Friday, September 08, 2006

உங்க செல்போனில் ஐஸ் இருக்கா?

வணக்கம் நண்பர்களே!
கடந்த வாரம் ஊருக்குப் போய்விட்டதாலும், பின் வந்த நாட்களில் வேலைப்பளுவின்(??!)காரணமாகவும் என்னால் தொடர்ந்து பதிவிடவும், நல்ல பல பதிவுகளுக்கு பின்னூட்டமிடவும் முடியவில்லை!
நான் வார வாரம் ஆனந்தவிகடன் படிக்கும் பழக்கமுள்ளவன், இந்தப் பதிவு கூட கடந்த வார ஆனந்தவிகடனில் வந்த ஒரு தகவல் தான்.(இதே தகவளுடன் வேறு யாரேனும் பதிவிட்டிருந்தால் உங்களின் கோவத்தையும் கண்டனத்தையும் பின்னூட்டமாக தெரிவிக்கவும்:)))))


தலைப்பைபார்த்து வந்துட்டீங்க உங்களை ஏமாத்த விருப்பமில்லை, இந்த ஐஸையும் பார்த்துக்கோங்க!



ஹேலோ! எங்க கிளம்புறிங்க இனிமேல் தான் விசயமே இருக்கு!,Subject:ice என்று உங்களுக்கு வரும் மெயிலை ஐஸ்வர்யாராயின் விதவிதமான படங்கள் தான் என்று ஜொள்ளியபடி திறந்து பார்த்தால் ஏமாந்து தான் போவீர்கள்,உண்மையில் அது நமது ஆபத்தான நேரங்களில் காப்பாற்றக்கூடிய ஒரு உபயோகமான வழியைக் கூறும் மின்னஞ்சலாம்!


உலகின் அதிகப்படியானவர்களிடத்தில் எப்போதும் இருப்பது செல்போன்கள் தான், விபத்து நேரங்களில்,சுயநினைவின்றி விழுந்துவிட்டால்,தொலைந்துவிட்டால்,அவரைப் பற்றி யாருக்கு தகவல் சொல்லுவது எனக் குழம்பும் நல்லவர்களுக்கு(??!) ஆபத்பாந்தவனாகக் கை கொடுப்பதும் அதே செல்போன் தான், ஆனால் செல்போனை எடுத்துப் பார்த்தால், அதில் நூற்றுக்கணக்கான நம்பர்கள் பதிந்துவைக்கப்பட்டிருக்கும் அவர்களில் யார் இந்த நபருக்கு மிகவும் வேண்டியவர் என்று எப்படிக் கண்டுபிடிப்பதும் கடினமே!

அனைவரும் சுலபத்தில் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு பொதுப் பெயரில் முக்கிய நம்பர்களைப் பதியலாம் என்று ஒரு ஆலோசனையை லண்டனில் உள்ள ஒரு பாராமெடிக்கலிஸ்ட் வழங்கினார், யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டு "தி ஈஸ்ட் ஏஞ்சலிகன் ஆம்புலன்ஸ் சர்வீஸ்" நிறுவனம் "In Case of Emergengy"என்பதைச் சுறுக்கி "ice" என்று பெயர் வைத்தது.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று தான், உங்களின் ஆபத்து நேரங்களில் யாரைத் தொடர்புகொள்ள வேண்டுமோ அவர்களின் தொலைபேசி எண்ணை ice என்று குறிப்பிட்டு செல்போனில் பதிவுசெய்யுங்கள்.ஒன்றுக்கு மேற்பட்ட எண்கள் இருந்தால் ice1,ice2,ice3 என வரிசையாகப் பதியலாம்,

நான் உடனே எனது தந்தையின் செல் , எனது வீட்டு எண், மற்றும் எனக்கு மிகவும் வேண்டப்பட்ட நண்பர்களின் எண்களை ice-ல் வரிசைப்படுத்தினேன்.வெளிநாடுகளில் இது வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதாகவும்,மிகவும் பயன் தருகிறதென்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ளது, வெளிநாட்டுவாழ் பதிவர்களுக்கே வெளிச்சம், இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாமும் பயன்படுத்தலாமே!


அன்புடன்...
சரவணன்