவுப்)பகுதிக்கு .இங்கே கிளிக்கவும்


அன்புடன்...
சரவணன்.

10 பின்னூட்டங்கள்:-:

said...

//தேனீர் சாப்பிடும் போது பாகச மகளிரணியால் பாலாவிற்க்கு எதிராக நடந்த சதி!//
இது என்னங்க? பாலாவின் கொம்பு விடுபடாமல் பிடித்ததைத் தவிர நான் ஒண்ணும் சதியே செய்யலியே... புது மேட்டரா சொல்றீங்க! ;)

said...

// தேனீர் சாப்பிடும் போது பாகச மகளிரணியால் பாலாவிற்க்கு எதிராக நடந்த சதி!//

என்னங்க இப்படி சஸ்பென்ஸ் வைக்கிறீங்க. சீக்கிரம் அடுத்த பார்ட் எழுதுங்க :)

said...

இவ்வளவு பெரிய பதிவில் உங்களுக்கு பாலாவின் மேல் நடத்தப் பட்ட சதிதான் கண்ணுக்குத் தெரியுதா?

பொன்ஸ் அக்கா கேட்பது"ஐய்யயோ நான் ஒன்னும் பண்ணலையேனு" ஆதங்கத்தில்

டெல்லிக்கிளை கேட்பது" ஹய்யா வேகமாச் சொல்லுயா என்னனு ?" என்று அடுத்தமுறை சரியாகப் பண்ணவேண்டுமென்ற ஆர்வத்தில்!

அன்புடன்...
சரவணன்.

said...

ஹி..ஹி..பதிவு..

ஹி..ஹி.. நல்லாயிருக்குங்க..ஹி..ஹி.

சென்ஷி

said...

//சிபிமட்டும் தம் அடித்தார்//

என்ன சரா..இப்படி கொளுத்தி பொகையைப் போட்டுவிட்டிங்க !

அவரே 'உடலுக்கு பகை' ன்னு பதிவில் எழுதி வச்சிருக்கார்...பகையை மறந்ததைப் போய் ஞாபகப் படுத்திட்டிங்க..
:))

அப்பறம் பதிவு கோர்வையாக இருக்கு சரா.

கோவி போன் பண்ணி பேசியதெல்லாம் அடுத்த பகுதியில் வருமா ?
:))

said...

//அவரே 'உடலுக்கு பகை' ன்னு பதிவில் எழுதி வச்சிருக்கார்...பகையை மறந்ததைப் போய் ஞாபகப் படுத்திட்டிங்க..
//

சிபி பத்தவைத்ததும் நானும் இதைக்கேட்டேன் ,
அதற்கு சிபி :- அப்படி எழுதும்போது நான் குடிப்பதில்லை! இப்பொழுது எழுதுவதில்லை என்றார்.

பொன்ஸ் கூட சிபியிடம் ,உங்களால் 5 நிமிடத்திற்க்குமேல் தம் அடிக்காமல் இருக்கமுடியாதென்று கோவி சொன்னார், எப்படி இவ்வளவு நேரம் எங்களுடன் இருக்க முடிகின்றது? என்றார், அதற்கு நான் , அவர்(சிபி) கடைக்குப் போயிட்டு வந்து 4 நிமிடம் தான் ஆகுதுனு சொன்னேன்!


//கோவி போன் பண்ணி பேசியதெல்லாம் அடுத்த பகுதியில் வருமா ?
//

//சிறிது நேரத்தில் எனக்கு பிடித்த பதிவர்களில் ஒருவரான கோவியார் தொலைபேசினார் என்னுடனும் பேசவேண்டுமென்று பலமுறை நினைத்ததாகவும் இப்பொழுதே முடிந்தது என்றார், நானும் சந்தோஷப்பட்டேன்//

இதைப் பார்க்கவில்லையா? நாம் இருவரும் பேசியவைகளைத் (கீழுமத்தூர் எக்பிரஸில் கலாய்த்தல்,VSK யுடனான குடும்ப அளவிலான தங்களின் நட்பு,)தொகுக்கலாம் என்றுதான் நினைத்தேன் பதிவின் நீளம் கருதியே முடியவில்லை மன்னிக்கவும்!

//அப்பறம் பதிவு கோர்வையாக இருக்கு சரா.
//
நன்றி திரு.கோவி.கண்ணன்.

அன்புடன்...
சரவணன்.

said...

இதோ பாருங்க சரா! நான் சிபிதான்!

இனிமே நான் அடிச்ச தம்மைப் பத்தி நீங்க மறந்திடணும்!

said...

//
இதைப் பார்க்கவில்லையா? நாம் இருவரும் பேசியவைகளைத் //
சரா...அதை மட்டும் எப்படி விட்டேன் என்று தெரியல...வெர்ரி சாரி...
:)

said...

:)

said...

//இதோ பாருங்க சரா! நான் சிபிதான்! //
அப்படியா? என்னங்க சிபி! திடீர்னு ஒப்புதல் வாக்குமூலம் எல்லாம்?

இனிமே நான் அடிச்ச தம்மைப் பத்தி நீங்க மறந்திடணும்! //

சரிங்க சிபி! நீங்க அடிச்ச தம்மை நான் "மட்டும்" மறந்தாச்சு போதுமா?

அன்புடன்...
சரவணன்.