Thursday, May 03, 2007

போக்குவரத்து நெரிசலில் நான்!




எல்லோரும் ஓடுகின்றனர்!வேறு வேறு திசைகளில்
ஓவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான தேடல்!
நேற்று என் அருகில் ஓடியவர்,இன்று எதிர்திசையில்

ஒவ்வொரு முகமாக கூர்ந்து பார்கிறேன்,
அனைத்துமே நன்கு பரிச்சயமான முகங்களே!
ஆனால் எங்கும் தென்படவில்லை எனது மூர்க்க முகம்!

நிம்மதியாய் புரண்டு படுக்கின்றேன்!
ஆம்!கனவுகளில் மட்டுமே சாத்தியப்படும்!
பிறநேரங்களில் அந்த கூட்ட நெரிசலில்
காணாமல் போகும் ஒரு சாமானியன்!

மீண்டும் ஓட்டம் ஆரம்பமாகின்றது!

அன்புடன்...
சரவணன்.

3 பின்னூட்டங்கள்:-:

Anonymous said...

வணக்கம் சரா.

நீ என்ன அந்த மாட்டைத்தானே சொல்ற ?

:)))

இது கவிதையா / உரைநடையா ? கோனார் நோட்ஸ் கிடைக்குமா ?

said...

அனைவருக்கும் புரியக்கூடிய வார்த்தைகளில் எழுதியதாலோ, என்னவோ ரவிக்கு சந்தேகம்!
நிச்சயமாய் இது கவிதை அல்ல,உரைநடையிலிருந்து சற்றே விலகிய எனது எண்ணங்கள்!

இரு ரவி! உம்மை கல்லூரியில் சீனியர் கவிதை படிக்க வைப்பது போன்று நானும் தண்ணியப் போட்டுட்டு வந்து உன் கழுத்தில் கத்திவைத்து படிக்கச் சொல்லுகின்றேன்.:))

(ரவி இத்துடன் விட்டுவிடும் எண்ணம் இல்லை! அடுத்தும் மூன்றாம் கொம்பு ஒன்று தயாராகின்றது கவனம்:))

அன்புடன்...
சரவணன்.

said...

ரொம்ப நல்லாயிருக்கு சரவணன் வாழ்த்துக்கள்