Friday, September 08, 2006

உங்க செல்போனில் ஐஸ் இருக்கா?

வணக்கம் நண்பர்களே!
கடந்த வாரம் ஊருக்குப் போய்விட்டதாலும், பின் வந்த நாட்களில் வேலைப்பளுவின்(??!)காரணமாகவும் என்னால் தொடர்ந்து பதிவிடவும், நல்ல பல பதிவுகளுக்கு பின்னூட்டமிடவும் முடியவில்லை!
நான் வார வாரம் ஆனந்தவிகடன் படிக்கும் பழக்கமுள்ளவன், இந்தப் பதிவு கூட கடந்த வார ஆனந்தவிகடனில் வந்த ஒரு தகவல் தான்.(இதே தகவளுடன் வேறு யாரேனும் பதிவிட்டிருந்தால் உங்களின் கோவத்தையும் கண்டனத்தையும் பின்னூட்டமாக தெரிவிக்கவும்:)))))


தலைப்பைபார்த்து வந்துட்டீங்க உங்களை ஏமாத்த விருப்பமில்லை, இந்த ஐஸையும் பார்த்துக்கோங்க!



ஹேலோ! எங்க கிளம்புறிங்க இனிமேல் தான் விசயமே இருக்கு!,Subject:ice என்று உங்களுக்கு வரும் மெயிலை ஐஸ்வர்யாராயின் விதவிதமான படங்கள் தான் என்று ஜொள்ளியபடி திறந்து பார்த்தால் ஏமாந்து தான் போவீர்கள்,உண்மையில் அது நமது ஆபத்தான நேரங்களில் காப்பாற்றக்கூடிய ஒரு உபயோகமான வழியைக் கூறும் மின்னஞ்சலாம்!


உலகின் அதிகப்படியானவர்களிடத்தில் எப்போதும் இருப்பது செல்போன்கள் தான், விபத்து நேரங்களில்,சுயநினைவின்றி விழுந்துவிட்டால்,தொலைந்துவிட்டால்,அவரைப் பற்றி யாருக்கு தகவல் சொல்லுவது எனக் குழம்பும் நல்லவர்களுக்கு(??!) ஆபத்பாந்தவனாகக் கை கொடுப்பதும் அதே செல்போன் தான், ஆனால் செல்போனை எடுத்துப் பார்த்தால், அதில் நூற்றுக்கணக்கான நம்பர்கள் பதிந்துவைக்கப்பட்டிருக்கும் அவர்களில் யார் இந்த நபருக்கு மிகவும் வேண்டியவர் என்று எப்படிக் கண்டுபிடிப்பதும் கடினமே!

அனைவரும் சுலபத்தில் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு பொதுப் பெயரில் முக்கிய நம்பர்களைப் பதியலாம் என்று ஒரு ஆலோசனையை லண்டனில் உள்ள ஒரு பாராமெடிக்கலிஸ்ட் வழங்கினார், யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டு "தி ஈஸ்ட் ஏஞ்சலிகன் ஆம்புலன்ஸ் சர்வீஸ்" நிறுவனம் "In Case of Emergengy"என்பதைச் சுறுக்கி "ice" என்று பெயர் வைத்தது.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று தான், உங்களின் ஆபத்து நேரங்களில் யாரைத் தொடர்புகொள்ள வேண்டுமோ அவர்களின் தொலைபேசி எண்ணை ice என்று குறிப்பிட்டு செல்போனில் பதிவுசெய்யுங்கள்.ஒன்றுக்கு மேற்பட்ட எண்கள் இருந்தால் ice1,ice2,ice3 என வரிசையாகப் பதியலாம்,

நான் உடனே எனது தந்தையின் செல் , எனது வீட்டு எண், மற்றும் எனக்கு மிகவும் வேண்டப்பட்ட நண்பர்களின் எண்களை ice-ல் வரிசைப்படுத்தினேன்.வெளிநாடுகளில் இது வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதாகவும்,மிகவும் பயன் தருகிறதென்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ளது, வெளிநாட்டுவாழ் பதிவர்களுக்கே வெளிச்சம், இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாமும் பயன்படுத்தலாமே!


அன்புடன்...
சரவணன்

20 பின்னூட்டங்கள்:-:

நாமக்கல் சிபி said...

நல்ல தகவல்.

யாரும் இதை பற்றி பதிவிடவில்லை என்றே நினைக்கிறேன்

மிக்க நன்றி

கைப்புள்ள said...

சரவணா,
வெல்கம் பேக். நல்ல பயனுள்ள தகவல். ஐஸ் படமும் நல்லா இருந்துச்சு.
:)

Thirumozhian said...

சரவணன் அவர்களே,

உங்களது இந்தப் பயனுள்ள செய்தி தமிழ்மண வலைப்பதிவாளர்களுக்குப் பயன்படப் போவது உறுதி.

ஆனால் இந்த செய்தியைத் தாங்கி வரும் மின்னஞ்சல்களில் முக்கியமான ஒரு விஷயம் இல்லை.

அதாவது உங்கள் செல்லிடப்பேசியில் (அதாங்க கைத்தொலைபேசி) ஏதாவது செக்யூரிடி கோட் செட் பண்ணியிருந்தால் இந்த ஐடியா வொர்க் அவுட் ஆகாது. எமர்ஜென்சியில எங்கே இருந்து உங்க ரகசிய குறியீட்டு எண்ணைக் கண்டுபுடிக்கிறது. அதனால இந்த ICE நம்பரப் பதிவு செய்யிறவங்க செக்க்யூரிடி லாக்க எடுத்து விட்ருங்க.

திருமொழியான்.

உங்கள் நண்பன்(சரா) said...

வெட்டிப்பயல் said...

//யாரும் இதை பற்றி பதிவிடவில்லை என்றே நினைக்கிறேன்//

நானும் அப்படியே நினைக்கின்றேன் நண்பரே,பின்னூட்டியதற்க்கு நன்றி!


அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன்(சரா) said...

கைப்புள்ள said...
//சரவணா,
வெல்கம் பேக். //

இருக்கட்டும் , அவ்வள்வு சீக்கிரத்தில்
உ(ன்னை)ங்களையெல்லாம் விட்டுட்டு போய்டுவோமே என்ன! வரவேற்றமைக்கு நன்றி மோகன்,

// ஐஸ் படமும் நல்லா இருந்துச்சு.
:) //

இருக்கும்ல தல!

அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன்(சரா) said...

Thirumozhian said...
//உங்களது இந்தப் பயனுள்ள செய்தி தமிழ்மண வலைப்பதிவாளர்களுக்குப் பயன்படப் போவது உறுதி. //

இந்தப் பதிவு நண்பர்களுக்குப் பயன்படும் என்பது எனக்கு மகிழ்ச்சி நண்பரே,

//அதாவது உங்கள் செல்லிடப்பேசியில் (அதாங்க கைத்தொலைபேசி) ஏதாவது செக்யூரிடி கோட் செட் பண்ணியிருந்தால் இந்த ஐடியா வொர்க் அவுட் ஆகாது. எமர்ஜென்சியில எங்கே இருந்து உங்க ரகசிய குறியீட்டு எண்ணைக் கண்டுபுடிக்கிறது. அதனால இந்த ICE நம்பரப் பதிவு செய்யிறவங்க செக்க்யூரிடி லாக்க எடுத்து விட்ருங்க.//

மிகவும் முக்கியமான ஒரு நல்ல தகவல் நன்றி திரு.திருமொழியான் அவர்களே!


அன்புடன்...
சரவணன்.

Sivabalan said...

தகவலுக்கு நன்றி.

கப்பி | Kappi said...

வந்துட்டியா நண்பா...
நல்லாவா பின்னால

வரும்போதே மெசெஜோட எண்டிரியா?? :)

ALIF AHAMED said...

ஐஸ் சூம் சூப்பர்...::))))

ALIF AHAMED said...

/./
செக்யூரிடி கோட் செட் பண்ணியிருந்தால் இந்த ஐடியா வொர்க் அவுட் ஆகாது. எமர்ஜென்சியில எங்கே இருந்து உங்க ரகசிய குறியீட்டு எண்ணைக் கண்டுபுடிக்கிறது. அதனால இந்த ICE நம்பரப் பதிவு செய்யிறவங்க செக்க்யூரிடி லாக்க எடுத்து விட்ருங்க.//
/./

செக்க்யூரிடி லாக்க
எடுத்துட்டா...
எடுத்துட்டா...

வீட்டுல டங்குவாரு அந்துரூம்....::))

ALIF AHAMED said...

வந்ததும் செல்போனை பத்தி எழுதிட்ட

ம்

விதி யாரை விட்டது..

ஊருல எடுத்த போட்டோவை எல்லாம் வருசையா (தல மாதிரி?)போடுங்க..!!

ALIF AHAMED said...

/./
கைப்புள்ள said...
சரவணா,
வெல்கம் பேக்.
/./

ஆமா சரவணன் கொண்டு வந்தது வெல்கம் கம்பெனி பேக்குனு உனக்கு எப்படி தெரியும்..??

::)))

கோவி.கண்ணன் [GK] said...

சரா...!
மிகவும் பயனுள்ள தகவல் ...!
ICE - என்னோட செல்பேசியிலும் போட்டுவிடுகிறேன்....!

நன்றி !

Anonymous said...

Saravanan ... Good info .. Thanks

Unknown said...

இது யாருக்கு வச்ச ஐஸ் :))

ரவி said...

good Post and very useful information...

Unknown said...

வா சரா. நல்ல ஜில்லுன்னு மேட்டரோட வந்து இருக்க.. பயனுள்ளத் தகவல். இந்தத் தகவலில் நல்லதும் உள்ளது அல்லதும் உள்ளது.

கடல்கணேசன் said...
This comment has been removed by a blog administrator.
கடல்கணேசன் said...

வணக்கம் சரவணன்.
நான் என்னுடைய பதிவில் உங்கள் கட்டுரைக்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன்.. அந்த பதிவு 'கதையல்ல.. நிஜம்' என்ற தலைப்பில் http://kadalganesan.blogspot.com/ எனது பதிவில் உள்ளது.. (இதற்குமுன் கொடுத்த இணைப்பு இயங்கவில்லை. அதனால் மீண்டும் எழுதியுள்ளேன்)

ரவி said...

ஹி ஹி நல்ல படம் :)))