Monday, May 07, 2007

மூன்றாவது கொம்பு


சில சந்தோச தலைக்கண தருணங்களில்
சந்தேகமில்லாமல் உணருகின்றேன்!
தலையில் முளைக்கும் அந்த இரு கொம்புகளை,
அபூர்வமாய் மூன்றாகவும்!

பலரின் கைகள் முயலுகின்றன உடைப்பதற்கு
ஆயுதமாக வார்த்தைகளாலும்,வாத்தியங்களாலும்,
கூர்ந்து பார்த்தால் என் பின்னந்தலையிலிருந்தும்
இருகைகள் கிளம்பி கொம்பின் மேல் ஆயத்தமாக!

கைகளைப் பார்த்து வேதனையான நடிப்புடன்
கை கொட்டிச் சிரிப்பதற்கு அதிகநேரம் முடியவில்லை!
தயவுசெய்து உடைத்தெரியுங்கள் தாங்கிக்கொள்கிறேன்,

அவைகளை உள்ளே அழுத்தி காணாமல்
போக்க வேண்டுமென்ற
உங்களின் முயற்சியை விட்டுவிடுங்களேன்!
அனுபவிப்பவனுக்கு மட்டுமே வேதனைகள்!

அன்புடன்...
சரவணன்.

18 பின்னூட்டங்கள்:-:

இராம்/Raam said...

சரா,

கவி(ஜ)தை நல்லா இருக்கு...:)

சென்ஷி said...

தலைவா.. எங்கியோ போயிட்ட...

(இது எதுக்கு சொல்றேன்னு உனக்கு புரிஞ்சிருக்கும். ஆனா எனக்கு கவித புரியல :(()

சென்ஷி

கோவி.கண்ணன் said...

//சில சந்தோச தலைக்கண தருணங்களில்
சந்தேகமில்லாமல் உணருகின்றேன்!
தலையில் முளைக்கும் அந்த இரு கொம்புகளை,
அபூர்வமாய் மூன்றாகவும்!//

சரா,

சுகாசினி சொன்ன ஸ்டேட்மெண்ட்

"தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு ? " - இந்த கொம்புதானா !

கவிதை நல்லா இருக்கு !

ALIF AHAMED said...

என்ன கொடுமை இது சரவாணா....


பல நேரங்களில்....

உங்கள் நண்பன்(சரா) said...

//இராம் said...
சரா,
கவி(ஜ)தை நல்லா இருக்கு...:)//

ராயலு சொல்லீட்டு என்னயா நக்கலா உமக்கு சிரிப்புவேற?

//சென்ஷி said...
தலைவா.. எங்கியோ போயிட்ட...
(இது எதுக்கு சொல்றேன்னு உனக்கு புரிஞ்சிருக்கும். ஆனா எனக்கு கவித புரியல :(()
சென்ஷி //

டெல்லி! நீ என்ன் சொல்லுரைனு எனக்குப் புரியுது!:)) கண்டிப்பா எங்கேயும் போக மாட்டேன், இது சும்மா ஒரு முயற்சி அவ்வளவே!

அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

ஆகா..
நல்லா இருக்கு :-) :-)

"உங்கள் நண்பன்" கவிதை நல்லாவே புரிகிறது :-p

நேசமுடன்..
-நித்தியா..

ALIF AHAMED said...

//
மின்னுது மின்னல் said...
என்ன கொடுமை இது சரவாணா....


பல நேரங்களில்....
//

பல நேரங்களில்....
இந்த கொம்பு முளைப்பதை தவிர்க்க முடியல....
என்ன கொடுமை சரவாணா....இது ஆனால் உண்மை.

உங்கள் நண்பன்(சரா) said...

//நித்தியா said...
ஆகா..
நல்லா இருக்கு :-) :-)
"உங்கள் நண்பன்" கவிதை நல்லாவே புரிகிறது :-p
நேசமுடன்..
-நித்தியா.. //

நேசமுடன் நல்லாவே(?)புரிவதாக சொன்ன நித்தியாவிற்க்கு நன்றி!

//மின்னுது மின்னல் said...

பல நேரங்களில்....
இந்த கொம்பு முளைப்பதை தவிர்க்க முடியல....
என்ன கொடுமை சரவாணா....இது ஆனால் உண்மை. //

உனக்கு கொம்பு முளைப்பது இருக்கட்டும்,ஏனையா என் பெயரில் புதிதாக கால் முளைத்துள்ளது?

அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

நாங்கள் இந்த புரொஃபைலை வன்மையாக கண்டிக்கிறோம்

இவண்

ரஞ்சனி
வினிதா
சுமா
அபுதாபி அழகி
கவிதா
ஐஸ்வர்யா ராய்
மேலும்
பபாச


Mr.x

உங்கள் நண்பன்(சரா) said...

//
பெண் நன்பர்கள் said...
நாங்கள் இந்த புரொஃபைலை வன்மையாக கண்டிக்கிறோம்
//

யோவ் மின்னல் அடங்கவே மாட்டியா நீ! இதுல அப்படி ஒன்றும் தப்பா இல்லையே! பையன் டவுசர் எல்லாம் போட்டுக்கிட்டு தன் நண்பனாகிய நாய்க்கிட்ட கடலைக் காண்பிக்கின்றான்!

இதுக்கு ஏன் குரூப்பா வந்து கும்முறீங்க? என் பதிவிற்கு ஏற்றாற்போல் படம் ஏதேனும் இருக்கும்பட்சத்தில் தயவுசெய்து எனக்கு தனிமெயிலிடவும்!

அன்புடன்...
சரவணன்.

கப்பி | Kappi said...

அட்ரா சக்கை! அட்ரா சக்கை :)

Anonymous said...

அப்படி ஒன்றும் தப்பா இல்லையே!


boy`s best friend...???

ரஞ்சனி
வினிதா
சுமா
அபுதாபி அழகி
கவிதா
ஐஸ்வர்யா ராய்
மேலும்
பபாச

இவுங்க pest டா..??

Anonymous said...

பையன் டவுசர் எல்லாம் போட்டுக்கிட்டு தன் நண்பனாகிய நாய்க்கிட்ட கடலைக் காண்பிக்கின்றான்!

//


இதுக்கு தானா உங்கள் நண்பன் உங்கள் நண்பன்னு சொல்லுற...:)

Anonymous said...

//
இதுக்கு ஏன் குரூப்பா வந்து கும்முறீங்க?
//


கும்முற மாதிரியா நீ(ங்க) பதிவு போடுற....:)


கும்மி பதிவு போடு
ஒரு மொக்கையாவது போடு
ஒரு வாரம் ஆடலாம்..:)

Anonymous said...

//
என் பதிவிற்கு ஏற்றாற்போல் படம் ஏதேனும் இருக்கும்பட்சத்தில் தயவுசெய்து எனக்கு தனிமெயிலிடவும்!
///

மெயில் அனுப்பு பாக்கலாம்

அனானி@அனானி.சிஒஎம்

Anonymous said...

அன்புடன்...
சரவணன்
//


இன்று(ம்)
அன்புடன்
சரவணன்...

Anonymous said...

நீ போட்ட ஒரு பதிலுக்கே
இம்ம்புட்டு


இது கும்மி பிராக்டிஸ்

:)

அடிக்கடி முளைக்கிறது
மூன்றாவது கொம்பு
சில நேரங்களில்
நான்காகவும்



(sorry)

இவள் said...

hai ur blog is very super...


ival bharathi