மொழி - தயாரிப்பாளர் "நடிகர்" பிரகாஷ்ராஜ், டைரக்டர் ராதாமோகன், " அழகிய தீயே"க்குப் பிறகு இருவரும் இணையும் படம். எனக்குப் பிடித்த சில தமிழ்ப் படங்களில் " அழகிய தீயே" வும் ஒன்று, அதே கூட்டணி ஏமாற்றவில்லை!
"ஜோ" ஒரு வார்த்தை கூட பேசாமல், அவரைப் பற்றி அதிகம் பேச வைக்கும் படம். பிரித்தீவ் ராஜ் மற்றும் பிரகாஷ்ராஜ் இருவரும் திரைப் படத்திற்க்கு இசை அமைக்கும் இசை அமைப்பாளர்கள். அவர்களின் வாழ்வில் இசை பற்றி அறியாத இருவரின் வருகை பற்றிய படம் , அதில் ஒருவரான ஜோ விற்க்கு இசை என்றால் என்ன? அதை எப்படி உணருவது? என்று கூட அறிய முடியாத வாய்போசாத,காது கேட்காத கதாப் பாத்திரம்!
ஜோ வை பார்க்கும் முதல் பார்வையிலேயே பிரித்தீவ் ராஜிற்க்கு தலையின் மேல் பல்பு எரிகின்றது( காதல்). இருவரும் ஒரே அப்பார்ட்ண்ட் என்பதை அறிந்து மகிழ்ந்து அவரின் பெயர் கேட்டு அலைகின்றார். பின் ஜோ- வினால் வாய்பேச காது கேட்க முடியாது என்று தெரிந்ததும் அப்படியே விக்கித்துப் போகின்றார், ஆனால் ஜோ வின் மேலான காதல் முன்பை விட அதிகரிக்கின்றது. பின் ஜோ வின் தோழி ஸ்வர்ணமால்யா வின் மூலம் அவரைப் பற்றிய அனைத்து விசயங்களையும் தெரிந்து கொண்டு அவரின் மேல் பரிவுடன் பழகி, ஜோ வின் "மொழி"யை பிரித்தீவ் ராஜும் கற்று நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் பிரித்தீவ்ராஜ் , ஜோ மீதுள்ள தன் விருப்பதை தெரிவிக்கின்றார், அது பிடிக்காத ஜோ அவரை சந்திப்பதை நிறுத்துகின்றார், இதற்கிடையில் அந்த நால்வர் கூட்டணியில்(ஜோ, ஸ்வர்ணமால்யா, பிரித்தீவ் ராஜ், பிரகாஷ்ராஜ்) இருக்கும் பிரகாஷ் ராஜிற்கும் தலையில் பல்பு எரிகின்றது, விளைவு ஸ்வர்ணமால்யாவுடன் பிரகாஷ்ராஜிற்கு திருமணம் நிச்சயமாகின்றது, அந்த சமயத்தில் தன் மீது பிரித்தீவ் ராஜ் கொண்டுள்ள காதலை உணர்ந்து ஜோ ,பிரிதிவ் ராஜிடமே சேருகின்றார் - முடிவு சுபம்.
ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப் படும் திரைப் படங்கள் மிகவும் அரிது, இந்தப் படம் அந்த அரிதான வரிசையில் சேரும், ஜோ - விற்க்கு கிடைத்த ஒரு அரிய படம்,
இசை என்றால் என்னவென்று, அதை அறியும் முயற்சியில் அதிக ஒலியில் ஸ்பீக்கரின் மேல் கைவைத்து அதன் அதிர்வை ரசிக்கும் போது ஜோ வின் முக பாவம் அருமை,

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோ ஏற்றிருந்த கதாப் பாத்திரம் அவரின் ரசிகர்களுக்கு மகா எரிச்சலையும் , கோவத்தையும் தந்திருந்ததாக பதிவுகளின் வாயிலாக அறிந்திருந்தேன், நிச்சயம் இந்தப் படம் அந்த கோவத்தை மறக்கடித்து அவரின் மேல் பழைய நல்ல மதிப்பை ஏற்படுத்தும், ஒரு நல்ல நடிகையை திருமணத்திற்க்குப் பின் தமிழ் சினிமா இழந்துவிட்டது என கனிமொழி வருத்தப் பட்டது நியாயமே!
பிரித்தீவ் ராஜ், பிரகாஜ் ராஜ் நண்பர்களின் கூட்டணி அருமை சகஜமாக பேசும் போது இழையோடும் நகைச்சுவை ரசிக்க வைக்கின்றது,
பிரித்தீவ் ராஜ், பிரகாஜ் ராஜ் நண்பர்களின் கூட்டணி அருமை சகஜமாக பேசும் போது இழையோடும் நகைச்சுவை ரசிக்க வைக்கின்றது,
பீத்தேவன் பிறந்த நாளுக்கு பீர் அடித்துவிட்டு அபார்ட்மெண்ட் செக்ரட்டரி வீட்டின் முன்னேயே பிரகாஷ்ராஜ் வாந்தி எடுப்பதும்,
பிரி.ராஜ் : வாந்தி வந்தா நம்ம வீட்டு பாத்ரூம்ல எடுக்கவேண்டியது தானே, ஏன் செக்ரட்டரி வீட்டின் முன் எடுத்த?
பிர.ராஜ் : ஐய்யயோ..! அப்போ அது நம்ம வீட்டு பாத்ரூம் இல்லையா? அதானே நம்ம வீட்டு பாத்ரூம்ல செக்ரட்டரிக்கு என்ன வேலைனு கூட தோணுச்சு!!
காதல் வந்தால் தலைக்கு மேல் பல்பு எரிவதும், மணி ஓசை என சில விசயங்கள் அருமை, அதிலும் பிரகாஷ்ராஜ் க்கு மணி அடிப்பது நம்ம பொன்ஸ் அக்காவோட நண்பன்(தனி யானை சுதந்திரம்:))),
"இளைமை புதுமை" ஸ்வர்ணமால்யாவிற்க்கு நல்ல கதாப் பாத்திரம், (யக்கா இப்படியெல்லம் நடிக்கிறதை விட்டுட்டு எப்படி எப்படியோ நடிக்கிறீங்களே! )
பாஸ்கருக்கு நகைச்சுவை கலந்த சோக பாத்திரம், 1975க்கை கூட "சமீபத்தில் 1975" என்று தான் குறிப்பிடுவார், அப்பொழுதெல்லாம் நமக்கு சக பதிவர் திரு. டோண்டு அவர்களின் நினைவு வருவதை தவிர்க்கமுடியாது!
தயாரிப்பளருக்கும் , டைரக்டருக்கும் தைரியம் அதிகம் தான், தமிழ்சினிமா என்றாலே ஆளுயர அரிவாள், சுருக்குக் கத்தி, ரத்தம், தாலி செண்டிமெண்ட் என உருப்படியான(??!) எதுவும் இல்லாமல்,முக்கியமாக காதைகிழிக்கும் குத்துப் பாட்டும், இரட்டை அர்த்த வசனங்களும், ஹீரோ புராணமும் இல்லாத அக்மார்க் தமிழ் படம். ஏனென்றால் இவை இல்லை என்றால் நாம் தான் படம் பர்ப்பதே இல்லையே (உ.தா அன்பே சிவம் , கன்னத்தில் முத்தமிட்டால், இன்னும் "சில" நல்ல படங்கள்!).
குடும்பத்துடன் பார்க்கக் கூடிய நல்ல படம்( கொதஸ் பையனை தகிரியமா அழைச்சிட்டுப் போங்க!) பொதுவாகவே நான் படங்களை விமர்சனம் பண்ணுவதில்லை எல்லாம் அனுபவத்தினால் தான், படம் பார்த்துவிட்டு நண்பர்களிடம் , படம் அருமை என்னா! ஸ்டோரி, என்னா! சாங்ஸ் அப்படீனூ ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்கும் போதே ஒரு குரூப் வரும் , த்தூ படமாடா அது மனுசன் பார்ப்பானா(??!) அதை, என்று கிழித்து தொங்கவிடுவார்கள் படத்தையும் என்னையும், பல முறை தொங்கவிடப்பட்டிருகிறேன்,

பி.கு: எனவே மகாஜனங்களே! இதை விமர்சனமாக மட்டும் எடுத்துக் கொள்ளவும், படம் பார்ப்பதற்க்கான அளவீடாக எடுத்துக் கொண்டு பின் சரியில்லையெனில் கொலைவெறியேடு கெளம்பிடாதீங்க! என் பார்வையில் பார்க்ககூடிய "நல்ல" படம்,
அன்புடன்...
சரவணன்.
25 பின்னூட்டங்கள்:-:
எலேய் வாழ்த்துக்கள் நல்லாத் தாம்லே எழுதுறா.. டெக்னீசியன்களையும் பத்திச் சொல்லியிருக்கலாம்.. பாட்டு எப்படி? சோதிகாவையும் சொர்ணமால்யாவையும் பாத்ததுல்ல மறந்துட்டீயாக்கும்
நிம்மதியா படம் பார்க்கப் போன எடத்துலயும், பொன்ஸு, கொத்ஸுன்னு ஒரே சிம்ம சொப்பனமா போச்சுதாக்கும்?
படம் பற்றி மை பிரண்ட் கூட எழுதி இருந்தாங்க.. அழகிய தீவே எனக்குக் கூட பிடிக்கும். முடிந்தால் மொழி கண்டிப்பாக பார்த்திடுவேன்...
'அழகிய தேயே' என்னுடைய ஃபேவரைட். பிரகாஷுக்காக பார்க்கலாம். 'மொழி' பார்த்துவிட்டு இதை படிக்கிறேன்...(ஹி...ஹி...சுவாரஸ்யம் போய்விடுமாக்கும்).
சரா!
பிரகாஷ்ராஜிம் . ராதா மோகனும்ம் இரண்டாவது படமான பொன்னியின் செல்வனில் இணந்தார்கள். அதுவும் ரசிக்க வைக்கும் கதைதான் என்ன இருந்தாலும் சீரியலுக்கு போட்டி போடுற மாதிரி எடுத்துட்டாங்க அதான் படுத்துகிச்சி. படத்தோட ஹீரோ வசனம் பேசும்போது தூங்கி எந்திரிச்சவன் பேசற மாதிரி பேசறதுதான் எனக்கு படத்து மேல நல்ல அபிப்ராயம் இல்லாம போச்சி.
மொழி பாக்கணும்.
விமர்சனம் நல்லாதாங்க இருக்கு அதுக்கு ஏங்க டிஸ்கி போடறிங்க!
Naanum padaththai paarththEn.. ippadiyoru suththamaana vege padaththai sameebaththil paarththiraatha thirupthi..
Ippadippadda padangkalukku nam support koduththu thayaarippaalarukku laabam koduththaalthan, ithe pOndru nalla padangkaL eppOthum veli vaum. enna sariya saravanan?
Neenggal sonna athE scene (Jo understand music by putting her hand on speaker) was something different and superb.
நீண்ட நாளைக்கு அப்புறம் கேட்க கேட்க சலிக்காதாப் பாடல்கள் இந்த படத்தில் உண்டு. இதைப் பற்றி ஒன்னுமே சொல்லவில்லையே.
//நிம்மதியா படம் பார்க்கப் போன எடத்துலயும், பொன்ஸு, கொத்ஸுன்னு ஒரே சிம்ம சொப்பனமா போச்சுதாக்கும்? //
ரிப்பீட்டேய்
//தேவ் | Dev said...
எலேய் வாழ்த்துக்கள் நல்லாத் தாம்லே எழுதுறா..//
டைரக்டரு நன்றீங்கோ!
//டெக்னீசியன்களையும் பத்திச் சொல்லியிருக்கலாம்.. பாட்டு எப்படி? //
மன்னிக்கவும், அருமையான ரசிக்கக்கூடிய பாடல்கள் தெளிவான ஒளிப்பதிவு!
//சோதிகாவையும் சொர்ணமால்யாவையும் பாத்ததுல்ல மறந்துட்டீயாக்கும் //
ஹீ...ஹீ...
அன்புடன்...
சரவணன்.
//பொன்ஸ் said...
நிம்மதியா படம் பார்க்கப் போன எடத்துலயும், பொன்ஸு, கொத்ஸுன்னு ஒரே சிம்ம சொப்பனமா போச்சுதாக்கும்? //
என்னக்கா பண்னுறது நண்பர்களை மறக்க முடியுமா? சிம்ம சொப்பனம்னு சொல்லுரதைவிட "யானை" சொப்பனம் னு சொல்லலாம்.:)))))))
//படம் பற்றி மை பிரண்ட் கூட எழுதி இருந்தாங்க.. அழகிய தீவே எனக்குக் கூட பிடிக்கும். முடிந்தால் மொழி கண்டிப்பாக பார்த்திடுவேன்...//
மை ஃபிரண்ட்-ன் பதிவை படித்தேன் நல்ல விமர்சனம், உங்களுக்கு அழகான தீவை பிடிக்கலாம் தப்பில்லை ஆனால் அந்தப் படத்தின் பெயர் "அழகிய தீயே" , கண்டிப்பாக மொழி பார்க்கவும்,
அன்புடன்...
சரவணன்.
//சீனு said...
'அழகிய தேயே' என்னுடைய ஃபேவரைட். //
யோவ் எழுத்துப்பிழை எங்கேயா உம்மை இப்பொழுதெல்லாம் காணோம், பாரு அழகிய தீயே அப்படீங்கிற படத்தை ஆளாளுக்கு எப்படி சொல்லு"ராங்"கனு:)))))))
//பிரகாஷுக்காக பார்க்கலாம். 'மொழி' பார்த்துவிட்டு இதை படிக்கிறேன்...(ஹி...ஹி...சுவாரஸ்யம் போய்விடுமாக்கும்). //
சீனு!மொழி பார்த்துவிட்டு கண்டிப்பாக வரவும்!(சுவாரஸ்யத்துடன்..)
அன்புடன்...
சரவணன்.
சரவணன்.
நன்றாக விமர்சனம் செய்துள்ளீர்கள்..
படிக்க சுவாரசியமாக இருந்தது
தம்பி said...
//சரா!
பிரகாஷ்ராஜிம் . ராதா மோகனும்ம் இரண்டாவது படமான பொன்னியின் செல்வனில் இணந்தார்கள். //
தம்பி !நானும் அந்தப் படம் பார்த்தேன்! ஆனால் தயாரிப்பளர் மற்றும் டைரக்டர் பற்றி அறிந்திருக்கவில்லை! தகவலுக்கு நன்றி!
///அதுவும் ரசிக்க வைக்கும் கதைதான் என்ன இருந்தாலும் சீரியலுக்கு போட்டி போடுற மாதிரி எடுத்துட்டாங்க அதான் படுத்துகிச்சி. படத்தோட ஹீரோ வசனம் பேசும்போது தூங்கி எந்திரிச்சவன் பேசற மாதிரி பேசறதுதான் எனக்கு படத்து மேல நல்ல அபிப்ராயம் இல்லாம போச்சி. //
ரிப்பீட்டே...
//மொழி பாக்கணும்.//
கண்டிப்பாக பாருங்கள்...
//விமர்சனம் நல்லாதாங்க இருக்கு அதுக்கு ஏங்க டிஸ்கி போடறிங்க!//
அதான்,அனுபவத்தைச் சொன்னேனே... :))) நன்றி!
அன்புடன்...
சரவணன்.
//.:: மை ஃபிரண்ட் ::. said...
Naanum padaththai paarththEn.. ippadiyoru suththamaana vege padaththai sameebaththil paarththiraatha thirupthi..//
எனக்கும் அதே திருப்தி!
//Ippadippadda padangkalukku nam support koduththu thayaarippaalarukku laabam koduththaalthan, ithe pOndru nalla padangkaL eppOthum veli vaum. enna sariya saravanan?//
சரியாக சொன்னீர்கள் என் நண்பரே! எனக்கு மிகவும் பிடித்த கமலஹாசன் கூட ஒரு நல்ல திரைப்படத்தின் வெற்றிவிழாவில் " இதுபோன்ற நல்ல படங்கள் வெற்றி பெறுவது சந்தோசம் அதே நேரத்தில் சரியில்லாத படங்களை பார்க்காமல் தோல்வியடையச் செய்ய வேண்டும், அப்பொழுது தான் அந்தமாதிரி சமூச சிந்தனையில்லாத படங்களை தாயரிக்க மாட்டார்கள்" என்று கூறியிருந்தார்.
//Neenggal sonna athE scene (Jo understand music by putting her hand on speaker) was something different and superb. //
yes my friend! that was really nice scene!i was enjoy that movie!
அன்புடன்....
சரவணன்.
Anonymous said...
//நீண்ட நாளைக்கு அப்புறம் கேட்க கேட்க சலிக்காதாப் பாடல்கள் இந்த படத்தில் உண்டு. இதைப் பற்றி ஒன்னுமே சொல்லவில்லையே. //
அனானி நண்பரே!
உங்களைப் போன்றே எனக்கும் அந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் பிடித்திருந்தது, பதிவில் குறிப்பிடாமைக்கு மன்னிக்கவும்.அதிலும் வைரமுத்துவின் வரிகளின் ஜோவைப் பற்றிய வர்ணனை பாடல் அருமை,
அன்புடன்...
சரவணன்.
// ILA(a)இளா said...
//ரிப்பீட்டேய் //
என்னா விவ், வெறும் ரிப்பீட் மட்டும் கொடுத்துவிட்டு அப்பீட் ஆய்ட்டீங்க!
அன்புடன்...
சரவணன்.
சிவபாலன் said...
//சரவணன்.
நன்றாக விமர்சனம் செய்துள்ளீர்கள்..
படிக்க சுவாரசியமாக இருந்தது //
சி.பா நான் சொன்னதெல்லம் ரெம்பக் கம்மி, நீங்க படத்தை பாருங்க ரெம்ப சுவாரஸ்யமா இருக்கும்!
அன்புடன்...
சரவணன்.
மொழி விமர்சனத்தை எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன்...உங்களிடம் இருந்தே வந்தது டபுள் மகிழ்ச்சி...!!!
ennappa pora pokkula kannathil muthamittal nala padamnu sollita
செந்தழல் ரவி said...
//மொழி விமர்சனத்தை எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன்...உங்களிடம் இருந்தே வந்தது டபுள் மகிழ்ச்சி...!!! //
நன்றி ப்ளேபாய்...:)
படத்தைப் பாருங்கள் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்...
அன்புடன்...
சரவணன்.
Anonymous said...
//ennappa pora pokkula kannathil muthamittal nala padamnu sollita//
அனானி நண்பரே!
போறபோக்கில் மட்டுமல்ல இருந்த இடத்திலிருந்து கூட சொல்லுவேன் எனக்குப் பிடித்த சில நல்ல திரைப்ப்டங்களின் வரிசையில் கன்னத்தில் முத்தமிட்டாலும் ஒன்று!
அன்புடன்...
சரவணன்.
நண்பரே, உங்கள் விமர்சனம் அருமை. நான் ஒரு முயற்சி செய்துள்ளேன்...
"மொழி - திரைப்பட விமர்சனம்"
நேரம் அணுமதித்தால், படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்..
vaazthukkal nanba. this article featured in poongaa this week. :-)
congrats again...
Joseph Kulandai said...
//நேரம் அணுமதித்தால், படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. //
நிச்சயமாய் ஜோசப்,
படித்து பின்னூட்டமிடுவேன்!
அன்புடன்...
சரவணன்.
.:: மை ஃபிரண்ட் ::. said...
//vaazthukkal nanba. this article featured in poongaa this week. :-)
congrats again... //
ஆச்சர்யம்!!! தான் நான் முதன் முதலாக எழுதிய ஒரு திரைவிமர்சனம் பூங்காவில் வந்தது!
பூங்காவிற்க்கும், இதை எனக்கு சுட்டிக் காட்டிய மைஃபிரண்ட்-டிற்க்கும் நன்றி!
அன்புடன்...
சரவணன்.
மொழி படம் பார்த்தேன்...
தமிழ் சினிமாவில் இருப்பதற்குப் பெருமைப் படுகிறேன்.
Post a Comment