Monday, April 16, 2007

நாகர்கோவில் வலைப்பதிவர்கள் சந்திப்பில் நிகழ்ந்தவை...

நான் வலைப்பதிவு உலகிற்கு வந்து சில ஆண்டுகள் ஆகியிருந்தாலும் சக பதிவர்களை சந்திப்பது இதுவே முதன்முறை! (தேவுடனும்,செந்தழல் ரவியுடனும் மட்டுமே தொலைப்பேசியுள்ளேன்)மதியம் 1 மணிக்கு வருவதாக இருந்த சிறில் 2:45க்கு வந்ததால் சந்திப்பு சிறிது தாமதமாகவே தொடங்கியது.(சிறில் தமிழ் நாட்டுக்கு வந்துட்டீகல்ல இப்படித்தான் இருக்கனும்):))

நான் "எனது" கருப்புக் குதிரை பல்சரில் (இளா!இங்கு நான் எனது என்பது ஆணவம் அல்ல, தன்னிலை விளக்கம்:))))அங்கு சென்றபோது அங்கிருந்தவர்கள் இருவர், ஒருவர்(ஒன்றிரண்டு வெள்ளை முடிகள்,கருப்புவெள்ளை கட்டம் போட்ட இரண்டுபாக்கெட் சட்டை,இனிஷியலுடன் கூடிய மோதிரம்,பெரிய டயல் உள்ள கைக்கடிகாரம் , ஜீன்ஸ், காலில் நைக்- அமெரிக்க ரிட்டன் போல் இருந்தவர் திரு.சிறில் அலெக்ஸ் அவர்கள்.மற்றொருவர் எளிமையின் வடிவம்,இந்த மண்ணின் மைந்தர் திரு.மா.சிவக்குமார் அவர்கள்,

அறிமுகம் முடிந்து அருகில் இருக்கும் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டே தற்பொழுதைய பதிவுகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.எனது எழுத்துக்கள் பற்றிக் கேட்டார்கள்,நான் விவாத மற்றும் சீரியஸ் பதிவுகளில் அவ்வளவாக வருவதிலை ஆனால் அனைத்து வித பதிவுகளை படிப்பேன் என்றும் முதல் சாய்ஸ் நகைச்சுவையுடன் கூடிய பதிவுகள் தான் என்றும் கூறினேன்.பின் சிறில் தானும் நகைச்சுவை பதிவு எழுதுவேன் என்றும் ஆனால் யாரும் அழைக்கவில்லை என்றும் வருத்தப் பட்டார், வருத்தமில்லா வாலிபர் சங்கமே இதோ ஒரு நல்லவரு சிக்கி இருக்காரு ஃபிரியா இருந்தீங்கன்னா சொல்லுங்க வரும்போது சங்கத்துக்கு கூட்டிக்கொண்டு வருகிறேன்!

சிறிது நேரத்தில் திரு.அரவிந்தன் நீலகண்டன் வந்து கலந்துகொண்டார், பின் மூவரும் திரு.குமரிமைந்தன் என்னும் மூத்தப் பதிவரை சந்திக்க சென்றோம். அங்கு அவர் நண்பருடன் இருந்தார். திரு.குமரிமைந்தன் பார்ப்பதற்க்கு நமது சக பதிவர் ஐயா திரு.ஞானவெட்டியானை நினைவுப்படுத்தக் கூடிய தோற்றம் அதே கம்பீர(பயமுறுத்த கூடிய) மீசை!:)))

அதன் பின் தான் ஆரம்பித்தது வி-வாதம், என்னன்னவோ பேசினார்கள் குமரிக்கண்டம் - லெமூரியா- வங்கதேச நிலப்பரப்பு - அமெரிக்க ஏகாதிபத்தியம் - கம்யூனிஸ்ட் - அமெரிக்க ஆப்பிரிக்க நிற வேற்றுமைக் காரணங்கள் - ரஷ்யா - லெனின் - ஹிட்லர் -(சிறில் 5 முறை கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு நெளிந்துகொண்டிருந்தார்,அவ்வப்போது எனக்கு சில சினேகப் புன்னகைகள்) ஜெர்மனிய மொழி - ஆரிய திராவிட விவாதம் -ஆயக்கலைகள் 64 - பாதரசத்திலிருந்து தங்கம் - உலகஷேர்மார்க்கெட்டில் இந்தியாவின் நிலைப்பாடு - பெரியார் - ராஜாஜி - தமிழக அரசியல் - (அவ்வ்வ்வ்வ்--- இது நான் தானுங்க!இப்படி சிக்கீட்டியே சரவணா), ஒரே ஆறுதல் வலைப்பதிவின் தற்பொழுதைய நிலை பற்றி பேசவில்லை, திரு.குமரிமைந்தன் அவர்கள் பதிவுகளை படித்து பல நாட்கள் ஆகிவிட்டதாம். உண்ணையாகவே ஒரு நல்ல விவாதம் தான் ஆனால் என்னால் தான் அனைத்து விசயங்களையும் உள்வாங்கிக் கொள்ள சிரமமாக இருந்தது.வெளியில் நல்ல மழை, சென்றால் நனைந்துவிடுவேன் வேறு வழியின்றி விவாதம் நடக்கும் போது நான் ஒரு ஈ போல அமைதியாக இருந்தேன் ஏனென்றால் அனைவரும் இரும்பு அடித்துக் கொண்டிருந்தனர், விவாதத்தின் நடுவில் சிறில் அவர்கள் என்னிடம் " நாங்க சீரியஸா பேசிக்கிட்டு இருக்கிறோம் நீங்க இதை வச்சு காமெடியா எப்படி எழுதுவதுனு யோசிக்கிறீங்களா என்றார்).

விவாதம் மிகவும் சீரியசாக போய்க்கொண்டிருந்தது பின், சிறில் தான் குமரிமைந்தனிடமிருந்து மாசியையும் அரவிந்தனையும் வழுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்( நான் அதற்கு முன்பாகவே பைக்கை ஸ்டார்ட் செய்துவிட்டேன்:))).பின் நாங்கள் சென்ற இடம் SLB பள்ளி வளாகம், எனக்கு மகிழ்ச்சியே( ஹி ஹி .. இங்கு தானே பெண்கள் மாலைநேரத்தில் வாக்கிங் வருவார்கள்).அப்பொழுது சகபதிவர் வல்லிசிம்ஹனிடமிருந்து மாசி அவர்களுக்கு அழைப்பு வந்தது புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு!

அங்கு சென்றதும் விவாதம் மீண்டும் ஆரம்பமானது தற்பொழுது களத்தில் அரவிந்தன் - சிறில். என் அருகில் சக "ஈ" மாசி அவர்கள்,அவர்களிருவரின் விவாதங்கள் நாகரீகமான் முறையிலேயே இருந்தது. சிறிலுக்கு அவரின் சகோதரியிடமிருந்து ஃபோன் வர, மீண்டும் சென்னையில் சந்திக்கலாம், கண்டிப்பாக வரவும் என்று அழைப்புவிடுத்து விட்டு விடைபெற்றர்.பின் நாங்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்தோம் , காமெடி பதிவுகள் எழுதுவதற்கு போதிய சென்ஸ் இல்லை என்று அரவிந்தன் வருத்தப் பட்டார்( யாருக்குத்தான் இங்கு கிலோக்கணக்கில் இருக்குது?)அவர்களிருவரும் காந்தீயம்,RSS பற்றி பேசினர்.மாசி அவர்கள் ஒரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் கதையை சொல்ல அதற்கு மாற்றுக் கருத்துடைய கதையை அரவிந்தன் சொன்னார் அதே ராமகிருஷ்ணரிடமிருந்து!
(ரெம்ப பெரிய மக்கள்களை சந்திக்கப் போற சைலண்டாவே இருனு சொன்ன புலிபாண்டி சிவா எங்கேயா உன் காலு(புலிக் கால் சூப்பு வைக்க அல்ல))

சிறுது நேரத்தில் அரவிந்தனும் சென்றுவிட நானும் மா.சிவக்குமார் மட்டுமே அங்கிருந்தோம்.பதிவுகள் பற்றிப் பல விசயங்கள் போசினோம். கிரீமி லேயரின் சமீபத்திய பதிவுகள், மகேந்திரனின் நறுக் தலைப்புகள், பொன்ஸின் fountain - head-ayn-rand, திரும்பிப் பார்க்கும் சூரியன் திரு.ஜோசப், சங்கத்து பதிவுகள், மை ஃபிரண்ட்ன் முதல் பின்னூட்டம்,அமுக,vsk அவர்களின் லப்டப்,vsk விற்கும் கோவியாருக்கும் உள்ள நட்பு,சிபியின் லொள்ளு,வெட்டியின் கொல்ட்டி,கொத்ஸ்ன் பின்னூட்டம்,துளசி டீச்சர், உஷா,வாத்தியாரின் வகுப்பறை,அபிஅப்பா கண்மனி போன்ற புதிய பதிவர்கள்,பாஸ்டன் பாலாவின் படிக்கும் திறன்,பாலபாரதி,டோண்டு,ரவியின் வேலைவாய்ப்பு பதிவு,லக்கியாரின் உடன்பிறப்பு பதிவுகள்,மற்றும் பல...

பின் இருவரும் நாகராஜ கோவில் சென்று (கடைசிவரை சாமி கும்பிடவில்லை)அங்கும் பேசினோம், ஒரு சகோதரன் போல என்னிடம் அன்பாகவும் என் கம்பெனி பற்றியும் அதை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றியும் எனக்கு அறிவுரைகள் சொன்னார். நன்றி திரு. மாசி அண்ணன் அவர்களே. பின் அவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் அங்கேயே இரவு உணவு. ரெம்ப நாள் கழித்து வீட்டுச் சாப்பாடு சாப்பிட்ட திருப்தி!அப்பா, அம்மா இருவரும் என்னை மிகவும் பாசமுடன் நடத்தினர். எனக்கே ஆச்சர்யம் முதன் முறை சந்திக்கும் ஒரு பதிவரின் அன்பு என்னை நெகிழ வைத்தது. (என்ன ஒரு கவலை வழக்கமான சனிக்கிழமைகாய்ச்சல்(saturday fever) டானிக் குடிக்க முடியவில்லை!)இவ்வாறாக என் முதல் பதிவர்கள் சந்திப்பு இனிதே முடிவுற்றது.


அன்புடன்...
சரவணன்.

34 பின்னூட்டங்கள்:-:

said...

,//vsk விற்கும் கோவியாருக்கும் உள்ள நட்பு,//

சரா என்னையும் நண்பர் விஎஸ்கே வையும் நினைவு கூர்ந்தற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

சந்திப்பைப் பற்றி உங்களுக்கே உரித்தான நகைச்சுவை உண(ர்)வுடன் பரிமாரி இருக்கிறீர்கள்.

நன்றி !

மீண்டும் எதாவது அனானி பெயரில் பின்னூட்டம் போடவருவேன்.
:))

said...

மறந்து போறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் ஒரே மூச்சுல சொல்லி முடிச்சிட்டீங்க போல!

நன்றாகத் தொகுத்துள்ளீர்கள்!

//சிபியின் லொள்ளு//

ஹிஹி..!

said...

அடப்பாவி சரா அவரு எவ்ளோ கஸ்டப்பட்டு உனக்கு அறிவுறை சொன்னாரு நீ டானிக் குடிக்க முடியலியேன்னு வருத்தப் படுறியா நல்லாருங்கப்போய்

said...

அனானிகளின் அறிவிக்கப் படாத கொள்கைப் பரப்புச் செயலாளர் சரா வாழ்க....
கழகம் கண்ட கண்மணிகண்ட சந்திப்புச் செம்மலே வாழ்க

said...

// வி-வாதம், என்னன்னவோ பேசினார்கள் குமரிக்கண்டம் - லெமூரியா- வங்கதேச நிலப்பரப்பு - அமெரிக்க ஏகாதிபத்தியம் - கம்யூனிஸ்ட் - அமெரிக்க ஆப்பிரிக்க நிற வேற்றுமைக் காரணங்கள் - ரஷ்யா - லெனின் - ஹிட்லர் -//

இவ்வளவு பேசியிருக்காங்கன்னா அதை ரொம்ப கவனமா கேட்டிருக்கீங்களே அதுவே பெரிய விஷயம்தான்..

said...

உங்கள் நண்பன்,
ஓ! நீங்களும் நம்மூர் காரரா? மகிழ்ச்சி. விபரமான பதிவுக்கு நன்றி!

said...

//ரெம்ப பெரிய மக்கள்களை சந்திக்கப் போற சைலண்டாவே இருனு சொன்ன புலிபாண்டி சிவா எங்கேயா உன் காலு//

என்க்கிட்ட தான் இருக்கு, போட்டோ புடிச்சு அனுப்பட்டுமா?

said...

நீங்களும் ரிட்டயர்ட் ஜர்னலிஸ்டோ ... யாருக்கும் தெரியாம டேப் ரிக்கார்டர் எதுவும் கொண்டுவந்தீயளோ...அதெப்படி அப்பு இவ்வளவு கரீட்டா ரிப்போர்ட் பண்ணுதீய...அப்புறம் அந்த கதை சொன்ன விவகாரம்...முதல்ல கத சொன்ன கபோதி நான் தல. அப்புறமாதான் மாசி தடாலடியா சிச்சுவேசனுக்கு தகுந்த மாதிரி பதில் கதை சொன்னாரு. அவர் உடனே சொன்ன வேகத்தை பார்த்தா விரல் நுனியில நகத்தடியில அழுக்கு இருக்கோ இல்லையோ கதையெல்லாம் கனகச்சிதமா வச்சிருக்காரு போல... அப்புறம் அடிக்கடி WCC பக்கம்... உங்கள சொல்லி குத்தமில்ல உங்க வயசு அப்படி...பபல்லு இருக்கிரவிய பக்கோடா சாப்பிடுவாவை..செய்யுங்க செய்யுங்க..

said...

நல்லா ஆணி புடுங்கி இருக்கீங்க...!!!! மீண்டும் வருகிறேன்...

said...

அட, நானும் பதிவர் சந்திப்பில கலந்துகிட்ட மாதிரி இருக்கே.

சீரியசா பேசிட்டாங்களா:-))

வலைப்பதிவாளர்கள் சந்திப்பு சம்பந்தமாக ஒரு பதிவில்தான் மாசி அவர்களின் நம்பர் கிடைக்க , என் விசாரிப்புகளையும் தொலைபேசியில் சொன்னேன் .

ரொம்ப நன்றி சரவணன்.
கால் அனுப்பினாரா சிவா?

said...

@கோவி.கண்ணன் said...
சரா என்னையும் நண்பர் விஎஸ்கே வையும் நினைவு கூர்ந்தற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.//
எனக்குப் பிடித்த பதிவர்களைப் பற்றிப் பேசினோம், அதில் தாங்களும் விஎஸ்கே வும் இருப்பதில் ஆச்சர்யம் இல்லையே!

//மீண்டும் எதாவது அனானி பெயரில் பின்னூட்டம் போடவருவேன்.//
ஒரு சக அமுக உறுப்பினருக்கு இதைக் கூட செய்யலைனா எப்படி?


அன்புடன்...
சரவணன்.

said...

// @நாமக்கல் சிபி said...
மறந்து போறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் ஒரே மூச்சுல சொல்லி முடிச்சிட்டீங்க போல!//

ஹி.ஹி ஏதோ நமக்கு முடிஞ்சது!

//@மகேந்திரன்.பெ said...
அடப்பாவி சரா அவரு எவ்ளோ கஸ்டப்பட்டு உனக்கு அறிவுறை சொன்னாரு நீ டானிக் குடிக்க முடியலியேன்னு வருத்தப் படுறியா நல்லாருங்கப்போய்
//

மகி! அவரு சொன்ன அறிவுரைகள் நல்லாப் புரியனுனு தான் டானிக் சாப்பிடனும்னு சொன்னேன்!:)))

said...

//அனானிகள் முன்னேற்றக் கழகம் (அ.மு.க) said...
அனானிகளின் அறிவிக்கப் படாத கொள்கைப் பரப்புச் செயலாளர் சரா வாழ்க....
கழகம் கண்ட கண்மணிகண்ட சந்திப்புச் செம்மலே வாழ்க
//
நீங்கள் அறிவித்தாலும் அறிவிக்கா விட்டாலும் நமக்கு அமுகவின் மேல் எப்போதும் தனிப் பிரியம் தான்!

//சென்ஷி said...


//இவ்வளவு பேசியிருக்காங்கன்னா அதை ரொம்ப கவனமா கேட்டிருக்கீங்களே அதுவே பெரிய விஷயம்தான்..//
நமக்கு பேசுர அளவுக்கு விசயஞானம் இல்லை அதான் தேமேனு கேட்டுக் கிட்டு இருந்தேன்!
பதிவில் சென்ஷி பெயர் குறிப்பிடாமைக்கு மன்னிக்கவும் ஏனென்றால் உங்களின் பதிவுகளைப் பற்றியும் நாகேஷ் படம் பற்றியும் பேசினோம்.

அன்புடன்...
சரவணன்.

said...

// ஜோ / Joe said...
உங்கள் நண்பன்,
ஓ! நீங்களும் நம்மூர் காரரா? மகிழ்ச்சி. விபரமான பதிவுக்கு நன்றி!
//

ஆமாம் ஜோ! தற்"போதை"க்கு நாகர்கோவில்! ஆனால் எனது ஊர்கள் கோவை, பரமக்குடி மற்றும் நாகர்கோவில்.

said...

நாகை சிவா said...
//என்க்கிட்ட தான் இருக்கு, போட்டோ புடிச்சு அனுப்பட்டுமா?//

உன் கால் இன்னும் உன்னுடன் தான் இருக்கா? தம்பி கதிரு, உனக்குக் கொடுத்த புராஜெக்ட்டை ஒழுங்காப் பண்ணலையா? பின்ன எதுக்கு உனக்கு "புலிக்கால் சூப்பு வைப்பது எப்படி" புத்தகம் VPP ல அனுப்பினேன்?

நீ ஃபோட்டோ அனுப்பிய லெட்சணத்தைத் தான் கீதா மேடம் பொதுவில் போட்டுக் கொடுத்துட்டாங்களே!

said...

//அரவிந்தன் நீலகண்டன் said...
நீங்களும் ரிட்டயர்ட் ஜர்னலிஸ்டோ ... யாருக்கும் தெரியாம டேப் ரிக்கார்டர் எதுவும் கொண்டுவந்தீயளோ...//

ஏனுங்க சந்திப்பிற்கு இதைக் கொண்டுவர நான் என்ன இட்லிவடையாரா?

//அந்த கதை சொன்ன விவகாரம்...முதல்ல கத சொன்ன கபோதி நான் தல. அப்புறமாதான் மாசி தடாலடியா சிச்சுவேசனுக்கு தகுந்த மாதிரி பதில் கதை சொன்னாரு. //

மன்னிக்க வேண்டும் திரு.அரவிந்தன், மன்னிப்பிற்கு காரணம் கபோதி அல்ல அது தங்களின் விருப்பம்:))

நான் சொல்ல வந்தது கதைக்கு ஏனென்றால் முதலில் கதை சொன்னது மாசி தான் பின் தான் தாங்களும் அதே பரமஹம்சரின் கதை சொன்னீர்கள்.

//அவர் உடனே சொன்ன வேகத்தை பார்த்தா விரல் நுனியில நகத்தடியில அழுக்கு இருக்கோ இல்லையோ கதையெல்லாம் கனகச்சிதமா வச்சிருக்காரு போல... //

இங்கு அவர்(மாசி) என்று குறிப்பிடுவதை கதை கேட்டுக்கொண்டிருந்தபோது அவர் இடத்தில் உங்களை யோசித்தேன் எப்படி இவ்வளவு சீக்கிரம் அதே ஆசிரியரின் மாற்றுக் கருத்துக் கதையை சொல்ல முடிந்தது என்று!

//அப்புறம் அடிக்கடி WCC பக்கம்... உங்கள சொல்லி குத்தமில்ல உங்க வயசு அப்படி...பபல்லு இருக்கிரவிய பக்கோடா சாப்பிடுவாவை..செய்யுங்க செய்யுங்க.. //

இது வாலிப வயசு!:)))))

அன்புடன்...
சரவணன்.

said...

//செந்தழல் ரவி said...
நல்லா ஆணி புடுங்கி இருக்கீங்க...!!!! மீண்டும் வருகிறேன்...
//

மீண்டும் வந்ததைதான் பார்த்தேனே!:)))

said...

சரா.....மா.சிவகுமார் பார்த்திர்களா? நானும் சென்னைக்கு சொல்லும் போது தான் பார்க்க வேண்டும்.....சாப்பாடு வேறயா?

சந்திப்பு பற்றி நன்றாக எழுதியுள்ளீர்கள் ;)

\\(என்ன ஒரு கவலை வழக்கமான சனிக்கிழமைகாய்ச்சல்(saturday fever) டானிக் குடிக்க முடியவில்லை!)\\

உனக்கு குசும்பு ஓவருப்பா ;-))))

said...

//நான் சொல்ல வந்தது கதைக்கு ஏனென்றால் முதலில் கதை சொன்னது மாசி தான் பின் தான் தாங்களும் அதே பரமஹம்சரின் கதை சொன்னீர்கள்.//
ஹையோ ஹையோ... False Memory Syndrome...மாசி கிட்டயே கேட்டுக்குங்க...

said...

// வல்லிசிம்ஹன் said...
அட, நானும் பதிவர் சந்திப்பில கலந்துகிட்ட மாதிரி இருக்கே.
//

மெய்யாலுமா நெம்ப டாங்கீஸ்ங்க!

//சீரியசா பேசிட்டாங்களா:-))//

அவ்வ்வ்வ்.. மீண்டும் நினைவுப்"படுத்தாதீங்க"! சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பிற்கு செல்லலாம் என்றிருந்தேன் தற்பொழுது யோசிக்க வைத்துவிட்டது!:)))


//வலைப்பதிவாளர்கள் சந்திப்பு சம்பந்தமாக ஒரு பதிவில்தான் மாசி அவர்களின் நம்பர் கிடைக்க , என் விசாரிப்புகளையும் தொலைபேசியில் சொன்னேன்.//

அந்தப் பதிவில்(வெட்டி பாலாஜின் பதிவு) தாங்கள் கண்டிப்பாக சந்திப்பு பற்றி எழுதவேண்டும் என்றும் அன்புக் கட்டளையிட்டிருந்தீர்கள், கட்டளையை காப்பாத்திட்டேனா?

//ரொம்ப நன்றி சரவணன்.
கால் அனுப்பினாரா சிவா?
//

கிடைக்கவில்லை! உங்களுக்கு கிடைக்குமாயின் அனுப்பி வைக்கவும்!

அன்புடன்...
சரவணன்.

said...

சரா,


வந்துட்டோமில்ல :)

//ஒருவர்(ஒன்றிரண்டு வெள்ளை முடிகள்,கருப்புவெள்ளை கட்டம் போட்ட இரண்டுபாக்கெட் சட்டை,இனிஷியலுடன் கூடிய மோதிரம்,பெரிய டயல் உள்ள கைக்கடிகாரம் , ஜீன்ஸ், காலில் நைக்- அமெரிக்க ரிட்டன் போல் இருந்தவர் திரு.சிறில் அலெக்ஸ் அவர்கள்.//

இந்த பதிவிலே சொன்னமாதிரியே இருந்தாரா??? :))

//வருத்தமில்லா வாலிபர் சங்கமே இதோ ஒரு நல்லவரு சிக்கி இருக்காரு ஃபிரியா இருந்தீங்கன்னா சொல்லுங்க வரும்போது சங்கத்துக்கு கூட்டிக்கொண்டு வருகிறேன்!//

கூட்டிட்டு வா சரா.... வைச்சு ஒன்னு கூடிறாலாம் :)

said...

சரா,
பதிவு சூப்பர்... நீ பட்ட அவஸ்தை அத விட சூப்பர்...

ஏன்பா மா.சிவக்குமார் என் கதைய பத்தி பேசினாரா??? பிட்ட போடறதுக்கும் ஒரு அளவு வேண்டும்... ஏதோ வெட்டி நம்ம சந்திப்புக்கு ஒரு பதிவ போட்டார்னு நீ சொன்ன மாதிரி சொல்லியிருக்கலாம் ;)

said...

//அரவிந்தன் நீலகண்டன் said...
ஹையோ ஹையோ... False Memory Syndrome...மாசி கிட்டயே கேட்டுக்குங்க...
//
மன்னித்துக் கொள்ளுங்கள் திரு.அரவிந்தன்.தற்பொழுதுதான் மாசிக்கு ஃபோன் செய்தேன், அவர்தான் கூறினார் "பாம்பு சீறும்போது பாத்துக் கொண்டிருக்கக்கூடாது அடிக்க வேண்டுமென்ற" கதைய தாங்கள் கூறியதாகவும், அதற்கு அவர் "தண்ணீரில் கிடக்கும் தேளை ஒரு துறவி காப்பாற்றும்" கதையைவும் சொன்னார். அதற்கு தாங்கள் மீண்டும் காப்பாற்றும் துறவிக்கு குழந்தைகள் இருப்பின் அதன் அருகில் விடுவாரா? என்று கேட்டீர்களாம், நான் தான் பாம்பை விட்டுவிட்டு( ஒருவேளை கோவியாரின் ஒவ்வாமைப் பதிவில் பாம்பை எனக்குப் பிடிக்காது என்று கூறியிருந்தேன்! அதனால் விட்டுவிட்டேனோ?) தேள் கதையை பிடித்துக் கொண்டு அவர் தான் முதல் கதைசொல்லி என்று தங்களுடன் வாதிட்டுவிட்டேன், தவறுக்கு மீண்டும் ஒரு மன்னிப்புப் கோரல்!

அன்புடன்...
சரவணன்.

said...

//கோபிநாத் said...
சரா.....மா.சிவகுமார் பார்த்திர்களா? நானும் சென்னைக்கு சொல்லும் போது தான் பார்க்க வேண்டும்.....சாப்பாடு வேறயா? //

கோபி , மாசி ஒரு வித்தியாசமான மனிதர். நான் கூட இயல்பாக பழகுவாரா என நினைத்தேன் ஆனால் மாறாக இனிமையானவர்.தாங்களும் சென்னை வருகின்றீர்களா? எனக்கும் உங்கள் அனைவரையும் பார்ப்பதற்க்காகவாவது வரவேண்டும் என்று ஆசை உள்ளது, பார்க்கலாம்!

//சந்திப்பு பற்றி நன்றாக எழுதியுள்ளீர்கள் ;)//

நன்றி கோபிநாத்!

//உனக்கு குசும்பு ஓவருப்பா ;-))))//

ஹி.ஹி....

அன்புடன்...
சரவணன்.

said...

//இராம் said...
சரா,
வந்துட்டோமில்ல :)//

ராயலு எங்க போயிருந்த ஆளயே காணோம்?! சரி இப்போவாவது வந்தீயே!


//இந்த பதிவிலே சொன்னமாதிரியே இருந்தாரா??? :))//

உண்மையாகவே அந்தப் பதிவு நினைவு வந்தது ஆனால் இந்தமாதிரி உருப்படிப்(??!) பதிவு நீ எழுதமாட்டியே அதான் பதிவரின் பெயர் நினைவு வரவில்லை

//கூட்டிட்டு வா சரா.... வைச்சு ஒன்னு கூடிறாலாம் :) //

சிறில் பாருங்க! பாசக்காரப் பயலுக ஆசப் படுறாய்ங்க! சென்னை போகும்போது அப்படியே சங்கத்துக்கும் கொஞ்சம் போய் "வாங்கி"ட்டுப் போங்க!

அன்புடன்...
சரவணன்.

said...

// வெட்டிப்பயல் said...
நீ பட்ட அவஸ்தை அத விட சூப்பர்...//

உன்னையெல்லாம் என் நண்பன்னு ஊருக்குள்ள சொல்லிக்கிட்டுத் திரியிறேன் பாரு என்னைச் சொல்லனும்!

//ஏன்பா மா.சிவக்குமார் என் கதைய பத்தி பேசினாரா??? பிட்ட போடறதுக்கும் ஒரு அளவு வேண்டும்... ஏதோ வெட்டி நம்ம சந்திப்புக்கு ஒரு பதிவ போட்டார்னு நீ சொன்ன மாதிரி சொல்லியிருக்கலாம் ;)
//
ஆமா நான் "பெரிய" ஷகீலா இவருக்கு அப்படியே பிட்டு போடுறாங்க! இப்படி வெட்டித்தனமா பேசுறதை நிப்பாட்டு இல்லைனா இனி உன் பதிவுகளுக்கு பின்னூட்ட எல்கை 25னு அறிவிக்கச் சொல்லிடுவேன்!
சங்கத்து நண்பர்களின் பதிவுகளைப் பற்றி நான் மாசி-யிடன் சொல்லும்போது உனது கொல்ட்டி பற்றியும் சொன்னேன், இதில் உனகென்ன சந்தேகம்?, சந்திப்பு பதிவு போட்டதையும் சொன்னேன், அதற்கு மாசி , பாலாஜி உங்க நண்பரா என்றார் நான் ஆமாம் சங்கத்துல இருக்கின்றார் அப்போ அப்போ சங்கத்தில் மீட் பண்ணிபோம் என்றேன்!

அன்புடன்...
சரவணன்.

said...

//உன்னையெல்லாம் என் நண்பன்னு ஊருக்குள்ள சொல்லிக்கிட்டுத் திரியிறேன் பாரு என்னைச் சொல்லனும்!//
இதுக்கு நாமக்கு நாமே (ஆப்பு) திட்டம் :-)

இதுக்கு எல்லாம் டென்ஷனாகக்கூடாது :-)

//இப்படி வெட்டித்தனமா பேசுறதை நிப்பாட்டு இல்லைனா இனி உன் பதிவுகளுக்கு பின்னூட்ட எல்கை 25னு அறிவிக்கச் சொல்லிடுவேன்!//
ஏன் 25??? பின்னூட்டம் வந்தாலே உயிரெல்லைனு சொல்ல வேண்டியதுதானே... எல்லாம் ஒரு குருப்பாதான் திரியறீங்க :@

//உனது கொல்ட்டி பற்றியும் சொன்னேன//
நீ அடங்க மாட்ட.. ஒருத்தன பத்தி நல்லது எதுனா இருந்தா சொல்லிடாதீகப்பு...

//பாலாஜி உங்க நண்பரா என்றார் //
எல்ல நான் தான் "உங்கள் நண்பன்"னு சொல்ல வேண்டியது தானே :P

said...

/
ராயலு எங்க போயிருந்த ஆளயே காணோம்?! சரி இப்போவாவது வந்தீயே!//

ஆமாம் சரா... ஆப்பிஸிலே பிளாக்'க்கு ஆப்பு வைச்சிட்டானுக... :(


//உண்மையாகவே அந்தப் பதிவு நினைவு வந்தது ஆனால் இந்தமாதிரி உருப்படிப்(??!) பதிவு நீ எழுதமாட்டியே அதான் பதிவரின் பெயர் நினைவு வரவில்லை//

அடபாவிகளா... அது நாந்தாய்யா எழுதுனேன்..... நம்ம நண்பன் இப்பிடியெல்லாம் கேட்டுப்புட்டே??? இதை நினைச்சே வெள்ளிக்கிழமை காய்ச்சலுக்கு மருந்தே குடிப்பேன்.... :))

ஹைய்யா ... ஒரு காரணம் கிடைச்சிருச்சு, வெள்ளிக்கிழமை படையலுக்கு... :))

said...

சிறிலும் இந்த மண்ணின் மைந்தர்தான் சரவணன், கோபித்துக் கொள்ளப் போகிறார் :-)

நாம் இருவரும் இவ்வளவு பேசினோமா என்று உங்கள் குறிப்புகளைப் படித்த பிறகுதான் ஆச்சரியமாக இருந்தது. அந்த ஓரிரு மணி நேரத்தில் வலைப்பதிவுலகைப் பற்றிய ஒரு மினி சர்வேயே செய்து விட்டீர்கள். நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

//உனது கொல்ட்டி பற்றியும் சொன்னேன//

நீ அடங்க மாட்ட.. ஒருத்தன பத்தி நல்லது எதுனா இருந்தா சொல்லிடாதீகப்பு... //


இதுக்கு என்க்கிட்டே கருத்து இல்லை சரா... என்னை மன்னிச்சிரு... :)

said...

எலேய் சாரா நல்லா எழுதி இருக்கேலே. //என்ன ஒரு கவலை வழக்கமான சனிக்கிழமைகாய்ச்சல்(saturday fever) டானிக் குடிக்க முடியவில்லை!//
இம்முட்டு நேரம் ஈ யா இருந்தும் அடங்கலை நீயி.

said...

//நான் ஒரு ஈ போல அமைதியாக இருந்தேன் ஏனென்றால்
அனைவரும் இரும்பு அடித்துக் கொண்டிருந்தனர்//

இது :-)))))))

said...

// இராம் said...
ஆமாம் சரா... ஆப்பிஸிலே பிளாக்'க்கு ஆப்பு வைச்சிட்டானுக... :(//

ஐய்யோ பாவம் ராயலு!

//ஹைய்யா ... ஒரு காரணம் கிடைச்சிருச்சு, வெள்ளிக்கிழமை படையலுக்கு... :)) //

ஒரு குருப்பாத்தான்யா கெளம்பி இருக்கீக!..


//@மா சிவகுமார் said...
சிறிலும் இந்த மண்ணின் மைந்தர்தான் சரவணன், கோபித்துக் கொள்ளப் போகிறார் :-)//

நிச்சயமாக அவரும் இந்த(நாகர்கோவில்) மண்ணின் மைந்தர் தான்,நான் குறிப்பிட்டது அவரின் அமெரிக்க ரிட்டன் தோற்றத்தை மட்டுமே! மாசி அவரு கோபிக்காட்டிக் கூட நீங்க நம்மளை கோர்த்து விட்டுருவீங்க போல:))))

//நாம் இருவரும் இவ்வளவு பேசினோமா என்று உங்கள் குறிப்புகளைப் படித்த பிறகுதான் ஆச்சரியமாக இருந்தது. //

என்ன மாசி இப்படி சொல்லிட்டீங்க? எவ்வளவு பேசினோம்!நாம பேசிய விசயங்களை பதிவின் நீளம் கருதியே குறைத்தேன்,
//அந்த ஓரிரு மணி நேரத்தில் வலைப்பதிவுலகைப் பற்றிய ஒரு மினி சர்வேயே செய்து விட்டீர்கள். நன்றி.//

ஆமாம், மற்றும் உங்களை சந்தித்து பேசியது எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் கொடுத்தது!

//@ இராம் said ...
இதுக்கு என்க்கிட்டே கருத்து இல்லை சரா... என்னை மன்னிச்சிரு... :)
//

என்னிடம் எதுக்கு ராயலு மன்னிப்பு, என்ன தெரியாத விசயத்தையா சொல்லீட்ட!கொல்ட்டி ஏதோ தான் நல்ல பதிவுகளையும் எழுதிவிட்டோமோ என்ற அறியாமையில் கூறிவிட்டார், வேண்டுமானால் வெட்டியை மன்னித்துவிடலாம்!

//@சந்தோஷ் aka Santhosh said...
எலேய் சாரா நல்லா எழுதி இருக்கேலே.

அப்புடியா மக்கா, ரெம்ப டேங்கீஸ்லே!

//இம்முட்டு நேரம் ஈ யா இருந்தும் அடங்கலை நீயி. //

ஹி ஹி நாம என்னைக்கு அடங்கினோம்! இப்படியேத் திரியவேண்டியதுதான்!


//@துளசி கோபால் said...
//நான் ஒரு ஈ போல அமைதியாக இருந்தேன் ஏனென்றால்
அனைவரும் இரும்பு அடித்துக் கொண்டிருந்தனர்//

இது :-)))))))
//

டீச்சரின் கடைசி பெஞ்ச் மாணவனாக இருந்துவிட்டு "இது" கூடப் பேசலைனை எப்படி!

அன்புடன்...
சரவணன்.

said...

//மீண்டும் எதாவது அனானி பெயரில் பின்னூட்டம் போடவருவேன்.
:))
//

சொன்னதற்காக ஒரு அமுக பின்னூடம் மட்டும்தானா? எங்கே நமது உறுப்பினர்கள்?