Wednesday, March 21, 2007

பார்த்தேன் ரசித்தேன் - கல்லூரி கலாட்டா

கடந்த திங்கள் கிழமை உகாதியா? யுகாதியா? அன்னைக்கு சரி ஆந்திராவில் இருக்குற நம்ம பயலுக்கு ஃபோன் பண்ணி வாழ்த்துச் சொல்லலாமேனு பண்ணீனா அவன் என்னடான்னா, மாப்பு ஆந்திர வருடப் பிறப்புக்கு வாழ்த்தெல்லம் சொல்லுர ஆந்திராப் பசங்க கிட்ட அசிங்கப் பட்டதை மறந்திட்டியானு(நினைவில் வைத்துக் கொள்ளவும் பசங்ககிட்ட மட்டுமே) கேட்டான் , அசிங்கமா? அப்படீனு ஒரு அப்பாவி எக்ஸ்பிரஷன காமிசிட்டு (ஒன்னுனா நினைவில் இருக்கும் நாமக்குத்தான் ஆயிரம் இருக்கே இதுல எதை நியாபகம் வச்சிருக்க முடியும்) இல்லையே மாப்பு, அப்படி எதுவும் நடந்துச்சா? ன்னு கேட்டேன் , அதற்கு அவன் எப்படித்தான் இப்படி சங்கடப் படாம பேசமுடியுது அப்படினு சொல்லீட்டு ஒரு சம்பவத்தை நியாபகப் படுத்திட்டான் ,அன்னைக்கு நான் பட்டதைத் தான் மக்கா உங்ககிட்ட சொல்லப்போறேன்.

(கைப்பூ ஒரு பதிவு எழுதுறதுக்கு முன்னாலா ஒரு பில்டப் கொடுக்கனும்னு சொன்னியே கரிக்கிட்டா ஃபாலோப் பண்ணுரனா?)


நான் கல்லூரியில் படிக்கும்(??!) போது நடந்த சம்பவம் அது, அப்போ என்னுடன் சில"வெட்டி"த் தனமான ஆந்திராப் பசங்களும் ஹாஸ்டலில் தங்கியிருந்தனர், பசங்க தான் வெட்டி, ஆனா பொன்னுக எல்லாம் தங்கக் கட்டி,(டி.ஆரேட அரட்டை அரங்கம் பாக்காதேனா கேட்கமாட்டேங்கிறியே சரவணா) பாக்குரதுக்கு அவங்க ஊர் புகழ் திருப்பதி லட்டு கணக்கா இருப்பாங்க,

சரி அவங்ககிட்ட எதாவது கடலை போடுறதுக்காவது வேணுமேனு அவனுககிட்ட பழக்கம் வச்சிகிட்டேன், என்ன ஒரு கஷ்டம் கொரகம் அவனுகளுக்குத் தமிழ் சுட்டுப் போட்டலும் வராது நமக்கு தலகீழா கட்டிவச்சு அடிச்சாலும் இங்கிலிபீசு வராது, இருந்தாலும் தேவைப் படுமேனு அப்படியே தெரிஞ்ச, குட் நைட், குட் மார்னிங், ஐயம் குண்டலகேசி னு என்னத்தயோ வச்சு ஒப்பேத்திகிட்டு இருந்தேன்,

ஒரு விடுமுறை நாளில் KG காம்ளக்சில் பிரசாந்த் மற்றும் "லூசுக் கதாப்பாத்திரம்"புகழ் லைலா மற்றும் நம்ம ஆப்பக் கடை சிம்மு அக்கா நடிச்ச "பார்த்தேன் ரசித்தேன்" படம் பார்த்து விட்டு ஹாஸ்டலுக்கு வந்தேன்.ஹாஸ்டல் கேட் அருகில் ஒரு கடை உள்ளது, அந்தக் கடையில் நம்ம ஆந்திரா லட்டுங்க ஒரு 4 டிக்கெட் இருந்துச்சு, நல்ல வேளை ஆந்திராப் பசங்க இல்லை , சரவணா இங்கயும் பார்த்து ரசிக்கலாம்டா அப்படினு உள்ளே நுழைந்து பந்தாவா ஒரு பூமர் வாங்கி ஸ்டெயிலா அதை வாயில் போட்டு விட்டு அவர்களை தற்செயலாக பார்ப்பது போல் பார்த்து விட்டு ஒரு ஹாய் ஜொள்ளினேன்(ஹி ஹி..), அவங்களும் பதிலுக்கு ஹாய் சொன்னார்கள், ஆகா ஒர்க் அவுட் ஆகுதுடா விட்டுடாதா அப்படியே பிக்கப் பண்ணி குண்டூரு வரைக்கும் போய் கும்மீடலாம்டானு உள் மனசு செல்லும் போதே,அங்கிருந்த STD பூத்த தொரந்துக்கிட்டு ஒரு 3 ஆந்திராப் பக்கிக வந்துட்டாங்க,காலைல இருந்து ஒன்னும் ஆகலையேனு நினைச்சேன் இந்தா வந்துட்டாங்களா இங்கிலீசுக்கார தொரைங்க, பொன்னுக முன்னாடி இன்னைக்கித் தொங்க விட்டுருவாங்களேனு,


மெதுவா அங்கிருந்து எஸ்கேப் ஆகலாம்னு நடக்க ஆரம்பிக்கும் போது ஒரு தடியனின் கை செல்லமா(??!) என் தோள்ள விழுந்துச்சு, மெதுவாத் திரும்பி நாமெல்லாம் யார் வம்பு தும்புக்கும் போறதில்லை அப்படினு ஒரு அப்பாவி முகத்தை வச்சிக்கிட்டு என்ன? னு கேட்டேன், எங்க போய்ட்டு வர்றனு கேட்டானுக(சொன்னா மட்டும் புரிஞ்சிடப் போகுதா),படம் பார்க்கன்னேன், என்ன படம்னு ஆரம்பிச்சாய்ங்க அது தான் பிள்ளையார் சுழி...

மகா ஜனங்களே!!பார்த்தேன் ரசித்தேன் என்கின்ற படத்தின் பெயரை நான் எப்படித்தான் புரிய வைப்பேன், அதுவும் மொழிய வேற பொயர்த்து புரிய வைக்கனும், ஃபிகருங்க வேற பக்கத்துல இருக்குதுங்க என்னடா பன்னுறதுனு யோசிச்சு,

சரி முதலில் பார்த்தேனுக்கு விளக்கலாம்னு saw அப்படினு சொன்னேன் அவனுகளுக்கு புரிஞ்சிடுச்சு, அடுத்து ரசித்தேன் அப்படிங்கிறதை எப்படி சொல்லுரதுனு தெரியலை, ஃபிகருங்க வேற என்னைப் பரிதாபமாப் பாக்குதுங்க,என்னன்னவோ சொன்னேன் , உகூம்...அவனுகளுக்கு ஒன்னும் புரியலை, டேஸ்ட், எஞ்சாய், சைட்- அப்படினு ஏதே என் அறிவுக்கு எட்டாததையும் கஷ்டப் பட்டுச் சொன்னேன், ஆனா முடியலை, நல்ல வேளை லட்டுங்க எல்லாம் ஃபோன் பண்ண பூத்துக்குள்ள போச்சுங்க, அப்பத்தான் தகிரியமே வந்துச்சு அவனுகளைப் பார்த்து "போங்கடா கொல்டிங்களா" அப்படினு சொல்லிட்டு ஓடியாந்துட்டேன், மக்களே நீங்களே சொல்லுங்க அத எப்படித்தான் அவிங்களுக்கு வெளக்குரதுனு?



அன்புடன்...
சரவணன்.

13 பின்னூட்டங்கள்:-:

said...

வெட்டி தம்பி ஓடியா ஓடியா, சரவணன் உள்குத்து வச்சிருக்கார்:-))

said...

அடடே! பார்த்தேன் ரசித்தேனுக்கு இந்தப் பாடா? அப்ப நினைத்தாலே இனிக்கும், குடும்பம் ஒரு கதம்பம், ஒரு வீடு இரு வாசல், ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது, ஒரு ஓடை நதியாகிறது, கிழக்குச் சீமையிலே, தவமாய்த் தவமிருந்து இன்னும் எத்தனையெத்தனையோ படங்கள் இருக்கே...அதுக்கெல்லாம் என்ன செய்வீங்க? ஆனா தமிழ்நாட்டுல இருந்துக்கிட்டு அவங்களுக்கு எதுக்கு பயந்தீங்க? எனக்கு இன்னமும் புரியலை. எதுக்கு கொல்ட்டின்னு சொல்லனும்? அப்ப ஒங்களுக்கு அவங்க கூட ஜாலியாப் பேசத் தெரியலையா? ஐயோ! இவ்வளவு கேள்வி கேக்குறேனே!

said...

//அபி அப்பா said...
வெட்டி தம்பி ஓடியா ஓடியா, சரவணன் உள்குத்து வச்சிருக்கார்:-)) //

ஏங்க இப்படி, அதுபாட்டுக்குள்ள வேலில போகுது அதைப் போய் ஏன் எடுத்து உள்ள விடுறீங்க!:)))))


அன்புடன்...
சரவணன்.

said...

// G.Ragavan said...
அப்ப நினைத்தாலே இனிக்கும், குடும்பம் ஒரு கதம்பம், ஒரு வீடு இரு வாசல், ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது, ஒரு ஓடை நதியாகிறது, கிழக்குச் சீமையிலே, தவமாய்த் தவமிருந்து இன்னும் எத்தனையெத்தனையோ படங்கள் இருக்கே...அதுக்கெல்லாம் என்ன செய்வீங்க? //

ஆத்தாடி! ஒக்காந்து யோசிச்சிருக்கீங்க போல.....

// எனக்கு இன்னமும் புரியலை. எதுக்கு கொல்ட்டின்னு சொல்லனும்? //

ஓவர் டூ வெட்டி கொல்ட்டி!

//அப்ப ஒங்களுக்கு அவங்க கூட ஜாலியாப் பேசத் தெரியலையா? ஐயோ! இவ்வளவு கேள்வி கேக்குறேனே! //

ஆமாங்க ஜி.ரா அதிகமாத் தான் கேட்குறீங்க!:)))

அன்புடன்...
சரவணன்.

said...

neenga cbe la endha colege pa?

Anonymous said...

:) தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி.

http://www.desipundit.com/2007/03/22/parthenrasithen/

said...

// கார்த்திக் பிரபு said...
neenga cbe la endha colege pa? //


கோவை - பொள்ளாச்சி மெயின்ரோடில் இருக்கும் கற்பகம் தானுங்க நாங்க "இருந்த" காலேஜ்,

அன்புடன்...
சரவணன்.

said...

//Dubukku said...
:) தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி.

http://www.desipundit.com/2007/03/22/parthenrasithen
//

எனது பதிவை தேசிபண்டிட்டில் இணைத்தமைக்கு தங்களுக்குத் தான் நான் நன்றி சொல்லனும், நன்றி டுபுக்கு நண்பரே!


அன்புடன்...
சரவணன்.

said...

பொண்ணுங்கள - பொன்னுன்னு சொன்னிங்க பாருங்க அங்கதாங்க இருக்கு உங்க பொன்மனசு. :))

"ஒரு கிளி உறங்குது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா" இந்த பாட்ட பாடிட்டு இருக்கும்போது ஒரு சேட்டன் இதுக்கு என்னன்னு கேட்டு வச்சிட்டான். என்ன சொல்றதுன்னு தெரில love birds like each otherனு ஒரு போடு போட்டு எஸ்கேப் ஆயிட்டேன். :)

said...

ஹாஹாஹா.. சரவணா, கலக்கிட்டப்பா... ;-)

said...

// அபி அப்பா said...
வெட்டி தம்பி ஓடியா ஓடியா, சரவணன் உள்குத்து வச்சிருக்கார்:-)) //

நாராயணா நாராயணா...

said...

Looked (&) Enjoyed

சொல்லி இருக்கலாமோ...

சரி விடு மக்கா, இது எல்லாம் பொது வாழ்க்கையில் சாதாரணம்.

நீ பண்ணிய தப்பு, அந்த கொல்ட்டி பசங்க கிட்ட பழக்கம் வச்சுக்கிட்டது தான். அவங்கிள எப்பவும் ஒரு தூரத்தில் வச்சு மெயிடன் பண்ணனும், நம்மால பாத்தாலே நாலு அடி தள்ளி போற மாதிரி... அப்பால நீ தனிக்காட்டு ராஜா ஜாமைக்கலாம்....

said...

சரி அது போகட்டும், உனக்கு வேலை வச்சு இருக்கேன், நம்ம பதிவுக்கு போய் பாரு... சீக்கிரம் ஆகட்டும்.